என் மலர்
சிவகங்கை
- சதுரங்க போட்டி நடந்தது.
- மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகத்தின் சாணக்யா அகாடமி ஒருங்கிணைப்பில் சதுரங்க போட்டி மான்போர்ட் பள்ளியில்நடந்தது. 7 வயது, 9 வயது, 11 வயது, 13 வயது, 15 வயது என 5 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெற்றன. இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகளில் இருந்து மொத்தம் 235 மாணவர்கள் கலந்து கொண்டனர். மான்போர்ட் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் இக்னேஷியஸ் தாஸ் தலைமை வகித்தார்.
சதுரங்க போட்டிகளுக்கு சிவகங்கை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் ரமேஷ் கண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாலையில் நடைபெற்ற போட்டிகளுக்கு சிவகங்கை மருத்துவக்கல்லூரி தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை பிரிவின் துறை தலைவர் டாக்டர் ஜிம் திவாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். போட்டி முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை சாணக்கியா அகாடமி ஒருங்கிணைத்து நடத்தியது.
- ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் சிவகங்கை அணி வெற்றி பெற்றது.
- மாணவர்களும் பெற்றோர்களும் நன்றி தெரிவித்தனர்.
காரைக்குடி
மாநில அளவிலான 11-வது ஜூனியர் ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டிகள் திருச்சியில் நடைபெற்றது.இதில் சிவகங்கை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட 16 மாவட்ட அணி கள் பங்கேற்று விளையாடி யது.
சிவகங்கை மாவட்ட அணி லீக் சுற்றுகளில் திண் டுக்கல், திருச்சி அணிகளை வீழ்த்தி காலிறுதி போட்டி யில் மதுரையை வென்றது.பின்பு நடைபெற்ற அரை இறுதி போட்டியில் செங்கல் பட்டு அணியை வென்று இறுதி போட்டிக்கு முன் னேறியது. இறுதி போட்டி யில் கோயமுத்தூர் அணியி டம் தோல்வி அடைந்து 2-ம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றது.
சிவகங்கை மாவட்ட அணியில் விளையாடிய தருண், தீபேஷ், வெற்றிவேல், ஸ்ரீராம், கிஷோர், விஷ்வா, இளமாறன், பிரனேஷ், ஜஸ்வந்த் பெருமாள், ஆதித்யா, காஞ்சி ரித்தீஷ், அபிஷேக் ஆகிய மாணவர் களை ஆசிரியர்கள் பெற் றோர்கள் பாராட்டினர்.சிறப்பாக பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் தபேந்தி ரன், பாலா, வைத்தீஸ்வரன், தயாளன் ஆகியோர்களுக்கு மாணவர்களும் பெற்றோர்களும் நன்றி தெரிவித்தனர்.
- ரூ.8 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- தனித்துணை கலெக்டர் (பொறுப்பு) சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி பொதுமக்களிட மிருந்து 482 மனுக்கள் பெறப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் தமிழ் மன்றம் சார்பில் மாநில அளவில் மேல் நிலைப்பள்ளி மாணவர்க ளிடையே நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று, கட்டுரைப் போட்டியில் முதல் பரிசும், பேச்சு போட்டியில் 3-வது இடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகளையும், அம்பேத்கார் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் ரொக்க பரிசு, சான்றிதழ் களையும் வழங்கினார்.
மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சம் இறப்பு நிவாரண உதவித்தொகைக்கான காசோலையும், தோட்டக் கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24ன் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.18 ஆயிரம் மானிய தொகைகான ஆணையையும், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் 2023-24ன் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.9 ஆயிரம் மானிய ஆணையை யும் வழங்கினார்.
தமிழ்நாடு கதர்கிராம தொழில் வாரியத்தின் மூலம் மானாமதுரையில் மண்பாண்டம் தொழில் செய்யும் 25 தொழிலா ளர்களுக்கு தலா ரூ.20 ஆயிரத்து 400 வீதம் மொத்தம் ரூ.5.10 லட்சம் சைலாவீல்கள், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம் சார்பில் 118 குழந்தைகளுக்கு ரூ.1.44 லட்சம் மதிப்பீட்டில் உதவி பராமரிப்பு நிதி என மொத்தம் 139 பயனாளி களுக்கு ரூ.7.81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி களை கலெக்டர் வழங்கி னார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பாதேவி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் (பொறுப்பு) சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அய்யனார் கோவில் திருவிழாவில் பக்தர்கள் வினோத வழிபாடு நடத்தினர்.
- புரவி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காப்பாரப்பட்டியில் காப்பார அய்யனார் கோவில் உள்ளது. இங்கு கரடி கருப்பர் சுவாமி அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் வருடந்தோறும் திருவிழா விமரிசையாக நடைபெறும். அப்போது ஒரு சமுதாய மக்கள் விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடியின்றி வாழவும், கரடி கருப்பர் சாமிக்கு பக்தர்கள் கரடி வேடத்தில் புரவிகள் எடுத்து வழிபாடுவார்கள்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கரடி அமைப்பில் மண்ணால் செய்யப்பட்ட புரவிகள் எடுத்து வினோத வழிபாடு நடத்தினர்.
திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடி யின்றி வாழவும் மண்ணால் செய்யப்பட்ட குழந்தை பதுமைகளை தலையில் சுமந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
முன்னதாக சிங்கம்புணரி குலாலர் தெருவில் புரவிகளை செய்வதற்கு பிடிமண் கொடுத்து அவர்கள் செய்து வைத்திருந்த கரடி மற்றும் குழந்தை பதுமைகளை தலையில் சுமந்து கொண்டு சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள காப்பார அய்யனார் கோவிலுக்கு தோளிலும் தலையிலும் சுமந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் கிராமிய சூழ்நிலையில் நேர்த்திக்கடன் செய்த காட்சிகள் மனதை கவரும் விதமாக அமைந்திருந்தது.
- 34-ம் ஆண்டு கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது.
- கஞ்சிக்கலய ஊர்வலத்தை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
தேவகோட்டை
தேவகோட்டை நகரில் மேல் மருவத்தூர் ஆதிபரா சக்தி சித்தர் சக்தி பீடத்தின் 34-ம் ஆண்டு ஆடி பெரு விழா நடைபெற்றது. முன்ன தாக கொடி யேற்றத்துடன் விழா தொடங்கியது. 108 பெண்கள் கலந்து அக்னி சட்டி நடைபெற்றது. இன்று காலை கருதாவூரணியில் மலைக்கோவில் அருகில் இருந்து 5,004 பெண்கள் கலந்து கொண்ட கஞ்சிக் கலையம் எடுக்கும் நிகழ்ச்சி யை அமைச்சர் பெரியகருப் பன் தொடங்கி வைத்தார்.
உடன் நகர் மன்ற உறுப்பி னர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்த னர். இந்த கஞ்சிக்கலையம் சிவன் கோவில், பேருந்து நிலையம், திருப்பத்தூர் ரோடு வழியாக கோவில் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து யூனியன் அலுவ லகம் அருகே உள்ள ஜெயம கொண்ட விநாயகர் கோவி லில் இருந்து மகளிர் பால் குடம் எடுத்து வந்தனர்.
தேவகோட்டை ஆதிபரா சக்தி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடை பெற்று அனைவருக்கும் பிரசாதமும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- வீரஅழகர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
- வருகிற 1-ந்தேதி செவ்வாய் கிழமை மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்று கரையில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வீரஅழகர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டு தோறும் ஆடிதிருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது.
இதில் முக்கிய நிகழ்வான சுந்தரராஜ பெருமாள்- சவுந்திரவல்லி தாயார் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. இதில் யானை வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாள்-சவுந்திரவள்ளி தாயார் புதிய திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு மாலை மாற்றி திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.
சுந்தரபுரம் கடை வியாபாரிகள் சார்பில் 7-ம் நாள் மண்டகபடி விழா நடைபெறுகிறது. இதில் இரவு சுந்தரராஜ பெருமாள் புஷ்ப பல்லக்கில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 1-ந்தேதி செவ்வாய் கிழமை மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
- இளையான்குடி மேல்நிலை பள்ளிக்கு விரைவில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
- மன்னர் சண்முகராஜா சுமார் 14 1/2 ஏக்கர் நிலத்தை கல்விப் பணிக்காக தானமாக வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பவள விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசிய தாவது:-
இளையான்குடி மேல்நிலைப் பள்ளியை பொருத்த வரையில் கடந்த 1947-ல் இளையான்குடி முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி என்ற பெயருடன் தொடங்கப்பட்டு, கே.எம்.கே அப்துல் கரீம் முதல் தாளாளராக இருந்து பள்ளியை வழிநடத்த தொடங்கினார். அச்சமயம், சிவகங்கை மன்னர் சண்முகராஜா சுமார் 14 1/2 ஏக்கர் நிலத்தை கல்விப் பணிக்காக தானமாக வழங்கினார்.
மேலும் அரசுடன் இணைந்து மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி, அரசிற்கு உறுதுணையாக இருந்து வரும் கொடை யாளர்களுக்கும் இத்தருணத்தில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது 75-வது ஆண்டு பவள விழா காணும் இப்பள்ளி, நூற்றாண்டு நோக்கி சிறப்பாக பயணிக்க வேண்டும்.
மேலும் இப்பள்ளியில் கூடுதலாக அடிப்படை வசதிகளை மேம்படுத்து வதற்கான சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், இளையான்குடி முஸ்லீம் கல்விச்சங்கத் தலைவர் கஸ்னவி, மேல்நிலைப்பள்ளி தாளாளர் முசாபர் அப்துல் ரகுமான், சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார், பள்ளி தலைமையாசிரியர் முகமமது இல்யாஸ், மானா மதுரை நகர் மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி, வட்டாட்சியர் கோபிநாத், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், மாவட்ட ஊராட்சி உறுப்பி னர் ஆரோக்கிய சாந்தா மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உயர்கல்வியை நாடும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக ‘நான் முதல்வன்’ திட்டம் உள்ளது.
- வேலைக்கு செல்வதற்கு முன்னதாகவே, தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி பேராசிரியர்க ளுக்கான பயிற்சி கருத்த ரங்கு நடைபெற்று வருகிறது. இதில் கலெக்டர் ஆஷா அஜீத் கலந்து கொண்டு ேபசியதாவது:-
"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் புதிய தொழில்நுட்பங்களுக்கு தேவையான திறன்களை பெறுவதற்கு, அரசால் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. வேலைக்கு செல்வதற்கு முன்னதாகவே, தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்வதற்கு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இந்த திட்டம் உள்ளது. மேலும் நாளுக்கு நாள் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.
நான் முதல்வன் இயங்கு தளமானது கல்லூரி மாணவர்களுக்கு படிப்புகள் மற்றும் தொழில் சார்ந்த திறன் சலுகைகள் பற்றிய தொடர்புடைய தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டு மாணவர்கள் தங்களின் தொழில் இலக்குகளை அடைந்திடவும், மாணாக்கர்களுக்கு ஆர்வமுள்ள துறையினை தேர்ந்தெடுத்து இதன்மூலம் தொழில்நுட்ப நிறுவனங்களினால் வழங்கப்படும் பயிற்சியினை பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினை விரிவுப்படுத்தும் நோக்கில், கல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கு நடத்த அரசால் அறிவுறுத்தப்பட்டு திறன்மிக்க பல்வேறு நிறுவனங்களை சார்ந்த பயிற்சியாளர்கள் வாயிலாக பயிற்சி கருத்தரங்குகள் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி) கர்ணன், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- முத்துமாரியம்மன் கோவில் தீமிதித்து வழிபாடு நடந்தது.
- நாளை மஞ்சள் நீராட்டுநிகழ்ச்சியுடன் விழா நிறைவடையும்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெருவில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. விஸ்வகர்மா மகாசபை சங்கம் நடத்தும் 155-ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 21-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 2-வது வெள்ளிக்கிழமை வைகை ஆற்றில் இருந்து பால்குடம், அழகு குத்தி வந்து கோவில் முன்புறம் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தவழும் பிள்ளை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். இரவு வைகை ஆற்றில் இருந்து வானவேடிக்கையோடு சாமியாடி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நாளை மஞ்சள் நீராட்டுநிகழ்ச்சியுடன் விழா நிறைவடையும்.
- மின்மோட்டார்களை பயன்படுத்தி குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிக்கப்படும்.
- காரைக்குடி நகராட்சி எச்சரித்துள்ளது.
காரைக்குடி
காரைக்குடி நகராட்சி 26-வது வார்டு பகுதியில் குடிநீர் சரியாக வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நகர்மன்ற தலைவர் முத்துத் துரை, ஆணையாளர் வீரமுத்துக் குமார் ஆகியோர் உத்தரவின்படி தனிப்படை யினர் ஆய்வு செய்தனர்.
இதில் பல்வேறு இடங்களில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து
10-க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி தலைவர் முத்துத்துரை கூறியதாவது:-
காரைக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய 10 இடங்களில் மேல்நிலை தீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு நபருக்கு 112 லிட்டர் வீதம் 12.08 எம்எல்டி அதாவது கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் விதியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடுவதால் மற்ற வீடுகளுக்கு தண்ணீர் செல்வது தடைபடுகிறது. மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடப்படுவது கண்டறியப் பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் தவறு செய்தால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
மேலும் காரைக்குடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிதாக 2 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளது
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக் குமார், உதவி பொறியாளர் கள் பாலசுப்பிரமணியன், சீமா ஆகியோர் உடனி ருந்தனர்.
- நகராட்சி பூங்காவில் மின் வயர்கள் தாழ்வாக செல்கிறது.
- பூங்காவிற்கு வரும் குழந்தைகள் திறந்த வெளி குடிநீர் வால்வு பள்ளங்களில் தவறிவிழும் வாய்ப்பு உள்ளது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழ்கரை பகுதியில் உள்ள சுந்தரபுரம் தெருவில் நகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. இதனை சுற்றி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், நூலகம், வணிக வளாகத்துடன் கூடிய குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது.
குறுகிய இடத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா வில் குடிநீர் குழாய்கள் திறக்க வால்வு பள்ளங்கள் 3 இடத்தில் மூடப்படாமல் உள்ளது. குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் அருகில் மிகவும் தாழ்வான நிலையில் அறுந்து தொங்கும் மின் சப்ளை செல்லும் மின்சார வயர்கள் செல்கிறது.
தினமும் மாலை நேரங்க ளில் மற்றும் விடுமுறை நாட்களில் பூங்காவிற்கு வரும் குழந்தைகள் திறந்த வெளி குடிநீர் வால்வு பள்ளங்களில் தவறிவிழும் வாய்ப்பு உள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் தாழ்வாக செல்லும் மின்சார வயர்களை பூங்கா வழியே பயன்படுத்தாமல் மாற்று வழியே பயன்படுத்தி திறந்த வெளி பள்ளங்களை மூடி பூங்காவிற்க்கு கூடுதல் இடம் ஒதுக்கி விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மக்கள் தொகை தின விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- முடிவில் ஊராட்சி மன்ற செயலர் சோணையா நன்றி கூறினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் நாலுகோட்டை கிராமத்தில் உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஒன்றிய தலைவர் மஞ்சுளா தலைமை தாங்கினார். உதவி அலுவலர் போஸ்வெல் ஆசிர் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், துணை தலைவர் சக்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் சிவராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஊட்டச்சத்தின் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், மாவட்ட தொழில் மைய ஆய்வாளர் ராஜேஷ், வேளாண்மை உதவி இயக்குநர் வளர்மதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வாசுகி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலர் சோணையா நன்றி கூறினார்.






