search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
    X

    திருச்சியில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்

    • நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திருச்சியில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • திருச்சி ஜங்ஷன் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்தில் ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்பு

    திருச்சி,

    திருச்சி மத்திய, வடக்கு, தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணிகளின் சார்பில் நீட் தேர்வினை ரத்துசெய்ய மறுக்கும் ஒன்றிய அரசையும், மாநில கவர்னரை கண்டித்தும் மாபெரும் உண்ணாவிரத போரட்டம் இன்று காலை 9 மணிக்கு திருச்சி ரெயில்வே ஜங்ஷன் எதிரில் காதிகிராப்ட் அலுவலகம் அருகில் தொடங்கியது. உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடக்கிறது. உண்ணா விரதத்தை மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மேற்கு மாநகர செயலாளர் அன்பழகன், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் ஆகியோர்தொடங்கி வைத்தனர்.மாநிலங்களவை உறுப்பினர் குழு தலைவர் திருச்சி சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்இதில் எம்.எல்.ஏக்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், கதிரவன், சேர்மன் துரைராஜ், அவைத்தலைவர் அம்பிகாபதி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ஆனந்த் , மருத்துவர் அணி அமைப்பாளர் கண்ணன், டோல்கேட் சுப்பிரமணி, ஒன்றியச் செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, கதிர்வேல், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், நாகராஜன், இளங்கோ, பி.ஆர்.சிங்காரம், கவுன்சிலர்கள் முத்து செல்வம், கலைச் செல்வி ஜெகநாதன், ராமதாஸ், புஷ்பராஜ் மஞ்சுளாதேவி பி.ஆர்.பால சுப்பிரமணியன், கலைச்செல்வி கருப்பையா, துபேல் அஹமது, மூவேந்திரன், பந்தல் ராமு, கலந்தர் பஷீர், மகளிர் அணி தொண்டரணி அமைப்பாளர் மதனா,தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் குமார், மாணவரணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ், மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் என்.சுரேஷ் பாபு, மாநகர இளைஞரணி அமைப்பாளர் - மு.ர.முத்து தீபக், மாநகர மாணவரணி அமைப்பாளர் - ஏ.எம். அசாருதீன் மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக, இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×