அரசு கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டது.
அரசு கல்லூரியில் மரக்கன்று நடும் விழா
Published on

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர் தலைமை வகித்தார்.

கல்லூரி முதல்வர் திருமலைச்சாமி முன்னிலையில், மாவட்ட மருத்துவ அணி அமைப்பா ளர் டாக்டர் சவுந்தரராஜன் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன் (பேராவூரணி தெற்கு), ரவிச்சந்திரன் (சேதுபாவாசத்திரம் தெற்கு), அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ஷாஜகான், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ், மருத்துவ அணி தொகுதி அமைப்பாளர் ராஜூ, அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் ராணி, ராஜ்மோகன், மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர். 50 க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடவு செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com