என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pedestrians injured"

    • கைபேசியின் மூலம் தகாத மற்றும் பாவியல் ரீதியான செய்திகளை அனுப்பியுள்ளார்.
    • பிரம்மநாயகத்தை பல முறை தொலைபேசியில் எச்சரித்துள்ளார்.

    சேலம் பள்ளப்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாலத்தில் நடந்து சென்றவரிடம் செல்போன் மற்றும் பணம் பறிப்பு என்று வெளிவந்த செய்தி குறித்து காவல் துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமகிருஷ்ணன் அம்பேத்கார் காலனி அதிகாரிப்பட்டி அம்மாபேட்டை என்பவர் ஒரு சிறுமியுடன் (பெயர் வெளியிடப்படவில்லை) சுமார் ஒரு வருடமாக நட்பில் இருந்துள்ளார்.

    சுமார் 6 மாதங்களுக்கு முன்பு பிரம்மநாயகம் என்பவர் அந்த சிறுமிக்கு தவறாக கைபேசி அழைப்பு கொடுத்து தன்னை அவளுடைய உறவினர் என்று அறிமுகப்படுத்தி மரியாதைக்குன்றிய வார்த்தைகளில் பேசியுள்ளார்.

    இதை சிறுமி ராமகிருஷ்ணனிடம் தெரிவித்தபோது அவர் பிரம்மநாயகத்தை பல முறை தொலைபேசியில் எச்சரித்துள்ளார்.

    சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பிரம்மநாயகம் மீண்டும் சுரேஷ் என்னும் பெயரில் இன்ஸ்டாகிராம் ஐடி நுவங்கி அதன் வழியாக தொடர்பு கொண்டு கைபேசியின் மூலம் தகாத மற்றும் பாவியல் ரீதியான செய்திகளை அனுப்பியுள்ளார்.

    சிறுமி அவரை பிளாக் செய்து அவர் அனுப்பிய செய்திகளை ராமகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். பிரம்மநாயகத்தை பிடிப்பதற்காக ராமகிருஷ்ணன் ஒரு போலியான இன்ஸ்டாகிராம் ஐடி ஒரு பெண் பெயரில் உருவாக்கி சில நாட்களாக பிரம்மநாயகத்துடன் இன்ஸ்டாகிராமில் உரையாடியுள்ளார்.

    ராமகிருஷ்ணளின் நோக்கம் பிரம்மநாயகத்தை சேலத்திற்கு வரசெய்து அவர் அனுப்பிய தகாத செய்திகள் மற்றும் புகை படங்களை நீக்க செய்து மேலும் இனி சிறுமியை தொந்தரவு செய்யாதவாறு எச்சரிப்பதற்காகவும் அந்த ஆன்லைன் உரையாடல் அடிப்படையில் பிரம்மநாயகம் இன்று 25.10.2025 ம்தேதி சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

    ராமகிருஷ்ணன் அவரது நண்பர்கள் வினிக்குமார் மற்றும் பிரதீப்ராஜ் மூவரும் பிரம்மநாயகத்தை பின்தொடர்ந்து பேருந்து நிலையம் அருகிள் உள்ள பாலம் அருகில் வருமாறு கேட்டுள்ளனர்.

    அங்கு அவர்கள் பிரம்மநாயகத்தை தாக்கி அவரது அலைப்பேசியை பறித்து உடைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த தாக்குதலின் நோக்கம் பிரம்மநாயகம் இனி அந்த சிறுமியை தொந்தரவு செய்யாமல் இருப்பதையும் அவளுக்கு அனுப்பிய தகாத செய்திகள் மற்றும் புகைப்படத்தை அவரது மொபைலில் இருந்து நீக்குவதை உறுதி செய்வதே ஆகும்

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    லண்டன் நகரில் உள்ள பிரிட்டன் பாராளுமன்றம் அருகேயுள்ள தடுப்பு வேலி அருகே படுவேகமாக வந்த கார் மோதியதில் பலர் காயம் அடைந்ததாக ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் தெரிவித்துள்ளனர். #BritishParliament #BritishParliamentCarcrash
    லண்டன்:

    லண்டன் நகரில் உள்ள பிரிட்டன் பாராளுமன்றம் வாசல் அருகேயுள்ள சாலையில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை சுமார் 7.30 மணியளவில் சிக்னலுக்காக சில வாகனங்கள் நின்றிருந்தன.

    அப்போது, அந்த சாலையில் தவறான பாதையில்  படுவேகமாக சீறிவந்த கார் அங்கிருந்தவர்கள் மீது மோதியதில் பலர் காயம் அடைந்ததாக ஸ்காட்லாந்து யார்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மோதிய வேகத்தில் அந்த கார் நிலை தடுமாறி குலுங்கும் அளவுக்கு அதிகமான வேகத்தில் வந்த கார், பாராளுமன்ற வாசலில் உள்ள இரும்பு தடுப்பு வேலியின் மீது பயங்கரமாக மோதி நின்றது.

    அந்த காரை ஓட்டிவந்த நபரை உடனடியாக கைது செய்த போலீசார், கைவிலங்கிட்டு அழைத்து சென்றனர்.



    இந்த விபத்தில் சாலையை கடப்பதற்காக சைக்கிளில் காத்திருந்த இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இந்த சம்பவம் தற்செயலாக ஏற்பட்ட விபத்தா? அல்லது, காரை ஏற்றி மக்களை கொல்ல முயன்ற தீவிரவாத தாக்குதலா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவத்தின் எதிரொலியாக பாராளுமன்ற சதுக்கத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்ட்டர் சுரங்க ரெயில் நிலையம் மூடப்பட்டது. விக்டோரியா டவர் கார்டன்ஸ், மில்பேங்க் உள்ளிட்ட பகுதிகளும் தற்காலிக தடுப்பு வேலிகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளன. #BritishParliament #BritishParliamentCarcrash
     
    ×