search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கு நலத்திட்ட உதவிகள்

    • சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • சுயஉதவிக் குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் சதவீதம்லம் கடன் வழங்கும் திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்க ளுக்கு 8சதவீதம், பெண்க ளுக்கு 6சதவீதம், வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

    கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம் பெண்களுக்கு 4 சதவீதம் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படு கிறது. கைவினை கலை ஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம் பெண்களுக்கு 4 சதவீதம் அதிக பட்ச கடனாக ரூ.10லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

    சிறுபான்மை மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலைஃமுதுகலைதொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில் பவர்களுக்கு அதிகப்பட்சமாக திட்டம்-1ன் கீழ் ரூ.20லட்சம் வரையில் 3 சதவீதம், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8சதவீதம் மாணவிகளுக்கு 5சதவீதம் வட்டி விகிதத்தி லும் ரூ.30 லட்சம் வரை கல்விகடனு தவிவழங்கப்படு கிறது.

    சிறுபான்மையினர் பெண்களுக்கு விலை யில்லா மின்மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் திட்டம் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் பெண்களுக்கான விலையில்லா மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.

    கபர்ஸ்தான் மற்றும் அடக்க இடங்கள் அமைப்பதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. கிறிஸ்தவ தேலாயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனர மைத்தல் நிதி உதவி அளிக்கும் திட்டம் கிறிஸ்தவ தேலாயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ள ரூ.2 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிறித்தவர்கள் புனிதப்பயணமாக எருசலேம் செல்வதற்கு நபர் ஒருவருக்கு ரூ.60 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகின்றது.

    கிராமப்புறங்களில் 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவி களுக்கு ரூ.500-ம், 6-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×