என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிங்கம்புணரியில் குடும்ப நல விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பிரான்மலை ஆரம்ப சுகாதார மையத்தின் சார்பாக உலக மக்கள் தொ கை தினத்தை முன்னிட்டு இளம் தாய்மார்களுக்கான சிறப்பு குடும்ப நல விழிப்பு ணர்வு மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் கலந்து கொண்டு இன்றைய தாய்மார்களிடம் தற்காலிக குடும்ப நலம் மற்றும் நிரந்தர குடும்ப நல முறை களுக்கான வழிமுறை பற்றியும் எடுத்து ரைத்தார். மேலும் குடும்ப கட்டுப்பாடு சாதனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களிடம் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டு மென கேட்டுக் கொண்டார்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். குடும்ப நல துணை இயக்குனர் மருத்துவர் தர்மர், துணை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் விஜய் சந்திரன், முன்னிலை ஏற்றனர்.

    சிங்கம்புணரி வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, சிங்கம்புணரி பேரூ ராட்சி சேர்மன் அம்பல முத்து வார்டு கவுன்சிலர் மணி சேகர், மக்கள் கல்வி மற்றும் தகவல் தொடர்பு அலுவலர் செந்தில்குமார், மாவட்ட நலக் கல்வி விரி வாக்க அலுவலர் மதி அரசன், பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம் சிங்கம் புணரி வட்டாட்சியர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சத்திய நேசன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.

    • தேவகோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடங்கியது.
    • 1-ந் தேதி சக்தி கரகம், 2-ந் தேதி பால்குடம் நடைபெறும்.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருணகிரிபட்டினத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி விழா தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சக்தி கரகம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. அப்போது அம்மனுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி பெண்கள் வரவேற்றனர்.

    வருகிற 31-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 1-ந் தேதி சக்தி கரகம், 2-ந் தேதி பால்குடம் நடைபெறும்.

    • தி.மு.க. நிர்வாகிகள் அமைச்சரிடம் வாழ்த்து தெரிவித்தனர்.
    • தி.மு.க. அயலக அணி சிவகங்கை மாவட்ட தலைவராக ஆர்விஎஸ்.சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பத்தூர்

    தி.மு.க. அயலக அணி சிவகங்கை மாவட்ட தலைவராக ஆர்விஎஸ்.சரவணனும், துணைத் தலைவராக ஜான்பீட்டரும், அமைப்பாளராக அஜித் குமார், துணை அமைப்பா ளர்களாக நெடுஞ்செழியன், புகழேந்தி, சதீஷ்குமார், சிவசுப்பிரமணியன், ராஜ்குரு மற்றும் சீமான் சன் சுப்பையா ஆகியோரை பொதுச் செயலாளர் நியமனம் செய்துள்ளார்.

    நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் திருப்பத்தூரில் கூட்டுறவு துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். புதிய நிர்வாகிகள் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றனர்.

    • சாக்கோட்டை, புதுவயல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் வருகை தந்து இருந்தனர்.
    • கடைசியில் உடுக்கை சத்தத்துடன் கருப்பசாமி பாட்டு பாடப்பட்டது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம் மற்றும் புதுவயல் பேரூர் தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட வழங்கும் விழா புதுவயல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

    பொதுக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், முன்னாள் அமைச்சர் தென்னவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் சாக்கோட்டை, புதுவயல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் வருகை தந்து இருந்தனர். கூட்டத்தில் உள்ளவர்கள் கலைந்து செல்லாமல் இருப்பதற்காக பாட்டுக் கச்சேரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியின் கடைசியில் உடுக்கை சத்தத்துடன் கருப்பசாமி பாட்டு பாடப்பட்டது. அப்போது நிகழ்ச்சிகள் கலந்து கொண்டிருந்த பெண்கள் பலருக்கு திடீரென்று அருள் வந்தது. இதையடுத்து அவர்கள் தங்கள் நிலைநிறுத்த முடியாமல் எழுந்து சாமி ஆட தொடங்கினர்.

    அருகில் இருந்து நிகழ்ச்சியை ரசித்த சக பெண்கள் அவர்களின் கைகளில் வேப்பிலையை கொடுத்தும், நெற்றியில் விபூதி பூசியும் அவர்களை ஆசுவாசப்படுத்தினர். ஆனால் அந்த பாடல் முடியும் வரை சாமியாடிய பெண்கள் தளரவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் மேடையேறி விடுவார்களோ என்ற அச்சமும் ஏற்பட்டது. அதையும் தாண்டி கழகத்தினர் உள்பட ஒருசிலர் சாமியாடிய பெண்களிடம் குறி கேட்கவும் முற்பட்டனர். கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பெண்கள் அருள் வந்து சாமி ஆட்டம் ஆடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சாலை விதிகளை பின்பற்றி மாணவர்கள் சைக்கிள்களை இயக்க வேண்டும் என்று விழாவில் அமைச்சர் பேசினார்.
    • சிவகங்கையில் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மாணவி களுக்கு சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    விலையில்லா சைக்கிள் கள் வழங்கும் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் 2022-23ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயின்ற மாணவ-மாணவி களுக்கான விலையில்லா சைக்கிள் வழங்கும் அடிப் படையில் மாவட்டத்திலுள்ள 68 அரசு பள்ளிகள் உள்ளிட்ட 105 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக ளில் பயிலும் 4,270 மாண வர்கள் மற்றும் 6,323 மாணவிகள் என 10 ஆயிரத்து 593 மாணவர் ளுகக்கு சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதில் மாணவிகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 760 மதிப்பீட்டிலும் மாணவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் 900 மதிப்பீட்டிலும் என சைக்கிள்கள் வழங்கப் பட உள்ளன.

    அதன் தொடக்கமாக இன்றைய தினம் சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 210 மாணவிகளுக்கு ரூ.9 லட்சத்து 99 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதனைத்தொடர்ந்து, அனைத்து பள்ளிகளிலும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

    சூற்றுச்சூழலை பாது காப்பதற்கும் அடிப்படை யாக சைக்கிள்கள் விளங்கி வருகிறது. இன்றைய தினம் இந்நிகழ்ச்சிகளின் மூலம் விலையில்லா சைக்கிள் களை பெற்றுள்ள மாணவர் கள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி, முறையாக சைக்கிள்களை ஓட்ட வேண்டும்.

    இதுபோன்று மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் மாணவர்கள் திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.இந்நிகழ்ச்சியில், காரைக் குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, நகர்மன்ற உறுப்பினர்கள் மகேஷ் குமார், விஜயகுமார், பள்ளி தலைமையாசிரியை சிவமணி, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • காரைக்குடியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ், ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் 12-வது மாவட்ட அளவிலான சிலம்பம் கோப்பைக்கான போட்டிகள் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த போட்டிக்கு மாங்குடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகர்மன்றதலைவர் முத்துத்துரை முன்னிலை வகித்தார்.

    பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற சிலம்ப போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ், ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்ட சிலம் பாட்ட கழக தலைவர் டாக்டர். பிரபு, துணைத்தலைவர்கள் வேலுச்சாமி, நமச்சி வாயம், கவுரவ தலைவர் அருள், செயலாளர் வினோத்குமார், பொருளாளர் ஆனந்த்குமார், போட்டிகள் இயக்குனர் நாகராஜன், நகர்மன்ற துணை தலைவர் குணசேகரன், காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் கும ரேசன், டாக்டர்.திருப்பதி, மகரிஷி பள்ளிக்குழுமம் அஜய் யுக்தேஷ், அய்யப்பா டெக்ஸ்டைல்ஸ் சுந்தர், விசாலம் சிட்பண்ட்ஸ் உமா பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் மாநில அளவில் விளையாட தகுதிபெறுவர் என்பது குறிபிடத்தக்கதாகும்.

    • தேவகோட்டை புதிய பஸ் நிலையத்தில் அத்துமீறி நுழையும் ஆட்டோக்களால் அரசு பஸ்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
    • பெரிய விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சுற்றி யுள்ள சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவை களுக்காக தேவகோட்டை நகருக்கு பஸ் மூலமாக அதிக அளவில் வந்து செல் கின்றனர். பேருந்து நிலையத் தில் போக்குவரத்து நெரிசல் களை குறைப்ப தற்காக கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. குறிப்பிட்ட நகர பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதிய பேருந்து நிலைய நுழைவாயிலில் கடந்த சில மாதங்களாகவே ஆட்டோக் கள் அதிகளவில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடை யூறாகவே செய்து வருகின்ற னர். புதிய பேருந்து நிறுத்தத் தில் நிறுத்தப்படும் நகரப் பேருந்துகள் இதனால் அருகில் உள்ள பேருந்து நிலையம் நுழைவாயில் வழி யாக செல்லும் நிலை ஏற்பட் டது. இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

    புதிய பேருந்து நிலையத் தில் நிறுத்தப்படும் ஆட் டோக்களால் போக்கு வரத்து நெரிசல் அதிக அள வில் ஏற்பட்டு வருகிறது. இதனால் பெரிய விபத்துக் கள் ஏற்பட வாய்ப்புகள் உள் ளது.

    காவல்துறையினர் அவ் வப்போது இந்த ஆட்டோக் களுக்கு அபராதம் விதிக்கப் பட்டும் மீண்டும் மீண்டும் இதே தவறுகளை ஆட்டோ ஓட்டுநர்கள் செய்து வரு கின்றனர். அத்துமீறி பஸ் நிலையத்தில் நுழையும் ஆட் டோக்கல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியில் மாணவர் தலைமைப் பொறுப்பேற்பு விழா நடந்தது.
    • ராஜேஸ்வரி நிகழ்வை ஒருங்கினைத்தார்.

    காரைக்குடி

    காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியில் 2023-24 கல்வியாண்டிற்கான மாணவர் தலைமைப் பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது.

    2023-24-ம் ஆண்டிற்கான மாணவர் தேர்தலில் மாணவர்கள் வேட்புமனு தாக்கல் செய்து, கணினி மின்னனு இயந்திரம் மூலம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வாக்களித்தனர். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டன. இதில் மாணவர் தலைவராக ஷ்ராவ்யா, மற்றும் துணைத் தலைவராக ஆதித்ய ராஜ் சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர்.இவர்க ளுக்கான பதவியேற்பு விழா பள்ளியின் விழா அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய தொழில் பாதுகாப்புத்துறை தலைமைத் தளபதி சங்கர் குமார் ஜா கலந்து கொண்டார்.

    பள்ளியின் தாலாளர் சத்யன் தலைமை வகித்தார்.நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்யன் முன்னிலை வகித்தார். கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி நிகழ்வை ஒருங்கினைத்தார்.

    சிறப்பு விருந்தினர் பேசுகையில், இன்று நீங்கள் பள்ளியில் கற்கும் செயல்களே நாளை சமுதாயத்தில் உங்களை நிலைநிறுத்தும் தூணாகும். இப்பள்ளியின் தேர்தலில் தேர்தெடுக்கப்பட்டவர்கள் எதிர்கால இந்தியாவின் தலைவர்கள். இன்று பள்ளியில் வாக்களித்தது நாளை இந்திய தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு முன்னோட்டமாகும்.

    தலைமைப்பண்பு தனித்துவம் போன்றவற்றை கற்றுத் தரும் பள்ளிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு மாணவரும் இந்தியாவின் முகங்கள் என்றும், பள்ளியின் சட்டத்தை மதித்தால் தான் நாளை நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு வாழ முடியும் என்றார். முடிவில் முதல்வர் தேவராஜலு நன்றி கூறினார்.

    • திருப்பத்தூர் அருகே 25-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை திருப்பத்தூர் மின் செயற்பொறி யாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா ஆ.தெக்கூர் மற்றும் கீழசேவல்பட்டியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 25-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நெற்குப்பை, முறையூர், கொன்னத்தான்பட்டி, மகிபாலன்பட்டி, கண்டவராயன்பட்டி ,எஸ் எஸ் கோட்டை, பூலாங்குறிச்சி, செவ்வூர், ஆவினிப்பட்டி, சிறுகூடல்பட்டி, கீரணிப்பட்டி இளையாத்தங்குடி, நெடுமரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு மின் தடை ஏற்படும் இந்த தகவலை திருப்பத்தூர் மின் செயற்பொறி யாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

    • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • ஆடிப்பூர பிரம்மோற்சவ தேர் திருவிழா

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வைரவன்பட்டியில் வடிவுடையம்மை சமேத வளரொளிநாதர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

    இந்த மாட்டுவண்டி பந்தயம் காரைக்குடி-திருப்பத்தூர் சாலையில் நடைபெற்றது. பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 11 ஜோடிகளும், நடுமாடு பிரிவில் 28 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 52 ஜோடிகள் என மொத்தம் 91 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 52 வண்டிகள் கலந்து கொண்ட தால் 27 மற்றும் 25 என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

    அதேபோன்று மாடு ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு 4 காளைகள் இணைந்து 2 வண்டிகள் ஒன்றாய் சென்றதால் சாலையில் நின்று மாட்டு வண்டியை பார்த்து கொண்டிருந்த பார்வையாளர்கள் சிதறி அடித்து ஓடினர். இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் காரில் வந்து ஆடு திருடிய 2 பேர் சிக்கினர்
    • காரை வழிமறித்து சத்தம் போட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் பிள்ளை வன ஊரணி அருகே சிவப்பு கலர் காரில் 3பேர் வந்தனர். காரில் இருந்து இறங்கி நோட்டமிட்டபடி இருந்த அவர்கள் அந்தப் பகுதியில் மேய்ச்சலில் இருந்த 2 ஆடுகளை காரில் ஏற்றி கடத்த முயன்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காரில் ஆடு கத்தும் சத்தம் கேட்டதால் காரை வழிமறித்து சத்தம் போட்டனர். உடனடியாக காரை திருப்பிச் செல்ல முயன்றனர்.

    ஆனால் கார் ஸ்டார்ட் ஆகாததால் 3 பேரும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். அதில் 2 பேர் ஊர் மக்களிடம் கையும் களவுமாக சிக்கினர். ஊர் மக்கள் காரில் இருந்த ஆட்டை மீட்டு சிக்கிய வாலிபர்களை மரத்தில் கட்டி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதகுபட்டி போலீசார் ஆடு திருடியவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர்கள் திருப்புவனம் பாப்பாகுடியை சேர்ந்த ராமச்சந்திரன், ராஜா என்பதும், தப்பி ஓடியவர் மணி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகங்கை நகராட்சியில் ரூ.22 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் நடப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
    • ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் நகராட்சி சார்பில் முடிவுள்ள திட்ட பணிகளை தொடங்கி வைக்கம் விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் கடந்த 2021-22-ம் நிதி யாண்டில் 26 வளர்ச்சித் திட்ட பணிகள் ரூ.7.83 கோடி மதிப்பீட்டிலும், 2022-23-ம் நிதியாண்டில் 20 வளர்ச்சித் திட்ட பணிகள் ரூ.14.56 கோடி மதிப்பீட்டி லும் என மொத்தம் 46 வளர்ச்சித் திட்ட பணிகள் ரூ.22.39 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் தற்போது வார்டு எண்:4 பகுதியில் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள ராமசந்திரனார் பூங்கா, வார்டு எண்:21-ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன் கீழ் ரூ.134 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட செக்கடி ஊரணியை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தல் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள சண்முகராஜா கலையரங்கம் என சிவகங்கை நகராட்சிக் குட்பட்ட பகுதியில் மொத்தம் ரூ.153.50 லட்சம் மதிப்பீட்டில் 3 முடிவுற்ற வளர்ச்சித் திட்ட பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சிவகங்கை நகர் மன்றத்தலைவர் எம்.துரைஆனந்த், நகராட்சி ஆணையாளர் அப்துல் ஹாரிஸ், நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, பொது பணித்துறை மேற்பார்வையாளர் உலகநாதன், நகர் மன்ற உறுப்பினர்கள் சேதுநாச்சியார், அயூப்கான் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செந்தில்குமார், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×