மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 120 அடியாக இருந்தது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 25 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது
Published on

மேட்டூர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை முதல் வினாடிக்கு 25 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்து காணப்பட்டது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com