என் மலர்
உள்ளூர் செய்திகள்

டாக்டரை தாக்கி கார் கண்ணாடி உடைப்பு
- திருச்சி அருகே டாக்டரை தாக்கி கார் கண்ணாடி உடைக்கப்பட்டது
- டாக்டரை தாக்கிய தாய்-மகனுக்கு போலீஸ் வலைவீச்ச
திருச்சி,
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மேல அம்பிகாபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜவகர்பாபு (வயது 33). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.வழக்கம் போல் பணி முடிந்த உடன் தனது காரில் திருச்சி- தஞ்சை தேசிய ெ நடுஞ்சாலையில் அரியமங்கலம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். பின்னால் இருசக்கர வாகனத்தில் த னது தாயுடன் வந்த வாலிபர் கார் மீது மோதியுள்ளார். இதனால் காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி கீழே இறங்கினார் ஜவகர்பாபு,அப்போது அந்த வாலிபரும், அவரது தாயும் சேர்ந்து ஜவகர்பாபுவை தாக்கி கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து சென்றுவிட்டனர்.இதில் காயம் அடைந்த ஜவகர்பாபும் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டரை தாக்கி, கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய வாலிபரையும் அவரது தாயையும் தேடி வருகின்றனர்.






