search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய சமுதாய கூடம் அடிக்கல் நாட்டு விழா
    X

    சமுதாய கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    புதிய சமுதாய கூடம் அடிக்கல் நாட்டு விழா

    • வாராப்பூர் ஊராட்சியில் புதிய சமுதாய கூடம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பலூர் கிராமத்தில் புதிய சமுதாய கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் இப்பணியானது தொடங்கப்பட்டுள்ளது. இதில் மூன்றில் ஒரு பாகமாக ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்தை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பனும், ஊராட்சி மன்ற தலைவரும் தங்கள் சொந்த நிதியில் இருந்து வழங்கி உள்ளனர். வாராப்பூர் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் மன்ற தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட இவர் இப்பகுதி வளர்ச்சிக் காக பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக நியாயவிலைக்கடை, ஆவின் பாலகம், குறுங்காடுகள் திட்டம், இயற்கை முறையில் உரம் தயாரித்து ஊராட்சிக்கு வருவாய் ஈட்டுதல், குடிநீர் வசதி போன்ற பல்வேறு பயன்பாட்டினை இப்பகுதி கிராம மக்களுக்காக அரசு வழங்கும் உதவியோடு தன் சொந்த நிதியில் இருந்தும் வழங்கி தொடர்ச்சியாக மக்கள் பணியாற்றி வருகிறார்.

    மேலும் இவர் எடுத்த பெரும் முயற்சியாக இக்கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக சுமார் ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி மதிப்பீட்டில் தனியார் கல்வி நிறுவனத்துக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நடுநிலை பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டு பள்ளி மாணவர்களுக்காக அர்ப்பணிக்கப் பட்டது. இப்படி பதவியேற்ற 3 ஆண்டுகளில் அரசு வழங்கும் முத்தான பல திட்டங்களை தனது கிராம முன்னேற்றத்திற்காக ஏற்படுத்தி வரும் ஊராட்சி மன்ற தலைவரை சமூக ஆர்வலர்களும் ஊர் முக்கி யஸ்தர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் துணைத்தலைவர் சித்ரா, செயலர் வெள்ளைச்சாமி, வி.என். ஆர்.கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் நாகராஜன், மற்றும் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×