search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டம்
    X

    வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டம் நடந்தது.

    தஞ்சையில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டம்

    • இரவு முழுவதும் வியாபாரம் செய்ய போலீசார் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
    • வணிகர்களிடம் அரசு அதிகாரிகள் எனக்கூறி வசூல் செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட, நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அவசர கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் சூரியகுமார் தலைமை தாங்கினார், செயலாளர் ஆனந்த், பொருளாளர் சோலையம்மாள் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இரவு முழுவதும் வியாபாரம் செய்வதற்கு போலீசார் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    குறிப்பிட்ட நேரத்திற்குள் சிறு வணிகர்களையும், சாலையோர வியாபாரிகளையும் கடையை அடைக்க சொல்லி வற்புறுத்தக் கூடாது.

    வணிகர்களை அந்தந்த பகுதியில் உள்ள சமூக விரோதிகள் சட்ட விரோதமாக பணம் கேட்டு தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வணிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    வணிகர்களிடம் அரசுத்துறை அதிகாரிகள் என கூறி கட்டாய வசூல் செய்தும், பொருட்கள் கேட்டு தொல்லை கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வருகின்ற 19ஆம் தேதி புதிதாக தலைமை கட்டிட திறப்பு விழாவிற்கு தஞ்சை மாவட்டத்திலிருந்து ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தப்பட்டது.

    இதில் பொறுப்பாளர்கள் வல்லம் கோவிந்தராஜ், திருக்காட்டுப்பள்ளி தியாக சுந்தரமூர்த்தி, பூதலூர் சண்முகராஜ், செங்கிப்பட்டி நந்தகுமார், ஒரத்தநாடு மணிசுரேஷ், பட்டுக்கோட்டை வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாநகர அமைப்பாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×