search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகம் ஆய்வு
    X

    தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் சட்டப்பேரவை நூலக குழு தலைவர் சுதர்சனம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகம் ஆய்வு

    • தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்துக்கு நிரந்தர இயக்குநா் நியமிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.
    • தமிழ் பண்பாடு, வரலாற்றை அறிவதற்காக தமிழக அரசு அதிகளவில் நிதி ஒதுக்கி வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகம், மாவட்ட மைய நூலகம் உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு சட்டப்பேரவை நூலகக் குழுவின் தலைவா் சுதா்சனம் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நூலகங்கள் மீது முதல்-அமைச்சரும், விளையாட்டு, இளைஞா் நலன் துறை அமைச்சரும் அதிகக் கவனம் செலுத்து கின்றனா்.

    ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு நூலகம் உருவாக்கப்பட வேண்டும் என எங்களுடைய இளைஞரணி செயலா் கூறியதன்பேரில் அதற்கு முயற்சி மேற்கொள்ளப்ப டுகிறது.

    அதன்படி பல இடங்களில் நூலகங்கள் தொடங்கப்ப ட்டுள்ளன. மக்களிடையே வாசிப்புத்தன்மை, விழிப்புணா்வை ஏற்படுத்தவும், வரலாற்றை அறிவதற்காகவும் நூலகங்கள் தொடங்கப்படுகின்றன.

    மாணவா்கள், மக்களுக்குப் பயன்படும் வகையில் நூலகங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

    தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தில் ஆட்கள் பற்றாக்குறை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். கீழடி போன்ற 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு, வரலாற்றை அறிவதற்காக தமிழக அரசு அதிகளவில் நிதி ஒதுக்கி வருகிறது.

    அந்த வகையில் தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்து க்கும் முக்கியத்துவம் அளிக்க தமிழக முதல்-அமைச்சருக்கு பரிந்துரைக்கப்படும்.

    இந்த நூலத்துக்கு நிரந்தர இயக்குநா் நியமிப்பது குறித்தும் அரசுக்குப் பரிந்துரைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னா், மாவட்ட ஆட்சியரகத்தில் சுதா்சனம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இக்குழுவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கணபதி, சம்பத்குமாா், சரவணகுமாா், ஸ்டாலின்குமாா், குழு அலுவலா் துணைச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் இடம் பெற்றனா்.

    ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் தியாகராஜன், அரசு தலைமை கொறடா கோவி. செழியன், ராமலிங்கம் எம்.பி, டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி , வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட நூலக அலுவலர் முத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    Next Story
    ×