search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Civil blockade"

    • கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 4 அடி அகலத்தில் 150 அடி நீளத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
    • இந்த தடுப்பணை கடந்த சில மாதங்களாக கட்டப் பட்டு வந்தாலும், தரம் இல்லாமல் கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் 4 அடி அகலத்தில் 150 அடி நீளத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணை கடந்த சில மாதங்களாக கட்டப் பட்டு வந்தாலும், தரம் இல்லாமல் கட்டப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக ஒப்பந்ததாரரிடம் முறையிட்ட மக்கள், தடுப்பணையை தரமானதாக கட்டும்படி வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் தடுப்பணை கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் முற்றுகையிட்டனர்.

    தகவல் அறிந்த கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது தடுப்பணையை தரமான தாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத் தினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    அதன்பிறகு பொது மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • குவாரியில் வெடி வைப்பதால் அருகில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது.
    • கெமிக்கல் பயன்படுத்தி கிரானைட் கற்கள் எடுப்பதால் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு விவசாய நிலங்களுக்கு நீர் இல்லாமல் பயிர்கள் வாடி விடுகிறது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு அடுத்த பிரிதி கிராமம் இளையாம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான 14 ஏக்கர் நிலத்தில் எடப்பாடியைச் சேர்ந்த கல் குவாரி கம்பெனியினர் கடந்த ஒரு மாத காலமாக அங்குள்ள கற்களை வெடிகள் வைத்தும் கெமிக்கல் பயன்படுத்தியும் எடுத்து வந்ததாக தெரிகிறது.

    இதை அறிந்த அப்பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று பா.ஜ.க தெற்கு ஒன்றிய தலைவர் சசி தேவி, தலைமையில் ஓ.பி.சி பிரிவு மாவட்ட தலைவர் ரமேஷ், ஊடக பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பூபதி, பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவர் மகேஸ்வரன், புளியம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் செல்லகுமார் மற்றும் அ.தி.மு.கவை சேர்ந்த மொளசி ஊராட்சி முன்னாள் தலைவர் வெள்ளி மணி, தெற்கு ஒன்றிய மகளிர் அணி ஈஸ்வரி மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் ராஜவேல், வரதராஜன் உள்ளிட்டோர் குவாரியை முற்றுகை யிட்டனர். ஆனால் அங்கு டிப்பர் லாரி, கல்லுடைக்கும் எந்திரங்கள் என்று எதுவும் இல்லாமல் 300 மீட்டர் அளவிற்கு நிலம் தோண்டப்பட்டு கற்கள் உடைக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது-

    குவாரியில் வெடி வைப்பதால் அருகில் உள்ள வீடுகளில் விரி சல் ஏற்படுகிறது. கெமிக்கல் பயன்படுத்தி கிரானைட் கற்கள் எடுப்பதால் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு விவசாய நிலங்களுக்கு நீர் இல்லாமல் பயிர்கள் வாடி விடுகிறது. இதே போல 10 கிலோமீட்டர் அருகிலுள்ள சித்தம் பூண்டி கிராமத்தில் குவாரிகள் அமைத்து அங்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிராம மக்கள் நீர் இன்றி தவித்து வருகின்றனர். அங்கு விவசாய நிலங்கள் பாழடைந்து விட்டது. விவசாய வளம் நிறைந்த இந்த கிராமப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருவதால் இந்த பகுதியில் குவாரி அமைக்க தடை கோரி பலமுறை மாவட்ட கலெக்டரிடமும், வட்டாட்சியரிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கல் குவாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    ×