என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கதவில் முட்டியதில் இரண்டு வயது குழந்தைசாவு
    X

    கதவில் முட்டியதில் இரண்டு வயது குழந்தைசாவு

    • திருச்சி அரியமங்கலத்தில் கதவில் முட்டியதில் இரண்டு வயது குழந்தைசாவு
    • அரியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்சி,

    திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் சிராஜ்தீன். இவரது மனைவி ஆயிஷா சித்திக்கா (வயது 20). இவர்களது இரண்டு மாத குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டு கதவில் தலை மோதியது. இதில் காயமடைந்த குழந்தையை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து அரியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×