என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
    X

    சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

    • திருவளர்ச்சிபட்டியில் நாளை சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெறுகிறது
    • கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்கு நடைபெறும் என்று திருச்சி கலெக்டர் அறிவிப்பு

    திருச்சி,

    திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பூத் துறை பால்வளம் மற்றும்தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 23-ந்தேதி(நாளை) காலை 8.00 மணி முதல்திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், திருவளர்ச்சிப்பட்டி கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இம்முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படுவதோடு, செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை உள்ளிட்ட பல மருத்துவ சோதனை, மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது.மேலும் கிடேரி கன்று பேரணி நடத்தப்பட்டு சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்கு நடத்தப்படும்.கறவை பசுக்களின் மலட்டுத் தன்மைக்கு ஸ்கேன் கருவி மூலம் நோயின் தன்மையை கண்டறிந்துசிறப்பு சிகிச்சையளிக்கப்படும். மேற்கண்ட பணிகள் அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படும். எனவே சுற்றுப்பூற கிராம மக்கள் தங்கள் கால்நடைகளை சிறப்பு முகாமிற்கு அழைத்து வந்து பயன் பெற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×