என் மலர்
சேலம்
- கொலை செய்துவிட்டு உடலை கல்குவாரியில் வீசிய நபரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
- மூதாட்டிகள் இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கல்குவாரியில் 2 மூதாட்டிகள் சடலமாக மீட்கப்பட்டனர். மூதாட்டிகள் இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
கொலை குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தன நிலையில், 2 மூதாட்டிகளை கொலை செய்துவிட்டு உடலை கல்குவாரியில் வீசிய நபரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
நகைக்காக மூதாட்டி பாவாயி, பெரியம்மாளை கொலை செய்து குவாரி குட்டையில் வீசிய அய்யானர் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
இரண்டு மூதாட்டிகளை கொலை செய்த அய்யனாரின் காலில் துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டு பிடித்துள்ளனர்.
- சேலம் மாநகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் தொடங்கிய மழை விடிய விடிய சாரல் மழையாக பெய்தது.
- மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்த நிலையில் பின்னர் வறண்ட வானிலையே நிலவியது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு நேற்றிரவு வானில் திடீரென கரு மேகங்கள் திரண்டன. பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழையாக பெய்தது.
குறிப்பாக ஏற்காட்டில் நேற்றிரவு 11 மணிக்கு தொடங்கிய மழை சாரல் மழையாக இன்று காலையும் பெய்தது. இதனால் ஏற்காட்டில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் தொடர் மழையால் ஏற்காட்டில் நேற்றிரவு முதல் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். விடிய, விடிய பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
சேலம் மாநகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் தொடங்கிய மழை விடிய விடிய சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இன்று காலையிலும் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்களும் அவதி அடைந்தனர்.
இதே போல டேனீஸ்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. இந்த மழையால் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 26.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 9, டேனீஸ்பேட்டை 25.2 மி.மீ. மழை என மாவட்டம் முழுவதும் 61.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை தூறிய படியே இருந்தது.
நாமக்கல் மாவட்டத்திலும் கொல்லிமலை செம்மேடு, புதுச்சத்திரம், சேந்தமங்கலம், ராசிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
மங்களபுரம்-20.20, புதுச்சத்திரம்-9, ராசிபுரம்-32, சேந்தமங்கலம்-2.20, கொல்லிமலை செம்மேடு-17 என மாவட்டம் முழுவதும் 80.40 மி.மீட்டர் மழை பெய்தது.
- 2 பேரின் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.
- குட்டையில் காணாமல் போன மூதாட்டிகள் பாவாயி, பெரியம்மாள் ஆகியோர் பிணமாக கிடப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சேலம்:
சேலம் இளம்பிள்ளை அருகேயுள்ள இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட தூதனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாவாயி (70) விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் பெரியம்மாள் (75) ஆடுகளை வளர்த்து வாழ்ந்து வந்தார். இவர்கள் 2 பேரும் நேற்று காலை 9 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து 2 பேரின் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் காணவில்லை. இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தூதனூர் பகுதியில் அம்மாசி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் உள்ள தண்ணீர் குட்டையில் காணாமல் போன மூதாட்டிகள் பாவாயி, பெரியம்மாள் ஆகியோர் பிணமாக கிடப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மகுடஞ்சாவடி போலீசார் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியோடு 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மூதாட்டிகள் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதால் நகைக்காக 2 மூதாட்டிகளையும் மர்ம நபர்கள் கொலை செய்து கல்குவாரி தண்ணீரில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அருள் பெத்தநாயக்கன்பாளையம் அருகே வடுகம்பட்டி பகுதியில் கட்சி நிர்வாகி துக்க வீட்டிற்கு சென்றார்.
- அருள் எம்.எல்.ஏ. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தார்.
சேலம்:
சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் இன்று தனது ஆதரவாளர்களுடன் காரில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் அருகே வடுகம்பட்டி பகுதியில் கட்சி நிர்வாகி துக்க வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் சேலம் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அன்புமணி ஆதரவாளர்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் கார்களை வழிமறித்து நிறுத்தி அருள் எம்.எல்.ஏ.வுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் திடீரென அவர்கள் அருள் எம்.எல்.ஏ. சென்ற கார் மற்றும் அவருடன் சென்ற 15-க்கும் மேற்பட்ட கார்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த கார்களின் கண்ணாடி உடைந்து சேதமானது.
இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்த மோதல் பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அருள் எம்.எல்.ஏ.வை மீட்டு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அருள் எம்.எல்.ஏ. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தார். அருள் எம்.எல்.ஏ. கூறும்போது, என்னை கொலை செய்யும் முயற்சியில் தாக்குதல் நடத்தினர் என்று தெரிவித்தார்.
- வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு குற்றச்சாட்டை செங்கோட்டையன் கூறினார்.
- செங்கோட்டையன் தி.மு.க.வை எதிர்த்து சட்டமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது.
சேலம்:
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு குற்றச்சாட்டை செங்கோட்டையன் கூறினார்.
* செங்கோட்டையன் தி.மு.க.வை எதிர்த்து சட்டமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது.
* சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்பவர்கள்தான் ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றோர்.
* தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விரும்புகிறார்கள்.
* 2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு பி டீமாக செயல்படுவது தான் அவர்களின் விருப்பம் என்றார்.
- ஈரோடு பகுதியில் மாய உலகத்தை உருவாக்கி சிற்றரசு போல செயல்பட்டவர் செங்கோட்டையன்.
- அ.தி.மு.க.வில் முறையாக உட்கட்சி தேர்தல் நடத்தி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்.
சேலம்:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதையடுத்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* கிட்டத்தட்ட 6 மாதங்களாக செங்கோட்டையனின் நடவடிக்கை கட்சிக்கு எதிரானதாக இருந்தது.
* ஜெயலலிதா விசுவாசியாக இருந்தால் செங்கோட்டையன் ஏன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
* நான் முதலமைச்சராக ஆன பின்னர் தான் செங்கோட்டையன் மீண்டும் அமைச்சரானார்.
* ஈரோடு பகுதியில் மாய உலகத்தை உருவாக்கி சிற்றரசு போல செயல்பட்டவர் செங்கோட்டையன்.
* ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாததால் விழாவில் பங்கேற்கவில்லை என செங்கோட்டையன் கூறியிருந்தார்.
* குற்றவாளி சசிகலா, தப்பித்தது தமிழகம் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர் ஓ.பன்னீர்செல்வம்.
* அ.தி.மு.க. பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
* சேர்க்க வேண்டுமென செங்கோட்டையன் கூறியவர்கள் உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்கள் அல்ல.
* அ.தி.மு.க.வில் முறையாக உட்கட்சி தேர்தல் நடத்தி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்.
* அ.தி.மு.க.வின் சட்டவிதிப்படி தான் அனைத்தும் நடக்கிறது என்பது செங்கோட்டையனுக்கு தெரியாதா?
* அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.
* அதிமுகவைப் பற்றி பேச டிடிவி தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை.
* கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அ.தி.மு.க. ஆட்சியில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
- சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 8 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை முதல் வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டு இருக்கிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- சுரங்க மின் நிலையங்கள் வழியாக காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அணை இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந் தேதி நிரம்பியது.
இதையடுத்து அணைக்கு வரும் உபரிநீர் மேட்டூர் அணையில் இருந்து 16 கண்மதகு வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே கடந்த 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 25 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை முதல் வினாடிக்கு 15 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்து காணப்பட்டது.
இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது. ஆனாலும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 120 அடியாக இருந்தது.
- தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை முதல் வினாடிக்கு 25 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்து காணப்பட்டது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- கைபேசியின் மூலம் தகாத மற்றும் பாவியல் ரீதியான செய்திகளை அனுப்பியுள்ளார்.
- பிரம்மநாயகத்தை பல முறை தொலைபேசியில் எச்சரித்துள்ளார்.
சேலம் பள்ளப்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாலத்தில் நடந்து சென்றவரிடம் செல்போன் மற்றும் பணம் பறிப்பு என்று வெளிவந்த செய்தி குறித்து காவல் துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமகிருஷ்ணன் அம்பேத்கார் காலனி அதிகாரிப்பட்டி அம்மாபேட்டை என்பவர் ஒரு சிறுமியுடன் (பெயர் வெளியிடப்படவில்லை) சுமார் ஒரு வருடமாக நட்பில் இருந்துள்ளார்.
சுமார் 6 மாதங்களுக்கு முன்பு பிரம்மநாயகம் என்பவர் அந்த சிறுமிக்கு தவறாக கைபேசி அழைப்பு கொடுத்து தன்னை அவளுடைய உறவினர் என்று அறிமுகப்படுத்தி மரியாதைக்குன்றிய வார்த்தைகளில் பேசியுள்ளார்.
இதை சிறுமி ராமகிருஷ்ணனிடம் தெரிவித்தபோது அவர் பிரம்மநாயகத்தை பல முறை தொலைபேசியில் எச்சரித்துள்ளார்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பிரம்மநாயகம் மீண்டும் சுரேஷ் என்னும் பெயரில் இன்ஸ்டாகிராம் ஐடி நுவங்கி அதன் வழியாக தொடர்பு கொண்டு கைபேசியின் மூலம் தகாத மற்றும் பாவியல் ரீதியான செய்திகளை அனுப்பியுள்ளார்.
சிறுமி அவரை பிளாக் செய்து அவர் அனுப்பிய செய்திகளை ராமகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். பிரம்மநாயகத்தை பிடிப்பதற்காக ராமகிருஷ்ணன் ஒரு போலியான இன்ஸ்டாகிராம் ஐடி ஒரு பெண் பெயரில் உருவாக்கி சில நாட்களாக பிரம்மநாயகத்துடன் இன்ஸ்டாகிராமில் உரையாடியுள்ளார்.
ராமகிருஷ்ணளின் நோக்கம் பிரம்மநாயகத்தை சேலத்திற்கு வரசெய்து அவர் அனுப்பிய தகாத செய்திகள் மற்றும் புகை படங்களை நீக்க செய்து மேலும் இனி சிறுமியை தொந்தரவு செய்யாதவாறு எச்சரிப்பதற்காகவும் அந்த ஆன்லைன் உரையாடல் அடிப்படையில் பிரம்மநாயகம் இன்று 25.10.2025 ம்தேதி சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
ராமகிருஷ்ணன் அவரது நண்பர்கள் வினிக்குமார் மற்றும் பிரதீப்ராஜ் மூவரும் பிரம்மநாயகத்தை பின்தொடர்ந்து பேருந்து நிலையம் அருகிள் உள்ள பாலம் அருகில் வருமாறு கேட்டுள்ளனர்.
அங்கு அவர்கள் பிரம்மநாயகத்தை தாக்கி அவரது அலைப்பேசியை பறித்து உடைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த தாக்குதலின் நோக்கம் பிரம்மநாயகம் இனி அந்த சிறுமியை தொந்தரவு செய்யாமல் இருப்பதையும் அவளுக்கு அனுப்பிய தகாத செய்திகள் மற்றும் புகைப்படத்தை அவரது மொபைலில் இருந்து நீக்குவதை உறுதி செய்வதே ஆகும்
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக உபரிநீர் அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந் தேதி நிரம்பியது. இதையடுத்து தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது. அது அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இது தவிர கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்வரத்து அதிகரித்து வருவதால் கடந்த 6 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.






