என் மலர்
தஞ்சாவூர்
- மகாலட்சுமி அம்மனுக்கு ஐந்து தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
- மகாலட்சுமி அம்மனுக்கு இனிப்பு மற்றும் உப்பு சமர்ப்பித்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கீழராஜவீதி யில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்து ள்ளது. இக்கோவி ல் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்ப ட்டது. தஞ்சாவூரில் இத்தல த்தில் மட்டுமே பெருந்தேவி என்கிற மகாலட்சுமி அம்மனு க்கு தனி விமானத்துடன் கூடிய சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு மாதந்தோறும் புனர்பூசம் நட்சத்திரம், உத்திரம் நட்சத்திரம், பஞ்சமி, அஷ்டமி திதி மற்றும் செவ்வாய், வெள்ளி ,ஞாயிறு கிழமை மகாலட்சுமி அம்மனுக்கு ஐந்து தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல ஐஸ்வர்ய ங்களும் கிட்டும் என்பது ஐதீகம். மகாலட்சுமி உப்பில் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே இக்கோவி லில் பக்தர்கள் மகாலட்சுமி அம்மனுக்கு இனிப்பு மற்றும் உப்பு சமர்ப்பித்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவி லில் நேற்று ஐப்பசி மாத புனர்பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு பெருந்தேவி என்கிற மகாலட்சுமி அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பி க்கப்பட்டது .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தா ர்கள். இந்த வழிப்பாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே , உதவி ஆணையர் கவிதா ,கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தார்கள்.
- சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது.
- நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் ஏற்றப்பட்டன.
தஞ்சாவூர்:
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அங்கேயே அடுக்கி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு தஞ்சை, பிள்ளையார்பட்டி, புனல்குளம், அம்மன்பேட்டை ஆகிய இடங்களி ல் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.
இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்ப ப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொது வினியோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலை களுக்கும் அனுப்பப்படும்.
இந்தநிலையில் இன்று சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது. பின்னர் இந்த லாரிகள் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் ஏற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து தலா 1,000 டன் நெல் வீதம் அரவைக்காக திருநெல்வேலி , திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- பள்ளி மாணவர்கள் விமானத்தை நேரில் பார்க்க வேண்டும் என ஆசிரியைகளிடம் தெரிவித்துள்ளனர்.
- நாட்டுப்புற கலைகள், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு அறிவுசார் ஓவியங்களும் தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சியில் அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 130 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியையாக சித்ரா மற்றும் ஆசிரியைகளாக சிவசங்கரி, லதா, ரேவதி ஆகிய 4 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் தஞ்சை, பிள்ளையார்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
விமானம்
இந்த நிலையில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் விமானத்தை நேரில் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தை ஆசிரியைகளிடம் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் செய்தனர். ஆனால் அவர்களுக்கு விமானத்தை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை.
இதனால் மாணவர்கள் ஏமாற்றம் அடைய கூடாது என முடிவெடுத்த தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தனர்.
இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், பள்ளி கல்வித்துறை, பள்ளி மேலாண்மை குழு, மாணவர்களின் பெற்றோர் என அனைத்து தரப்பினரும் உறுதுணையாக இருந்தனர். மேலும் முன்னாள் முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமார் மற்றும் உட்கட்டமைப்புக்கு அரசு சார்பில் நிதி அளிக்கபட்டது. தற்போதைய முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் பள்ளியின் வளர்ச்சிக்கு பக்க பலமாக உள்ளார். இதையடுத்து பள்ளி சுவரில் விமானம், ரெயில், கப்பல், ஆம்னி பஸ் போன்றவற்றின் வரைப்படத்தை ஓவியர் நரசிம்மன் மூலம் தத்ரூபமாக வரைய செய்தனர். இதேப்போல் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோள்கள், பாரம்பரிய விளையாட்டுக்கள், தண்ணீர் சேமிப்பு, நாட்டுப்புற கலைகள், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு அறிவுசார் ஓவியங்களும் தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளன.
ஆசிரியைகளின் இந்த அசத்தல் செயலால் மாணவ-மாணவிகள் சுவரில் வரையப்பட்டுள்ள விமானம், ரெயில், கப்பல் போன்றவற்றில் ஏறுவது போல பள்ளி உள்ளே செல்கிறார்கள். பின்னர் அவற்றில் இருந்து இறங்குவது போல பள்ளியில் இருந்து வெளியே செல்கின்றனர். இதேப்போல் செயற்கை க்கோள், விவசாயம் உள்பட பல்வேறு ஓவியங்களை பார்த்து அவற்றின் முக்கியத்துவத்தை உணர்கின்றனர்.
இது தவிர மகாத்மா காந்தி, அம்பேத்கர் உள்பட பல்வேறு தேச தலைவர்களின் ஒவியம், அவர்கள் போதித்த வாசகம் ஆகியவையும் வரையப்பட்டுள்ளதால் மாணவர்களின் தேசப்பக்தி வளர்ச்சி அடைகிறது. மேலும் பள்ளி முகப்பு தோற்றத்தில் மகிழ்ச்சியான பிரபஞ்சத்திற்கு வரவேற்கிறோம் என்றும், ஒவ்வொரு வகுப்பறைக்கும் மகிழ்ச்சி வகுப்பறை, நம்பிக்கை, தேனீக்கள், நேர்மை வகுப்பறை என ஓவியமாக எழுதி பெயரும் சூட்டப்பட்டுள்ளது. தனியார் பள்ளியை மிஞ்சியது
இந்த தத்ரூப ஓவியம் மூலம் படிப்போடு பொது அறிவையும் மாணவர்கள் வளர்த்து கொள்கின்றனர். ஆசிரியர்களின் இந்த செயலால் பிள்ளையார்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியானது தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் உள்ளது என்றால் அது மிகையல்ல. மேலும் மாணவர்களின் விருப்பத்தை விதியாசமான முறையில் தத்ரூபமான ஓவியங்களால் நிறைவேற்றிய தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.
- புல் வளர்ப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
- முகாமில் கிடோரி கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு சிறந்த கலப்பின கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், அக்கரைவட்டம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் நோயுற்ற கால்நடைகளுக்கு மருத்துவம் சினை பெறாத கால்நடைகளுக்கு மலடு நீக்கி சிகிச்சை, பருவத்தில் உள்ள பசு எருமைகளுக்கு இலவசமாக செயற்கை முறை கருவூட்டல், ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு குடல் புழு நீக்கம், மேலும் உற்பத்தி திறன் அதிகரிக்க கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கம், தஞ்சாவூர் கால்நடை பெரும்பாக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி திட்டத்தினால் புல் வளர்ப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் முகாமில் கிடோரி கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு சிறந்த கலப்பின கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இம் மருத்துவ முகாமி ல்கால்நடை ஆய்வாளர் செல்வேந்திரன், கால்நடை மருத்துவர்கள் கலியபெ ருமாள், தினேஷ்குமார், ஆகியோர் கொண்ட குழுவினர் ஆலோசனை வழங்கினர் மேலும் கால்நடை மருத்துவ முகாமி ல் காண ஏற்பா டுகளை அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணை யன் சிறப்பாக செய்திருந்தார். முகாமில் அக்கரைவட்டம் கிராமம் அதனை சுற்றியுள்ள கிராம சேர்ந்தவர்கள் தனது கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்றனர்.
- கடையின் வெளியே வாளிகளில் மணல், தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.
- கடைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.
பேராவூரணி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த கடைகளுக்கு தற்காலிக மற்றும் நிரந்தர உரிமம் வழங்கப்படுகிறது. நிகழாண்டு பட்டாசு தொழிற்சாலைகளில் சில இடங்களில் வெடிவிபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.
எனவே, பட்டாசு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.
இதனால் பெரும்பாலான கடை களுக்கு இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பேராவூரணி பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்ய உரிமத்திற்கு விண்ணப்பித்திருந்த கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது வாளிகளில் மணல், தண்ணீர் வைத்திருக்க வேண்டும். தீ தடுப்பு கருவி இருக்க வேண்டும். மின் இணைப்புகள் பழுதின்றி இருக்க வேண்டும். கடைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும், அவசர கால வழி கண்டிப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது பேராவூரணி வட்டாட்சியர் ஆர். தெய்வானை, வருவாய் ஆய்வாளர்கள் ஜெயதுரை, முருகேசன், சிறப்பு வருவாய் ஆய்வாளர் கமலநாதன், கிராம நிர்வாக அலுவலர் சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- 57 பூத்துகளில் 18 வயது நிறைவடைந்த மாணவர்களை புதிதாக சேர்க்கும் பணி நடந்தது.
- மறைந்தவர்கள் பெயர்களை நீக்குதல் செய்யும் பணியும் நடந்தது.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் பகுதியில் பாபநாசம் வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல் முகாம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் கல்யாண சுந்தரம் அறிவுறுத்தலின்படி, மாவட்ட துணைச் செயலாளர் அய்யாராசு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலையில் பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கொந்தகை, ஓலைப்பாடி, துரும்பூர், ஆதனூர், திரு வைகாவூர், திருமண்டங்குடி, உமையாள்புரம், தியாக சமுத்திரம், அலவந்திபுரம், மேலகபிஸ்தலம், சத்தியமங்கலம், கபிஸ்தலம் சருக்கை, உம்பளப்பாடி, உள்ளிக்கடை, கோவிந்தநாட்டு சேரி, உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள 57 பூத்துகளில் 18 வயது நிறைவடைந்த மாணவ- மாணவிகளை புதிதாக சேர்த்தலும், மறைந்தவர்கள் பெயர்களை நீக்குதல் செய்யும் பணியும் நடைபெற்றது.
இந்த சேர்த்தல் நீக்கல் முகாம் பணிகளை அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் லட்சுமணன், தலைவர் மலர்மன்னன், துணைத் தலைவர் முகமது கனி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வினோத் குமார், ஆகியோரை சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கபிஸ்தலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் குணசேகரன், கிளைச் செயலாளர் ஜெகதீசன், முன்னாள் ஊராட்சி செயலாளர் ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் கரிகாலன், இளைஞர் அணி விஜயராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சாரல் மழை கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வந்தது.
- வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பத்மா என்ற பெண் காயம் அடைந்தார்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் செம்மங்குடி மேலத் தெருவில் அரசால் கட்டித் தரப்பட்ட தொகுப்புவீடுகள் உள்ளன. சாரல் மழை விட்டு விட்டு கடந்த சிலநாட்களாக பெய்து வந்த நிலையில் நேற்று இரவு பத்மா (வயது50) என்பவருடைய தொகுப்பு வீட்டின் சுவர்திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி பத்மா காயம் அடைந்தார்.
அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தொகுப்பு வீடுகளின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதி இல்லாத தொகுப்பு வீடுகளை இடித்து, புதிதாக வீடு கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இதனால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
- கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன் பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் நகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட சாலையை முழுவதுமாக அமைத்தி டாமலும், ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலை யின் உயரத்தை விட புதிய சாலை உயரமாக இருப்பதா லும்,வடிகால் வசதி இல்லாத காரணத்தாலும் தற்போது அப்பகுதியில் பெய்த மழை நீர் தேங்கி இருப்பதால் அப்பகுதி மக்கள் அவதி வருகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கோரிக்கை மனு அளிக்கப்பட்டது,
மனு பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளிக்கப்பட்டது. மேலும் ஊராட்சி மன்றத்தி ற்க்கும் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையால் பொதுமக்களும், பள்ளி செல்லும் குழந்தை களும் அந்த குளம்போல் காட்சி தரும் மழை நீரில் தான் கடந்து செல்லக்கூடிய அவல நிலை இருந்து வருகிறது.
இதனால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் அபாய சூழல் இருந்து வருகிறது.
எனவே உடனடியாக மழை நீர் வடிய போர்க்கால அடிப்படையில் நடவடி க்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களின் தாக்கம் 28 சதவீதம் குறைகிறது.
- இந்த திட்டமானது ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்பட உள்ளது.
தஞ்சாவூர்:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் ஆகியோர் காணொளி காட்சி மூலம் சென்னையில் தொடக்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது :-
உலக சுகாதார அமைப்புகளின் தரவுகளின்படி உடற்பயிற்சி மேற்கொள்வதால் நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களின் தாக்கம் 28 சதவீதமும், இதய நோயின் தாக்கம் 30 சதவீதமும் குறைகின்றது என கண்டறியப்பட்டுள்ளது.
நடைப்பயிற்சி உடலை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் நல்ல உடல் எடையுடன் இருக்க உதவுகிறது.
மேலும் நாள்பட்ட உடல் பிரச்சினை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் என்பதற்கு இணங்க பொதுமக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் பொருட்டு 8 கிலோமீட்டர் நடை பாதை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நடைபாதை 4 கிலோமீட்டர் தூரம் கொண்ட அன்னை சத்யா விளையாட்டரங்கம் முதல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அரங்கம் தஞ்சாவூர் மாநகராட்சி வரை ஒரு முழு சுற்று சுற்றி 8 கிலோமீட்டர் தூரம் தொடங்கிய இடத்தில் முடிவடைகிறது.
மேலும் இத்திட்டமானது ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன் , டி. கே. ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, சுகாதார துறை துணை இயக்குனர்கலைவாணி, மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், முன்னாள் கவுன்சிலர் சதாசிவம், கவுன்சிலர் தமிழ்வாணன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் ராணிகண்ணன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், பொறியாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வருகிற 6-ந் தேதி தஞ்சை ஒன்றியம் கொல்லங்கரை கிராமத்தில் கலெக்டர் தொடங்கி வைக்கிறார்.
- கால்நடைகளுக்கும் காதுவில்லை அணிவித்து தனித்துவ 12 இலக்க எண் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றுதல்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் 'குக்கிராமங்களில் உள்ள 2.92 லட்சம் பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 4-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி (கோமாரி நோய்) போடும் பணி நடைபெறுகிறது.
இந்த தடுப்பூசி போடும் பணி வருகிற 6 ஆம் தேதி முதல் தொடங்கி 21 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் டிசம்பர் 21 முடிய உள்ள காலத்தில் விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த தடுப்பூசி போடும் பணியை வருகிற 6-ந் தேதி தஞ்சை ஒன்றியத்தில் உள்ள கொல்லங்கரை கிராமத்தில் கலெக்டர் தொடங்கி வைக்கிறார்.
எனவேநான்கு மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து கறவை, சினை உள்ளிட்ட பசு, எருமை மற்றும் அனைத்து எருதுகளுக்கும் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அனைத்து கால்நடைகளுக்கும் காதுவில்லை அணிவித்து தனித்துவ 12 இலக்க எண் உள்ளிட்ட கால்நடை தொடர்பான விவரங்களை பதிவேற்றுதல் இந்திய அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் தங்கள் கிராமத்திற்கு வருகை புரியும் போது அனைத்து கால்நடைகளுக்கும் அடையாள காதுவில்லை பொருத்தி 100 சதவீதம் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி மேற்கொண்டு பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து கால்நடை வளர்ப்போர்கள் கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை தஞ்சை மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்கனர் டாக்டர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
- போட்டியில் அனைத்து மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- போட்டியில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
அனைத்திந்திய சட்ட உரிமைகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் அணி இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி இன்று தஞ்சாவூர் ஐ.டி.ஐ மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் சாலமன் இன்பராஜ் வரவேற்புரை ஆற்றினார்.
எஸ். எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி. கே. ஜி .நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முடிவில் அந்தோணி நிறைவுறையாற்றினார்.
தஞ்சாவூர் மாவட்ட தலைவர் மோகனசுந்தரம் நன்றியுரை ஆற்றினார்.
இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- 2 ஆயிரத்து 308 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.
- வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்காதவர்கள் படிவத்தை நிறைவு செய்து வழங்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்துதல் தொடா்பான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கின.
இந்த முகாம் நாளை வரை நடைபெறுகிறது.
தஞ்சாவூா் மாவட்டத்துக்கு உள்பட்ட 2 ஆயிரத்து 308 வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.
இச்சிறப்பு முகாமில் 17 வயது நிறைவடைந்தவா்கள் அடுத்துவரும் நான்கு காலாண்டுகளின் மைய தகுதி நாளில் (ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1) தொடா்புடைய காலாண்டின் தகுதி நாளில் 18 வயது நிறைவடைந்து வாக்காளா் பட்டியலில் இடம் பெறாமல் உள்ள வாக்காளா்கள் தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க, படிவம் எண் 6-ஐ அருகிலுள்ள வாக்குச் சாவடியில் பெற்று நிறைவு செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்துக்கான ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்தைப் படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்கலாம்.
மேலும் இறப்பு, நிரந்தரமாக இடம் பெயா்ந்தவா்கள், இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயா் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ஐ நிறைவு செய்தும், அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள, தொகுதி மாற்றம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, பெயா், உறவு முறை, புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் 8-ஐ நிறைவு செய்தும், இதுவரை வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்காத வாக்காளா்கள் படிவம் 6 பி-ஐ நிறைவு செய்தும் இச்சிறப்பு முகாமில் வழங்கலாம் என்று தெரிவிககப்பட்டு உள்ளது.






