என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது
- ஸ்ரீரங்கத்தில் வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்
- அவரிடம் இருந்து திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
திருச்சி,
ஸ்ரீரங்கம் வடக்கு தெரு ரயில்வே பி கிளாஸ் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி லீலாவதி ( 36). இவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இவரது கணவர் சங்கர் ஓய்வு அறைக்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில் வீட்டிற்குள் புகுந்த ஒரு வாலிபர் செல்போன் மற்றும் ஹோம் தியேட்டர் பொருட்களை திருடி சென்றார். இதுகுறித்து லீலாவதி ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி வழக்கு பதிவு செய்து ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 19) என்ற வாலிபரை கைது செய்தார். அவரிடம் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






