என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவானைக்காவலில் பெண் தற்கொலை
    X

    திருவானைக்காவலில் பெண் தற்கொலை

    • கணவருடன் சமரசம் செய்து சேர்த்து வைக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    தஞ்சை மாவட்டம் திருவையாறு நடுக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் .இவரது மனைவி (வயது 54). இவர்களது மகள் புவனேஸ்வரி( வயது 27). இவருக்கும் திருவானைக்காவல் நடுக்கொ ண்டயம்பேட்டையைச் சேர்ந்த செல்வநாதன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது .இதில் புவனேஸ்வரி திருவையாறில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் .உடனே பெற்றோர் சமரசம் செய்து புவனேஸ்வரியை திருவானைக்காவல் நடு கொண்டயம்பேட்டையில் உள்ள கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் .இந்நிலையில் புவனேஸ்வரி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×