என் மலர்
சேலம்
- தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை, வழிகாட்டுதல் அமைக்க ஆலோசனை மையம் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
- பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிக்கு ஒருவர் வழிகாட்டி ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம்:
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை, வழிகாட்டுதல் அமைக்க ஆலோசனை மையம் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிக்கு ஒருவர் வழிகாட்டி ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9, 10 -ம் வகுப்புகளுக்கு...
தற்போது, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டி ஆசிரியராக செயல்பட, பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியரை தேர்வு செய்து அறிக்கை அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 9-ம் வகுப்பு மொழிப்பாட ஆசிரியர் அல்லது கணினி ஆசிரியருக்கு முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி, ஆய்வு நிறுவன பேராசிரியர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிகளில் படிக்கும்போதே, மாணவர்களிடம் உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
288 ஆசிரியர்கள்
சேலம் மாவட்டத்தில் 9, 10-ம் வகுப்பு இடம்பெற்ற 288 அரசு பள்ளிகள் உள்ளன. எனவே பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் 288 வழிகாட்டி ஆசிரியர்கள் மாவட்டத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.
- சேலம் மாவட்டத்தில், கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுக்கு புகார்கள் வந்தது.
- கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது உள்ளிட்ட இதர பொருட்களில் கலப்படமாக விற்ற 13 வழக்கில் ரூ. 75 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில், கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுக்கு புகார்கள் வந்தது.
இதை யடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, இடைப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்ட னர்.
அதில், போலியானது, உணவுக்கு ஒவ்வாத கேடு தரக்கூடியது என்பது போன்ற உணவு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, கடந்த மாதத்தில் 13 வழக்குகளில் ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்து, வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டார்.
அதில், கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது உள்ளிட்ட இதர பொருட்களில் கலப்படமாக விற்ற 13 வழக்கில் ரூ. 75 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது.
- கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்காக காவேரி புரம், வாஞ்சிநகரை சேர்ந்த காமாட்சி என்பவருக்கு போலியான வருமான சான்றிதழ் தயாரித்து வழங்கி உள்ளார்.
- இ-சேவை மைய கணினி ஹார்டு டிஸ்க்குகளை வருவாய்த்துறையினர் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ராம மூர்த்தி நகரை சேர்ந்தவர் கோபால். இவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 33). இவர் மேட்டூர் காமத் பூங்கா எதிரே இ- சேவை மையம் நடத்தி வருகிறார்.
வருவாய்த்துறையினர் ஆய்வு
இவர் கொளத்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்காக காவேரி புரம், வாஞ்சிநகரை சேர்ந்த காமாட்சி என்பவருக்கு போலியான வருமான சான்றிதழ் தயாரித்து வழங்கி உள்ளார்.
மாணவர் சேர்க்கை ஆய்வின்போது இந்த போலி சான்றிதழ் கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் காமாட்சியின் குழந்தை, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் பள்ளியில் சேர்க்க முடியாமல் போனது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட காமாட்சி மேட்டூர் தாசில்தாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், மோகன்ராஜ் நடத்தி வந்த அழகி இ-சேவை மைய கணினி ஹார்டு டிஸ்க்குகளை வருவாய்த்துறையினர் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் விருதா சம்பட்டி, சின்னண்ணன் மகன் வேலாயுதம் என்ப வருக்கு வாரிசு சான்றிதழ், கமலேஷ் என்பவருக்கு ஓ.பி.சி. சான்றிதழ்களை அசல் சான்றிதழ் போலவே மோகன்ராஜ் தயாரித்து கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
4 பிரிவுகளில் வழக்கு
இந்த மோசடி தொடர்பாக நவப்பட்டி குரூப் கிராம நிர்வாக அலு வலர் திருநாவுக்கரசு மேட்டூர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட இ-சேவை மைய உரிமையாளர் மோகன்ராஜ் மீது மோசடி, ேபாலியாக அரசு ஆவணம் தயாரித்தல், பொதுமக்களை ஏமாற்றி பணம் பெறுதல், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தனிப்படை அமைப்பு
இதை அறிந்த மோகன் ராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க மேட்டூர் போலீசார் சார்பில் தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது. ெதாடர்ந்து தனிப்படை போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் சிபி இவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள், போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
- சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் சிபி (வயது 25). இவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள், போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. மேலும், கருமலைக்கூடல் போலீஸ் நிலைய குற்றப்ப திவேடு பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது.
ஆள் நடமாட்டம் இல்லாத..
இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில், புதுச்சாம்பள்ளி குரு வாக்காடு அருகே, ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதியில், சிபி வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
மேட்டூர் பகுதியில் ஒருவர் கொலை செய்யப் பட்டு இருக்கிறார் என முதலில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து போலீசார் சுமார் 1 மணி நேர தேடலுக்கு பிறகு சம்பவ இடத்தை கண்டுபிடித்தனர்.
அங்கு சென்று பார்த்தபோது, பிரபல ரவுடி சிபி, வெட்டி படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு விசாரணை நடத்தினர்.
பழிக்கு பழி
இதில், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 7-ந் தேதி, கருமலைக்கூடல் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது, ஒருவர் கொலை
செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் சிபிக்கு தொடர்பு உள்ளது. அதனால் பழிக்கு பழி வாங்க, தற்போது அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீ சார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில் கொலை தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு - சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் அடுத்த ஜூலை மாதம் 7-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை வெள்ளிக் கிழமைகளில் மதியம் 1.45 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு மதியம் 2.47 மணிக்கு சேலம் வந்தடையும்.
- திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு நான்டேட் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ேலம்:
ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முக்கிய வழித்தடங்களில் ரெயில்வே நிர்வாகம் அவ்வப்போது சிறப்பு ெரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் இருந்து சேலம் வழியாக ஈரோட்டிற்கு சிறப்பு ரெயில் இயக்குகிறது. அதன்படி சாம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ெரயில் (வண்டி எண் 08311) அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை புதன்கிழமைகளில் சாம்பல்பூரில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு நெல்லூர், கூடூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக வியாழக்கிழமை மாலை 6.42 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு ஈரோடு சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் ஈரோடு - சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 08312) அடுத்த ஜூலை மாதம் 7-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை வெள்ளிக் கிழமைகளில் மதியம் 1.45 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு மதியம் 2.47 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு ஜோலார் பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர் வழியாக சனிக்கிழமை இரவு 9.15 மணிக்கு சாம்பல்பூர் சென்ற டையும்.
இதே போல சேலம் வழியாக மும்பை நான்டேட்டில் இருந்து ஈரோட்டுக்கும், ஈரோட்டில் இருந்து மும்பை நான்டேட்டுக்கும் வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களின் சேவை ஆகஸ்டு மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நான்டேட் - ஈரோடு வாராந்திர சிறப்பு ெரயில் (வண்டி எண் 07189) நான்டேட்டில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை மதியம் 12.48 மணிக்கு சேலம் வந்தடையும்.
இங்கிருந்து 12.50 மணிக்கு புறப்பட்டு 2 மணிக்கு ஈரோடு சென்றடை யும். இந்த ரெயில் சேவை காலம் அடுத்த மாதம் (ஜூலை) 7-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இதேபோல் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ஈரோடு - நான்டேட் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 07190) ஞாயிற்றுக் கிழமைகளில் ஈரோட்டில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மாலை 6.12 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு நான்டேட் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
- சேலம் வீராணம் தேவாங்கர் காலனியை சேர்ந்தவர் குள்ளம்பட்டி பிரபு பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்பட 9-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது.
- இந்நிலையில் நேற்று சுரேசை(28) போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் வீராணம் தேவாங்கர் காலனியை சேர்ந்தவர் குள்ளம்பட்டி பிரபு (வயது 38). பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்பட 9-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது.
முதல் மனைவி இவரை விட்டு பிரிந்த நிலையில், 2-வதாக இன்னொருவரின் மனைவியை குழந்தை களுடன் அழைத்து வந்து குடும்பம் நடத்தி வருகிறார். அப்பெண்ணின் கணவர் இறந்துவிட்டதாக கூறப்படு கிறது.
இந்நிலையில் சிறையில் இருந்து கடந்த 24-ந் தேதி குள்ளம்பட்டி பிரபு வெளியே வந்தார். இவரது ரவுடிதனத்தின் காரணமாக அப்பகுதியில் ஏராள மானோர் பாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
பிரபு, அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவியை தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் தனது செல்போன் நம்பரை கொடுத்து, பேச சொன்னதாக கூறப்பட்டது. இதுகுறித்து சுரேசிடம், மனைவி கூறி அழுதுள்ளார்.
இதனால் கடும் கோபம் அடைந்த சுரேஷ், அவரது தாய் மாமா வெங்கடேசுடன் சேர்ந்து, ரவுடி குள்ளம்பட்டி பிரபுவை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
உயிருக்கு போராடிய பிரபுவை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ், வெங்க டேசை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று சுரேசை(28) போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- தாரமங்கலம் சுற்று வட்டார பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி களுக்கு அனுமதி பெறாத தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்று வருவதை கண்காணித்து அபராதம் விதித்தும் வருகின்றனர்.
- ஆர்.டி.ஓ. கவிதா ஓமலூர் மெயின் ரோட்டில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி வந்த 3 கார்களை பிடித்து தலா 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் சுற்று வட்டார பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி களுக்கு அனுமதி பெறாத தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்று வருவதை கண்காணித்து அபராதம் விதித்தும் வருகின்றனர்.
அதன்படி நேற்று தாரமங்கலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஓமலூர் ஆர்.டி.ஓ. கவிதா ஓமலூர் மெயின் ரோட்டில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி வந்த 3 கார்களை பிடித்து தலா 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் வாகன பதிவு ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
- சேலம் அரசு கிளை அச்சகத்தில் அரசிதழில் பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்ய விண்ணப் பிக்கும் வசதி உள்ளது.
- ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய ரூ.350 கட்டணம் மற்றும் அஞ்சலக கட்டணம் ரூ.65 என மொத்தம் ரூ.415 செலுத்த வேண்டும்.
சேலம்:
சேலம் அரசு கிளை அச்சக துணை பணி மேலாளர் தனசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது:-
சேலம் அரசு கிளை அச்சகத்தில் அரசிதழில் பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்ய விண்ணப் பிக்கும் வசதி உள்ளது. ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய ரூ.350 கட்டணம் மற்றும் அஞ்சலக கட்டணம் ரூ.65 என மொத்தம் ரூ.415 செலுத்த வேண்டும். அதேபோல், தமிழில் பெயர் மாற்றம் செய்ய கட்டணம் ரூ.50 மற்றும் அஞ்சலக கட்டணம் ரூ.65 என மொத்தம் ரூ.115-ம் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் இந்தியன் வங்கி ஆகிய ஏதேனும் ஒரு வங்கியில் இ- செலான் மூலம் செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
தமிழ்நாடு அரசிதழில் பெயர் மாற்றம் செய்ய விரும்பும் பொதுமக்கள் பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பத்துடன் தங்களுடைய பிறப்புச் சான்று நகல், பள்ளி அல்லது கல்லூரி இறுதி சான்று நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், நிரந்தர கணக்கு எண் அட்டை நகல், ஓட்டுனர் உரிமம் நகல் மற்றும் கடவுச் சீட்டு நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பெயர் மாற்றம் செய்ய விரும்பும் பொதுமக்கள் www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப் பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்பு வோர் அரசு கிளை அச்சகம், சிட்கோ வளாகம், 5 ரோடு, சேலம்-4 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிலோ அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மேட்டூர் அணைக்கு நேற்று 226 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 121 கனஅடியாக சரிந்துள்ளது.
- நேற்று முன்தினம் 92.40 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 91.43 அடியானது.
சேலம்:
தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தால், காவிரியில் நீர்வரத்து மிகவும் குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது.
ஒகேனக்கல் காவிரியில், கடந்த 17 நாட்களாக நீர்வரத்து 1000 கனஅடியாக இருந்தது. இந்த நிலையில், நேற்று முதல் 800 கன அடியாக சரிந்தது. இதனால், அங்குள்ள ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகள், தண்ணீரின்றி வறண்டு பாறைக்காடாக தென்படுகிறது.
அதே போல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் வெகுவாக சரிந்துள்ளது. கடந்த ஜூன் 12-ந்தேதி, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 727 கன அடியாகவும், நீர்மட்டம் 103.41 அடியாகவும், நீர் இருப்பு 69.33 டி.எம்.சி.யாகவும் இருந்தது.
ஆனால், டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தினமும் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நீர்வரத்தும் ஆயிரம் கனஅடிக்கும் கீழ் குறைந்தது. வரத்தை காட்டிலும், நீர் திறப்பு பலமடங்கு அதிகமாக இருந்ததால், அணையின் நீர்மட்டம் மளமளவென சரியத் தொடங்கியது.
இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, கர்நாடக அணைகளில் இருந்து, தமிழகத்திற்கு நடப்பு பருவத்திற்கு 9 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். ஆனால், கர்நாடக அணைகளிலும் போதிய அளவு தண்ணீர் இருப்பு இல்லை.
தற்போது 22 சதவீத தண்ணீர் மட்டுமே அங்குள்ள அணைகளில் இருப்பு உள்ளது. 124.8 அடி உயரமும், 49 டி.எம்.சி கொள்ளளவும் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 82 அடியாகவும், நீர் இருப்பு 12 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
அதே போல், 69 அடி உயரமும், 19 டி.எம்.சி கொள்ளளவும் கொண்ட கபினியின் நீர்மட்டம், 31 அடியாகவும், நீர் இருப்பு 4 டி.எம்.சி.யாகவும் உள்ளது. இதனால், தென்மேற்கு பருவமழை பெய்தால் மட்டுமே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று 226 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 121 கனஅடியாக சரிந்துள்ளது. அதே சமயம், அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 13 ஆயிரம் ஆயிரம் கனஅடியாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1 அடி வீதம் சரிந்து வருகிறது.
நேற்று முன்தினம் 92.40 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 91.43 அடியானது.
- முதலில் ஆடிய திருப்பூர் அணி 173 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய திண்டுக்கல் 174 ரன்களை எடுத்து வென்றது.
சேலம்:
7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடைபெற்றது. டி.என்.பி.எல். தொடரின் 20-வது லீக் ஆட்டம் இன்று இரவு நடந்தது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கியது.
அதன்படி, முதலில் ஆடிய திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. சாய் கிஷோர் 45 ரன்னும், துஷார் ரஹேஜா 30 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஆடிய விஜய சங்கர் 43 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. விமல் குமார் 14 ரன்னும், பூபதி குமார் 14 ரன்னும் எடுத்தனர்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிவம் சிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷிவம் சிங், ஆதித்ய கணேஷ் ஜோடி அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
ஷிவம் சிங் 74 ரன்னும், ஆதித்ய கணேஷ் 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இறுதியில், திண்டுக்கல் அணி 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும்.
- டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய திருப்பூர் அணி 173 ரன்கள் எடுத்தது.
சேலம்:
7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடைபெற்று வருகிறது. டி.என்.பி.எல். தொடரின் 20-வது லீக் ஆட்டம் இன்று இரவு நடக்கிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
டாஸ் போடப்பட்ட பிறகு சேலம் மைதானம் அமைந்துள்ள பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் போட்டி தாமதமாக தொடங்கியது.
அதன்படி முதலில் ஆடிய திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. சாய் கிசோர் 45 ரன்னும், துஷார் ரஹேஜா 30 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஆடிய விஜய சங்கர் 43 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.
- தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதோடு, தமிழக அமைச்சரவை கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார்.
- பா.ஜ.க. ஏஜெண்ட் போல் செயல்பட்டு வருகிறார் என கூறி கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
சேலம்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா இன்று (புதன்கிழமை) பிற்பகல் 12.30 மணியளவில் பெரியார் கலையரங்கில் தொடங்கியது.
இவ்விழாவுக்கு பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என். ரவி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
முன்னதாக இவ்விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், திராவிட விடுதலை கழகம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் சேலம் மாநகர போலீசார், இந்த கட்சி நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். கவர்னர் ரவிக்கு எதிராக கருப்பு கொடி காட்டக்கூடாது. அவ்வாறு கருப்பு கொடி காட்டும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
ஆனாலும் அவர்கள் கருப்பு கொடியை காட்டியே தீருவோம் என கூறினார்கள். அவருக்கு கருப்பு கொடி காட்டுவது எங்களின் உரிமை என்றனர். இதனால் போலீசாரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இன்று காலை திட்டமிட்டப்படி சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். இதையடுத்து இன்று காலை சுமார் 11 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு விழா நடக்கும் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அவர் காரில் வந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க கூடாது என கூறி கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கருப்பூர் பகுதியில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி முன்பு சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், திராவிட விடுதலை கழகம், ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை உள்ளிட்ட கட்சிகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு கட்சி கொடிகள், கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதோடு, தமிழக அமைச்சரவை கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார். பா.ஜ.க. ஏஜெண்ட் போல் செயல்பட்டு வருகிறார் என கூறி கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட் னர். அவர்கள் கவர்னர் வரும் சாலையில் வந்து விடக்கூடாது என்பதற்காக இரும்பு பேரிகார்டு அமைத்து அரண் போல் நின்று தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த வழியாக கவர்னரின் கார் வந்தது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரியார் பல்கலைக்கழகத்திற்குள் கார் சென்றது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் பெரியார் பல்கலைக் கழகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இங்கு மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, டி.ஐ.ஜி, போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், மாநகர துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மேற்பார்வையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் மட்டும் 500 போலீசார் குவிக்கப்பட்டனர்.






