தந்தை- மகனுக்கு அரிவாள் வெட்டு

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் தந்தை- மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது ரவுடி உள்பட தப்பி ஓடிய 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
தந்தை- மகனுக்கு அரிவாள் வெட்டு
Published on

திருச்சி,

திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற முத்துவீரன் (வயது 51). புரோட்டா மாஸ்டர் . இவர் திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரத்தை சேர்ந்த மதன் குமார் என்பவரின் மனைவியிடம் பணம் வாங்கியுள்ளார். அதற்கு வட்டியும் கொடுத்துள்ளார். இந்நிலையில் வட்டி கூடுதலாக கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில், மதன்குமார் இரண்டு பேருடன் சேர்ந்து புரோட்டா மாஸ்டர் முத்துவீரன் மற்றும் அவரது மகன் சக்திவேல் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஒடிவிட்டார் . இது குறித்து முத்துவீரன் கொடுத்த புகாரி அடிப்படையில் பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் வழக்கு பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர். இதில் மதன்குமார் பிரபல ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com