search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிக மாணவர்களை சேர்க்கும் தன்னார்வலர்களுக்கு பரிசு
    X

    அதிக மாணவர்களை சேர்க்கும் தன்னார்வலர்களுக்கு பரிசு

    • புள்ளம்பாடி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் அதிக மாணவர்களை சேர்க்கும் தன்னார்வலர்களுக்கு பரிசு
    • கலெக்டர் பிரதீப்குமார் கலந்து கொண்டு பேசினார்

    டால்மியாபுரம்

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் பிரதீப்குமார் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது இந்த தொழில் பயிற்சி நிலையத்தில் கல்வி பயிலும் பயிற்றுநர்களுக்கு கட்டணம் இல்லாமல் பயிற்சி உடன் மாதம் ரூ 750 உதவித்தொகை ,விலையில்லா மிதிவண்டி, சீருடைகள்,காலணிகள், வரைபட கருவிகள்,பாட புத்தகங்கள், புதுமைப்பெண் உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்விற்கு வருகை தந்துள்ள பெற்றோர்கள் தங்களின் மூத்த அல்லது இளைய சகோதரிகள், உறவினர்கள் மற்றும் மகளின் தோழியர்கள் பயிற்சி மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும் ,தொழிற்பயிற்சி மையத்தில் அதிக பயிற்றுநர்களை சேர்ப்பவர்களுக்கு நானே சிறந்த தன்னார்வலர் விருது மற்றும் ரொக்க தொகை ரூ10 ஆயிரம் பரிசு வழங்கி கௌரவப்படுத்துவேன் என கூறி,தொழிற்பயிற்சி நிலையத்தின் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    விழாவில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், லால்குடி ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் ,தாசில்தார் விக்னேஷ்

    முகாமில் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன்,ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் பாஸ்கரன் புள்ளம்பாடி சேர்மன் ரஷ்யா கோல்டன் ராஜேந்திரன் பேரூராட்சி தலைவர் ஆலிஸ் செல்வராணி செயல் அலுவலர் உள்ளிட்ட தொழிற்பயிற்சி அலுவலர்கள்,மருத்துவ குழுவினர்,தொழிற் பயிற்சி நிலைய பயிற்றுநர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக தொழில் பயிற்சி நிலைய முதல்வர் குப்புராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் தொழிற் பயிற்சி நிலைய பணியமர்த்தும் அலுவலர் கேசவன் நன்றி கூறினார்.

    Next Story
    ×