என் மலர்
உள்ளூர் செய்திகள்

உறையூர் சோழராஜபுரத்தில் மேயர் ஆய்வு
- திருச்சி உறையூர் சோழராஜபுரத்தில் மேயர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்
- பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை அவர் பார்வையிட்டார்
திருச்சி,
திருச்சி மாநகராட்சி உறையூர் சோழராஜபுரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்களின் புகாரின் பேரில் மேயர் அன்பழகன், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, உதவி ஆணையர் சதீஷ்குமார். மாமன்ற உறுப்பினர் விஜயா ஜெயராஜ், மற்றும் சுகாதார அலுவலர் இளங்கோவன், இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோருடன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பாதாள சாக்கடை பணி நடைபெற்ற இடத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் கலங்கலாக வருவதை கண்டறிந்து அதனை உடனடியாக சரி செய்யப்பட்டு குடிநீர் அப்பகுதிக்கு நல்ல முறையில் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து , மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள் , ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் சோழராஜபுரம் , சாலைரோடு , பாக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு இப்பகுதிகளில் வரும் குடிநீரின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது . அப்பகுதி பொதுமக்கள் மேயரிடம் குடிநீர் கலங்களாக வருவதாக தெரிவித்து இதனால் எங்களின் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தார்கள். உடனடியாக மாநகராட்சி நகர் நல அலுவலர் மணிவண்ணன் தலைமையில் சோழராஜபுரத்தில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டு , மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட முகாம் , ஆய்வுகளில் மஞ்சள் காமாலை உள்ளவர்கள் இல்லை . பின்னர் மருத்துவக் குழுக்கள் வீடு வீடாக சென்று வீட்டில் யாருக்கேனும் காய்ச்சல் இருக்கிறதா இல்லை வேறு ஏதும் தொந்தரவுகள் இருக்கிறதா என்று கேட்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்தார்கள். இளநிலை பொறியாளர் கொண்ட குழு தினந்தோறும் அப்பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து குடிநீரை நல்ல முறையில் வழங்க அவர்களுக்கு மேயர் அன்பழகனால் அறிவுரை வழங்கப்பட்டது.






