search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவகோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடக்கம்
    X

    தேவகோட்டை அருணகிரிபட்டினத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில்

    தேவகோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடக்கம்

    • தேவகோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடங்கியது.
    • 1-ந் தேதி சக்தி கரகம், 2-ந் தேதி பால்குடம் நடைபெறும்.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருணகிரிபட்டினத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி விழா தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சக்தி கரகம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. அப்போது அம்மனுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி பெண்கள் வரவேற்றனர்.

    வருகிற 31-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 1-ந் தேதி சக்தி கரகம், 2-ந் தேதி பால்குடம் நடைபெறும்.

    Next Story
    ×