search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு வழிகாட்டியாக நான் முதல்வன் திட்டம்
    X

     பேராசிரியர்களுக்கான பயிற்சி கருத்தரங்கில் கலெக்டர் பேசியபோது எடுத்த படம்.

    மாணவர்களுக்கு வழிகாட்டியாக 'நான் முதல்வன்' திட்டம்

    • உயர்கல்வியை நாடும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக ‘நான் முதல்வன்’ திட்டம் உள்ளது.
    • வேலைக்கு செல்வதற்கு முன்னதாகவே, தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி பேராசிரியர்க ளுக்கான பயிற்சி கருத்த ரங்கு நடைபெற்று வருகிறது. இதில் கலெக்டர் ஆஷா அஜீத் கலந்து கொண்டு ேபசியதாவது:-

    "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் புதிய தொழில்நுட்பங்களுக்கு தேவையான திறன்களை பெறுவதற்கு, அரசால் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. வேலைக்கு செல்வதற்கு முன்னதாகவே, தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்வதற்கு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இந்த திட்டம் உள்ளது. மேலும் நாளுக்கு நாள் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    நான் முதல்வன் இயங்கு தளமானது கல்லூரி மாணவர்களுக்கு படிப்புகள் மற்றும் தொழில் சார்ந்த திறன் சலுகைகள் பற்றிய தொடர்புடைய தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டு மாணவர்கள் தங்களின் தொழில் இலக்குகளை அடைந்திடவும், மாணாக்கர்களுக்கு ஆர்வமுள்ள துறையினை தேர்ந்தெடுத்து இதன்மூலம் தொழில்நுட்ப நிறுவனங்களினால் வழங்கப்படும் பயிற்சியினை பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தினை விரிவுப்படுத்தும் நோக்கில், கல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கு நடத்த அரசால் அறிவுறுத்தப்பட்டு திறன்மிக்க பல்வேறு நிறுவனங்களை சார்ந்த பயிற்சியாளர்கள் வாயிலாக பயிற்சி கருத்தரங்குகள் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி) கர்ணன், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×