என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆத்தூர் அருகே பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கார் மீது தாக்குதல்
- அருள் பெத்தநாயக்கன்பாளையம் அருகே வடுகம்பட்டி பகுதியில் கட்சி நிர்வாகி துக்க வீட்டிற்கு சென்றார்.
- அருள் எம்.எல்.ஏ. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தார்.
சேலம்:
சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் இன்று தனது ஆதரவாளர்களுடன் காரில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் அருகே வடுகம்பட்டி பகுதியில் கட்சி நிர்வாகி துக்க வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் சேலம் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அன்புமணி ஆதரவாளர்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் கார்களை வழிமறித்து நிறுத்தி அருள் எம்.எல்.ஏ.வுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் திடீரென அவர்கள் அருள் எம்.எல்.ஏ. சென்ற கார் மற்றும் அவருடன் சென்ற 15-க்கும் மேற்பட்ட கார்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த கார்களின் கண்ணாடி உடைந்து சேதமானது.
இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்த மோதல் பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அருள் எம்.எல்.ஏ.வை மீட்டு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அருள் எம்.எல்.ஏ. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தார். அருள் எம்.எல்.ஏ. கூறும்போது, என்னை கொலை செய்யும் முயற்சியில் தாக்குதல் நடத்தினர் என்று தெரிவித்தார்.






