என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலத்தில் இருந்து இன்று காலை சென்னை நோக்கி சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது.
    • அப்போது கண் இமைக்கும் நேரத்திற்குள் பஸ், ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற சொகுசு கார் மீது மோதியது.

    ஆத்தூர்:

    சேலத்தில் இருந்து இன்று காலை சென்னை நோக்கி சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. ஆத்தூர் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் திடீரென குறுக்கே புகுந்தது.

    இந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்த முயற்சித்தார். அப்போது சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் பஸ் பயங்கரமாக மோதி பக்கத்தில் உள்ள சாலையில் புகுந்து சென்றது.

    அப்போது கண் இமைக்கும் நேரத்திற்குள் பஸ், ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற சொகுசு கார் மீது மோதியது.

    இந்த கோர விபத்தில் சுற்றுலா பயணிகள் பயத்தில் அலறினர். இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அந்த வாகனத்தில் வந்த 2 பேர் படுகாயம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    விபத்தில் சுற்றுலா பஸ்சில் இருந்த பயணிகள், கார் டிரைவர் உள்ளிட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பொதுமக்கள், அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இருசக்கர வாகனத்தில் வந்த இவர்கள் 3 பேரும் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மேட்டூர் அணை பூங்காவிற்கு விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலாப் பணிகள் வந்தனர்.
    • காவிரியில் நீராடி அணைக் கட்டு முனியப்பனை தரி சித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மேட்டூர் அணை பூங்காவிற்கு விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலாப் பணிகள் வந்தனர். அவர்கள் காவிரியில் நீராடி அணைக் கட்டு முனியப்பனை தரி சித்தனர். நேர்த்தி கடனை நிறைவேற்ற ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    மீன்களை வாங்கி சுவைத்தும், அண்ணா பூங்காவிற்கு சென்று ஊஞ்ச லாடியும், சறுக்கு விளையாடி யும் மகிழ்ந்தனர். சிறிய வர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லா மல் விளையாடி மகிழ்ந்தனர்.

    மான், முயல்கள், பாம்புகள் மற்றும் மீன்காட்சி சாலையும் பார்த்து மகிழ்ந்தனர். நேற்று ஒரே நாளில் மேட்டூர் அணை பூங்காவிற்கு 7513 சுற்றுலா பணிகள் வந்து சென்றனர்.

    இதன் மூலம் பார்வையாளர் கட்டணமாக 37 ஆயிரத்து 565 வசூல் ஆனது. அணையின் வலது கரையில் உள்ள பவள விழா நினைவு கோபுரத்தை 772 சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றனர். இதன் மூலம் பார்வையாளர் கட்டணமாக ரூ.3860 வசூல் ஆனது.

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழக மற்றும் அண்டை மாநிலங்க ளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

    பக்ரீத் பண்டிகை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாளான கடந்த 4 நாட்களாக ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தி ருந்தனர். அவர்கள் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா, ஏரி பூங்கா, பகோடா பாயிண்ட், சேர்வரா யன் குகை கோவில், லேடிஸ் சீட், ஜெண்ட் சீட் என அனைத்து பகுதிகளிலும் குடும்பத்து டன் பார்த்து மகிழ்ந்தனர்.

    மேலும் படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்தி ருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்திருந்த தால் ஏற்காடு மலை பாதை யில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • ராஜசேகர், கலைவாணி தம்பதியினர் கடந்த 29-ந்தேதி துக்க நிகழ்விற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது சேலம் தாசநாயக்கன் பட்டி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
    • இந்த தம்பதியினருக்கு தனம் (வயது 12), பூர்ணி ( 10), கவின்அரசி (8) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் செட் டிச்சாவடி ஊராட்சியைச் சார்ந்த ராஜசேகர் - கலை வாணி தம்பதியினர் கடந்த 29-ந்தேதி துக்க நிகழ்விற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது சேலம் தாசநாயக்கன் பட்டி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த னர். இந்த தம்பதியினருக்கு தனம் (வயது 12), பூர்ணி ( 10), கவின்அரசி (8) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இவர்கள் 3 பேரும் விநா யகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் படித்து வருகின்றனர். 3 பேரும் அவரது தந்தை வழி பாட்டி உண்ணாமலை பாதுகாப்பில் உள்ளனர். விபத்தில் பெற்றோரை இழந்ததால் ஆதரவின்றி தவித்த 3 பேரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலரால் கவுன் சிலிங் வழங்கப்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து சேலம் குரும்பப்பட்டி அருகில் உள்ள பாட்டி உண்ணா மலையின் இல்லத்திற்கு நேரில் சென்று உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு கலெக்டர் கார்மேகம் ஆறுதல் கூறினார். மேலும், குழந்தைகள் 3 பேருக்கும் தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

    அப்போது, சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சேலம், சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே பஸ் சென்ற போது, அந்த வழியாக எதிரே சேலத்தை நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது.
    • அப்போது, லாரி பிரேக் பிடிக்காமல் எதிரே வந்த அரசு பஸ்சில் உரசி, ரவுண்டான சுவரில் மோதி நின்றது.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை நாமக்கல்லுக்கு அரசு பஸ் சென்று கொண்டி ருந்தது. சேலம், சீலநா யக்கன்பட்டி ரவுண்டானா அருகே பஸ் சென்ற போது, அந்த வழி யாக எதிரே சேலத்தை நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது.

    அப்போது, லாரி பிரேக் பிடிக்காமல் எதிரே வந்த அரசு பஸ்சில் உரசி, ரவுண்டான சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

    விபத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், லாரியை அப்புறப்படுத்தினர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில், லாரியின் பிரேக் திடிரென பழுதானதால், சுதாரித்துக் கொண்ட லாரி டிரைவர், பஸ் மீது மோதாமல் இருக்கு ஓரமாக நிறுத்த முயன்றபோது, பஸ்சில் உரசியது தெரியவந்தது. இந்த விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கிராமங்களில், மானாவரி மற்றும் பாசன விளை நிலங்களில் ஆண்டு தோறும் ஆண்டுகால பயிரான மரவள்ளியை விவசாயிகள் விரும்பி பயிரிட்டு வருகின்றனர்.
    • இந்த ஆய்வில், மரவள்ளி பயிர்களில் பரவலாக செம்பேன் சிலந்தி பூச்சி களின் தாக்குதல் இருப்பது தெரியவந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி, பெத்தநாயக் கன்பாளையம் பகுதி கிராமங்களில், மானாவரி மற்றும் பாசன விளை நிலங்களில் ஆண்டு தோறும் ஆண்டுகால பயிரான மரவள்ளியை விவசாயிகள் விரும்பி பயிரிட்டு வருகின்றனர்.

    பெத்தநாயக்கன் பாளை யம் பகுதியில் பயிரிடப் பட்டுள்ள மரவள்ளி பயிர்களில், இலையின் அடிப்பகுதியில் இருந்து சாறு உறிஞ்சி தாக்கும் செம்பேன் சிலந்தி தாக்குதலால், இலைகள் பழுத்து உதிர்ந்து பாதிப்பை ஏற்படுத்துவது தோட்டக் கலைத் துறையினருக்கு தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து, பெத்தநாயக்க ன்பாளையம் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் கோதைநாயகி, உதவி அலுவலர் மதியழகன் மற்றும் ஏத்தாப்பூர் மர வள்ளி ஆராய்ச்சி மைய பூச்சியியல் துறை பேராசி ரியர் சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர், பெத்தநாயக்க ன்பாளையம் பகுதியில் பயிரிடப் பட்டுள்ள மரவள்ளித் தோட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில், மரவள்ளி பயிர்களில் பரவலாக செம்பேன் சிலந்தி பூச்சி களின் தாக்குதல் இருப்பது தெரியவந்தது. அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து இக்குழுவினர் விவசாயி களுக்கு ஆலோசனை வழங்கினர். 

    • வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டு பழமையான திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாக்கள் நடத்துவதில் இரு கிராம மக்களிடையே முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அக்ர ஹாரத்தில் 200 ஆண்டு பழமையான திரவுபதி அம்மன் கோவில் அமைந் துள்ளது. இக்கோவிலில் பஞ்ச பாண்டவர்களான தருமர், அர்ஜூனன், பீமன், நகுலன், சகாதேவன் மற்றும் பாஞ்சாலி என்கிற திரவுபதி அம்மன், கிருஷ்ணர் உள்ளிட்ட சுவாமிகளின் மரச்சிற்ப சிலைகள் உள்ளன. இந்த சிலைகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.

    வாழப்பாடி மற்றும் மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாக்கள் நடத்துவதில் இரு கிராம மக்களிடையே முன்னோர்கள் காலந்தொட்டு பிணைப்பு தொடர்ந்து வருகிறது. வாழப்பாடியில் திரவுபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்தும் போது, மன்னாயக்கன்பட்டி கிராமத்தினரை அழைப் பதும், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் திருவிழா நடத்தும் போது, வாழப்பாடி கோயில்களிலுள்ள சுவாமிகளையும், நிர்வாகிகளையும் விருந்துக்கு அழைத்து செல்வதும் இன்றளவும் மரபாக தொடர்ந்து வருகிறது.

    வாழப்பாடி திரவுபதியம்மன் கோயில் தீ மிதித் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின், கடந்த மே மாதம் 23–-ந் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, மன்னாயக்கன்பட்டி கிராமத்திலும் மாரியம்மன் திருவிழா நடத்திட கிராம மக்கள் முடிவு செய்தனர். கடந்த ஜூன் 28-ந் தேதி சக்தி மாரியம்மனுக்கு திருக் கல்யாணமும், திருத்தேர் நிலை பெயர்த்தலும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது.

    இதற்காக தாரை, தப்பட்டை மேள வாத்தியம் முழங்க மிகுந்த ஆரவாரத் தோடு, 3 கி.மீ தொலை விலுள்ள வாழப்பாடி திரவுபதி அம்மன் கோயி லுக்கு ஊர்வலமாக திரண்டு வந்த மன்னாயக்கன்பட்டி கிராம மக்கள், கடந்த சிறப்பு பூஜைகள் செய்து மரச்சிற்ப சுவாமி சிலைகளை தோளில் சுமந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தபடி, மன்னாயக் கன்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு விருந்தினராக அழைத்து சென்றிருந்தனர். அங்கு இந்த சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டு வந்தனர்.

    தேர் திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்த பிறகு, 19 நாட்கள் கழித்து, வாழப்பாடியில் இருந்து விருந்துக்கு அழைத் துச் சென்ற சுவாமிகளை மேள வாத்தியம் முழங்க, மின்விளக்குகள், அம்மன் வேடமிட்ட கேரள நடன மங்கைகள் புடை சூழ, ஊர்வலமாக கொண்டு வந்து கோவிலில் சேர்த்தனர்.

    இந்த ஊர்வலத்தை வழிநெடுக திரண்டு நின்று கண்டுகளித்த இரு கிராம மக்களும் ஆரத்தியெடுத்து வரவேற்பளித்தனர். அருகருகே உள்ள இரு கிராமங்களுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில், சுவாமி சிலைகளை விருந்துக்கு அழைத்து செல்லும் பாரம்பரிய உறவு முன்னோர்கள் வழியாக பழமை மாறாமல் இன்றளவும் தொடர்ந்து வருவது இரு கிராம மக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இதுகுறித்து வாழப்பாடி ஊர் பெரியதனக்காரர்கள் கூறுகையில், 'வாழப்பாடிக்கும், மன்னாயக்கன்பட்டி கிராமத்திற்கும் திருவிழாக்கள் நடத்துவதில் முன்னோர்கள் வழியாக நல்லுறவு நீடித்து வருகிறது. மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் தேர்த்திருவிழா நடத்தும் போது, வாழப்பாடிக்கு வந்து சுவாமி சிலைகளை விருந்தினராக அழைத்து சென்று சிறப்பு பூஜை வழிபாடு நடத்துவதும், வாழப்பாடி கோயில்களை நிர்வகிக்கும் ஊர் பெரியதனக்காரர்களை அழைத்து சென்று விருந்து கொடுப்பதையும் இன்றளவும் தொடர்ந்து வருகின்றனர்.

    வாழப்பாடியில் திரெளபதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள் நடத்தும் போது, மன்னாயக்கன்பட்டி கிராமத்தினரை அழைத்து, வாழப்பாடி கிராம மக்கள் மரியாதை செய்து வருவதும் குறிப்பிடதக்கதாகும் என்றனர்.

    • 17 அம்ச கோரிக்கைகளை தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சேலம் மாவட்டத்தில் மட்டும் தினமும் 50 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    ஓமலூர்:

    தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கல் குவாரிகளும் 3ஆயிரம் மேற்பட்ட கிரஷர்களும் செயல்பட்டு வருகின்றன. ஜல்லி, எம்.சாண்ட் ஆகியவை பள்ளி, மருத்துவமனை, சாலை, பாலங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணி களுக்கும் தேவையாக உள்ளது. தற்போது பெரிய அளவில் கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட விதிகளை, சிறிய அளவிலான கல் குவாரிகளுக்கும், ஜல்லி உடைக்கும் சிறு கிரசர்களுக்கும் கனிம வளத்துறை அமல்படுத்தி உள்ளது.

    அதனால் இந்த தொழிலில் உள்ளவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு, தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக கூறுகின்றனர். மேலும், உள்ளூரிகளில் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் அச்சுறுத்தல் செய்கின்றனர். மேலும், கனிம வளம் கடத்தல், கனிம வளம் கொள்ளை என அச்சுறுத்தி, குவாரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்படுவதாக குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

    இந்நிலையில், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் குவாரிகளில் பல்வேறு குறைகளை கண்டறிந்து பல கோடி ரூபாய் அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூரிலும் கடந்த 26-ம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 2 ஆயிரத்து 500 கல் குவாரிகள், 3 ஆயிரம் கிரஷர்கள் இயங்காமல் முடங்கியுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் எம்.சாண்ட், ஜல்லி கற்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், கட்டுமான தொழிலும் ஸ்தம்பித்து வருகிறது. தொடர்ந்து ஓமலூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தியும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்தும் அரசுக்கு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

    மேலும், அங்கேயே சமைத்து சாப்பிட்டு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுபற்றி சேலம் மாவட்ட குவாரி கிரஷர் சங்க மாவட்ட செயலாளர் ராஜா கூறும்போது, எங்களது சிறு குவாரிகளில் உற்பத்தி செய்யப்படும் ஜல்லி, எம்.சான்ட் அரசு பணிகளுக்கே 80 சதவீதம் அனுப்பப்படுகிறது. மீதமுள்ள 20 சதவீதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்கபடுகிறது. தற்போது குவாரி தொழில் நிறுத்தப்பட்டுள்ளதால், சேலம் மாவட்டத்தில் மட்டும் தினமும் 50 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 300 கோடி ரூபாய் தினமும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், தமிழ்நாடு முதல்வர் குவாரி கிரசர் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றி தொழில் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். 

    • போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் மீது கல் வீசிய நபர்களை தேடி வந்தனர்.
    • பஸ் மீது கல்வீசிய பெரிய வீராணம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் மகன் பாலாஜி என்பவரை கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வலசையூருக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் கடந்த 28-ந் தேதி பெரிய வீராணம் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது மர்ம நபர்கள் 2 பேர் பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடினர். இது குறித்து அரசு பஸ் கண்டக்டர் வீராணம் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் மீது கல் வீசிய நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், பஸ் மீது கல்வீசிய பெரிய வீராணம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் மகன் பாலாஜி (வயது 18) என்பவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கைதான பாலாஜியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, வாய்க்கால் பட்டறை பகுதியில் பஸ்சில் ஏறிய போது அந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர், தன்னிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பஸ் மீது கல்வீசியதாகவும் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.
    • மேட்டூர் அணையில் நேற்று 88.58 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 87.65 அடியாக சரிந்துள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 800 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலையும் அதே அளவில் நீடிக்கிறது.

    அதே சமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 117 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 223 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.

    வரத்தைவிட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 88.58 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 87.65 அடியாக சரிந்துள்ளது.

    • ரிசர்வ் வங்கியால் அனைத்திந்திய அளவில் விநாடி-வினா போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
    • இந்தப் போட்டிகளில் 8 முதல் 10 வரையிலான வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ரிசர்வ் வங்கியால் அனைத்திந்திய அளவில் விநாடி-வினா போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள் ளன. இந்தப் போட்டிகளில் 8 முதல் 10 வரையிலான வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

    மேலும் இப்போட்டிகள் வட்டார மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படவுள்ளன. இந்த விநாடி-வினா போட்டி களில் ஆர்பிஐ., என்சிஎப்இ இணையதளத்தில் இடம் பெற்றுள்ள நிதிசார் கல்வி தொடர்பான விவரங்கள், வங்கிகள், பொருளாதாரம் தொடர்பான தற்போதைய நிகழ்வுகள், ஜி20 அமைப்பு உள்ளிட்டவற்றின் அடிப் படையில் போட்டிக்கான வினாக்கள் இடம்பெறும்.

    போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள பள்ளி அளவி லான விநாடி-வினா மற்றும் செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு மாணவர், ஒரு மாணவி அடங்கிய இரு நபர் குழுவை பள்ளியில் தேர்வு செய்து வட்டார அளவிலான போட்டிக ளுக்கு தலைமை ஆசிரி யர்கள் பரிந்துரைக்க வேண்டும்.

    நாளை தொடக்கம்

    மாவட்டக் கல்வி அலுவலர் (இடை நிலை), மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் இந்திய ரிசர்வ் வங்கி அலுவலர்க ளுடன் இணைந்து வட்டார அளவிலான போட்டிகளை நாளை முதல் 5-ந் தேதி வரை நடத்த திட்டமிட வேண்டும்.

    மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகள் நடத்துதல் சார்ந்து மாவட்ட முன்னோடி வங்கி மேலா ளர் உடன் இணைந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் சின்னதிருப்பதி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் டவுன் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
    • சர்க்கரை மற்றும் சிறுநீரக நோய் இருந்து வந்தது. இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் சின்னதிருப்பதி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 53). இவர் டவுன் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு சர்க்கரை மற்றும் சிறுநீரக நோய் இருந்து வந்தது. இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த சிறப்பு இன்ஸ்பெக்டர் பாஸ்கருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். அவரது உடலுக்கு சேலம் மாநகர போலீசார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் உள்ள இளநிலைப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான பொது நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அண்மையில் நடத்தியது.
    • இந்த தேர்வை சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் எழுதியுள்ளனர். இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு ஜூன் 29-ம் தேதி வெளியிடப்பட்டது.

    சேலம்:

    மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் உள்ள இளநிலைப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான பொது நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அண்மையில் நடத்தியது.

    இந்த தேர்வை சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் எழுதியுள்ளனர். இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு ஜூன் 29-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் பல கேள்விகளுக்கான விடைகள் தவறாக குறிக்கப் பட்டுள்ளதாகத் தேர்வர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    குறிப்பிட்ட வினாவுக் கான விடை குறித்து முறையீடு செய்ய விரும்பும் மாணவர்கள், ஒவ்வொரு வினாவுக்கும் தலா ரூ.200 செலுத்த வேண்டும் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது.

    இதற்கு தேர்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர். கட்டணம் அதிகமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் கூறுகையில், என்டிஏ முறையின்றி கட்டணம் வசூலிப்ப தாகக் கூறுவது தவறான குற்றச்சாட்டு. அந்த அமைப்பு லாப நோக்க மற்று இயங்கும் தன்மை உடையது. வசூலிக்கப்படும் கட்டணமா னது விடையை மறுமதிப்பீடு செய்யும் நிபுணர்களுக்கே வழங்கப்படும்.

    விடைக் குறிப்பில் தவறு கள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. தட்டச்சு செய்வ தில் ஏற்பட்ட பிழையாக அது இருக்கலாம். திருத்தப் பட்ட விடைக்குறிப்பு 2 நாள்களுக்குள் வெளியிடப் படும்.

    விடைக் குறிப்பில் தவறுகள் ஏதேனும் இருந்தால், அது தொடர்பாக என்டிஏ-வுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தேர்வர்கள் தெரிவிக்கலாம். அக்கருத்து ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தால், அது நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என்றார்.

    ×