என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசாரின் அதிரடி வேட்டையில் திருச்சியில் 25 பேர் கைது
    X

    போலீசாரின் அதிரடி வேட்டையில் திருச்சியில் 25 பேர் கைது

    • திருச்சி போலீசாரின் அதிரடி வேட்டையில் கஞ்சா, லாட்டரி, சூதாட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • ஒரே நாளில் 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    திருச்சி,

    திருச்சி மாநகரில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து அந்தந்த போலீஸ் சரகங்களில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இந்நிலையில் ஸ்ரீரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட் ,பாலக்கரை. உறையூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்றதாக 7 பேர் கைது கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சி உறையூர் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக உறையூரைச் சேர்ந்த ஜெகதீசன் கைது செய்யப்பட்டார்.அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் ஏர்போர்ட், எடமலைப்பட்டி புதூர், கோட்டை, தில்லை நகர், உறையூர் ஆகிய பகுதிகளில் சூதாட்டம் நடந்ததாக போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர் .இந்த வேட்டையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தத்தில் திருச்சி மாநகரில் நடந்த அதிரடி வேட்டையில் ஒரே நாளில் கஞ்சா, சூதாட்ட வழக்கில் மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×