என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் பணம் திருட்டு
- கொள்ளிடம் அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் பணம் திருட்டு
- பீரோவில் வைத்திருந்த ரூ. 30,000 பணம் திருட்டு
திருச்சி,
திருச்சி கொள்ளிடம் அருகே உள்ள திருமலை நகர் என் டி ஆர் ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 33) இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு பிரபல டயர் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.இரு தினங்களுக்கு முன்பு அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கிருஷ்ணகிரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் வீட்டில் தனியாக இருந்த சபரிநாதன் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்த போதுபீரோவில் வைத்திருந்த ரூ. 30,000 பணம் திருட்டுப் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் இது பற்றி சபரிநாதன் கொள்ளிடம் போலீஸ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






