search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.8 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
    X

    போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுடன் கலெக்டர் ஆஷா அஜீத் உள்ளார்.

    ரூ.8 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

    • ரூ.8 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • தனித்துணை கலெக்டர் (பொறுப்பு) சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி பொதுமக்களிட மிருந்து 482 மனுக்கள் பெறப்பட்டது.

    இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் தமிழ் மன்றம் சார்பில் மாநில அளவில் மேல் நிலைப்பள்ளி மாணவர்க ளிடையே நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று, கட்டுரைப் போட்டியில் முதல் பரிசும், பேச்சு போட்டியில் 3-வது இடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகளையும், அம்பேத்கார் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் ரொக்க பரிசு, சான்றிதழ் களையும் வழங்கினார்.

    மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சம் இறப்பு நிவாரண உதவித்தொகைக்கான காசோலையும், தோட்டக் கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24ன் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.18 ஆயிரம் மானிய தொகைகான ஆணையையும், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் 2023-24ன் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.9 ஆயிரம் மானிய ஆணையை யும் வழங்கினார்.

    தமிழ்நாடு கதர்கிராம தொழில் வாரியத்தின் மூலம் மானாமதுரையில் மண்பாண்டம் தொழில் செய்யும் 25 தொழிலா ளர்களுக்கு தலா ரூ.20 ஆயிரத்து 400 வீதம் மொத்தம் ரூ.5.10 லட்சம் சைலாவீல்கள், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம் சார்பில் 118 குழந்தைகளுக்கு ரூ.1.44 லட்சம் மதிப்பீட்டில் உதவி பராமரிப்பு நிதி என மொத்தம் 139 பயனாளி களுக்கு ரூ.7.81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி களை கலெக்டர் வழங்கி னார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பாதேவி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் (பொறுப்பு) சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×