என் மலர்
நீங்கள் தேடியது "முத்துமாரியம்மன் கோவில்"
- காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பக்தர்கள் ஊரணி பொங்கல் நடைபெற்றது.
- கிரேனில் பக்தர்கள் தொங்கியபடி அலகு குத்தி சென்று பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலூர்:
கடலூர் அடுத்த பில்லாலி தொட்டி கிராமத்தில் ரேணுகாம்பாள் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் செடல் உற்சவம் கடந்த 29-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சக்தி கரகம் மற்றும் சாகை வார்த்தல் விழா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வீதி உலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் விழா நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பக்தர்கள் ஊரணி பொங்கல் நடைபெற்றது.
தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு உடலில் செடல் போட்டுக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். மேலும் கிரேனில் பக்தர்கள் தொங்கியபடி அலகு குத்தி சென்று பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் சட்டி வைத்து கொதிக்கும் எண்ணெயில் வடையை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் பரவசத்துடன் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கொடி இறக்கும் விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் இளைஞர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
- தேவகோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.
- இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
தேவகோட்டை
சிவகங்ைக மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உற்சவ விழா நடைபெற்று வருகிறது. காப்பு கட்டிய நாள் முதல் காலை, மாலை நேரங்களில் லட்சார்ச்சனை, 108 சங்காபிஷேகம், பால், தயிர், மஞ்சள் மற்றும் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி நயினார்வயல் அகத்தீசுவரர் கோவிலில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டு பல வகையான பூக்கள் அடங்கிய தட்டுகளை எடுத்து வந்தனர். பின்னர் கோட்டூர் முத்துமாரியம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
பங்குனி உற்சவ விழா முளைப்பாரி திருவிழாவில் இன்று இரவு அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. நாளை காலை முளைப்பாரி செலுத்துதல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.
- மகா கும்பாபிஷேகம் வருகிற 28-ந்தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் நடைபெறுகிறது.
- விழாவில் ஆலய நிர்வாகிகள் வல்லம் கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் மற்றும் பக்த்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர், முருகர், துர்க்கை நவகிரக மூர்த்திகள், முத்து மாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் நடைபெறுகிறது.
இதனையொட்டி நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், கணபதி ஹோமம், கோபூஜை, கரி கோலம், அஷ்டாதச கிரியை, தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேச பலி, ம்ருத்சங்கிரஹணம், ரக்ஷேக்னஹோமம், தீபாராதனை முதற்கால யாக பூஜை நடக்கிறது.
27-ந்தேதி மஹாலஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமம், யாகசாலை நிர்மாணம்,வேதபாராயணம், தீபாராதனை இரண்டாம் கால பூஜையும் மாலை 6-மணிக்கு விநாயகர் பூஜை, அங்குரார்பணம், ரசாபந்தனம், கும்பாலங்கனம், கலாகர்ஷணம் மூன்றாம் கால பூஜையும் 5000 முறை ஐந்து குண்டங்களில் ஹோமம், பூர்ணாஹீதி, தீபாராதனையும் நடைபெறுகிறது. 28-ந்தேதி காலை நான்காம் கால பூஜை, விக்னேஸ்வர பூஜை, ஹோமங்கள், தத்துவார்ச்சனை, ஸ்பர்சாநீதி 9.45 மணிக்கு விமான கும்பாபிஷேகமும் 10 மணிக்கு முத்து மாரியம்மன் மஹா கும்பாபிஷேகம், பரிவார கும்பாபிஷேகம், மஹாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. விழாவில் ஆலய நிர்வாகிகள் வல்லம் கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் மற்றும் பக்த்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
- தேவகோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடங்கியது.
- 1-ந் தேதி சக்தி கரகம், 2-ந் தேதி பால்குடம் நடைபெறும்.
தேவகோட்டை
தேவகோட்டை அருணகிரிபட்டினத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி விழா தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் சக்தி கரகம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. அப்போது அம்மனுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி பெண்கள் வரவேற்றனர்.
வருகிற 31-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 1-ந் தேதி சக்தி கரகம், 2-ந் தேதி பால்குடம் நடைபெறும்.
- திருவிழா நடைபெறாமல் இருந்தது.
- புதிய தேர் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த சேஷச முத்திரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தேர் திருவிழா நடைபெற்றது. அதன் பின்னர் சில காரணங்களால் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் பக்தர்கள் இந்த ஆண்டு தேர் திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதற்கு புதிய தேர் செய்யப்பட்டது.
இந்நிலையில் கோவிலில் தேர் திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் சக்தி அழைத்தல், ஊரணி பொங்கல், தேர் வெள்ளோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர்.
பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். இதில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அங்கிருந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர், தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்த டைந்தது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் சேஷசமுத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழு வினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.தேர் திருவிழாவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர்.






