என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    6-வது நாளாக 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
    X

    6-வது நாளாக 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது.
    • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக உபரிநீர் அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந் தேதி நிரம்பியது. இதையடுத்து தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்தது. அது அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இது தவிர கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    நீர்வரத்து அதிகரித்து வருவதால் கடந்த 6 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×