என் மலர்tooltip icon

    சேலம்

    • பேளூரில் வசிஷ்டநதி கரையிலுள்ள 1000 ஆண்டு பழமையான அங்காளம்மன் கோவிலில் இருந்த கொடி மரம் பழுதானது.
    • கேரள மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட, 100 ஆண்டுகள் முதிர்ந்த மருத்துவ குணம் கொண்ட வேங்கை மரத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கொடி மரம் செதுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த பேளூர் பழமைக்கும் தொன்மைக்கும் இன்றளவும் சான்றாக விளங்கி வருகிறது. பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் காணப்படும் ஆதித்த கரிகாலன் காலத்திய கல்வெட்டும், பேளூர் அங்காளம்மன் கோயிலில் காணப்படும் முதலாம் பராந்தக சோழன் காலத்திய கல்வெட்டும், தனியார் விவசாய நிலத்தில் காணப்படும் நாயக்கர் கால மூக்கறுப்பு போர் கல்வெட்டும் இதனை உறுதிப்படுத்துகின்றன.

    பேளூரில் வசிஷ்டநதி கரையிலுள்ள 1000 ஆண்டு பழமையான அங்காளம்மன் கோவிலில் இருந்த கொடி மரம் பழுதானது. இதையடுத்து, கேரள மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட, 100 ஆண்டுகள் முதிர்ந்த மருத்துவ குணம் கொண்ட வேங்கை மரத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கொடி மரம் செதுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதனையொட்டி நடைபெற்ற சிறப்பு யாக பூஜை வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண் டனர். வெள்ளிக்கவச அலங்காரத்தில் மூலவரான அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாக்குழுவினர் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.

    • ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான தவணைத் தொகையை பெற பி.எம் கிசான் இணையதளத்தில் ஆதார் தகவல்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே தவணை தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    • விவசாயிகள் பொது இ-சேவை மையத்தில், கணினி உபகரணத்தில் கைவிரல் ரேகை வைத்து பி.எம். கிசான் இணையதளம் சென்று தங்களுடைய விவரங்களை நிறைவு செய்ய வேண்டும்

    மேட்டூர்:

    விவசாயிகள் ஆதார் எண் அடிப்படையில் விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் வாங்க மத்திய அரசு ஆண்டுதோறும் 3 தவணையாக ரூ.6000 உதவித்தொகை வழங்குகிறது.

    இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான தவணைத் தொகையை பெற பி.எம் கிசான் இணையதளத்தில் ஆதார் தகவல்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே தவணை தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    எனவே விவசாயிகள் பொது இ-சேவை மையத்தில், கணினி உபகரணத்தில் கைவிரல் ரேகை வைத்து பி.எம். கிசான் இணையதளம் சென்று தங்களுடைய விவரங்களை நிறைவு செய்ய வேண்டும்.

    மேலும் இது குறித்து விவரங்களை பெற வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கொளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜகோபால் தெரிவித்து உள்ளார்.

    • சேலம்-கோவை இடையே மெமு ரெயில் எனப்படும் பயணிகள் ரெயில் (வண்டி எண்-06803) ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.
    • தண்டவாள பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள தால் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை ஒரு மாதத்திற்கு இந்த இரு மார்க்கங்களிலும் மெமு ரெயில் ரத்து செய்யப் படுகிறது.

    சேலம்:

    சேலம்-கோவை இடையே மெமு ரெயில் எனப்படும் பயணிகள் ரெயில் (வண்டி எண்-06803) ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் மறுமார்க்கத் திலும் (வண்டி எண்-06802) இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேலம்-ஈரோடு வரையிலான தண்டவாள பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள தால் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை ஒரு மாதத்திற்கு இந்த இரு மார்க்கங்களிலும் மெமு ரெயில் ரத்து செய்யப் படுகிறது.

    இதே போல் திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பாதையில் பராமரிப்பு பணி நடை பெறுகிறது.

    இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈரோட்டில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்படும் ஈரோடு- ஜோலார்பேட்டை ரெயில் (வண்டி எண் 06412) மற்றும் ஜோலார் பேட்டை யில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் ஜோலார்பேட்டை - ஈரோடு ரெயில் (வண்டி எண் 06411) ஆகிய ரெயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • மேட்டூர் நகராட்சி பொறி யாளர் மணிமாறன், நக ராட்சி ஆணையாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
    • நேற்று (30-ந் தேதி) அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சி பொறி யாளர் மணிமாறன், நக ராட்சி ஆணையாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். நேற்று (30-ந் தேதி) அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    மணிமாறன் நங்கவள்ளி பேரூராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றியபோது, பேரூராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகவும் அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் சிவதாஸ் மீனா நகராட்சி பொறியாளர் மணிமாறனை சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத் தூர் அருகே கருங்கலூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கொளத்தூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கருங்கல்லூர் அருகே காளையனூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத் தூர் அருகே கருங்கலூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கொளத்தூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து கொளத்தூர் போலீசார் கருங்கல்லூர் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, கருங்கல்லூர் அருகே காளையனூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயசு 45) என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

    • அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
    • டெல்டா பகுதிகளில் மழை பெய்து வருவதால், நீரின் தேவை குறைந்துள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 800 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலையும் அதே அளவில் நீடிக்கிறது.

    அதேசமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 145 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 121 கன அடியாக குறைந்துள்ளது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், டெல்டா பகுதிகளில் மழை பெய்து வருவதால், நீரின் தேவை குறைந்துள்ளது.

    இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு, நேற்று மதியம் முதல் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 90.45 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 89.51 அடியாக சரிந்துள்ளது.

    • தி.மு.க. அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறி விட்டது.
    • தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்துவிட்டது.

    எடப்பாடி :

    தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று தனது சொந்த தொகுதியான எடப்பாடி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3 கோடியே 21 லட்சத்தில் முடிந்த திட்டப்பணிகள் திறப்பு விழா, புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.

    விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும், முடிந்த திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும், அ.தி.மு.க. கொடியேற்றி வைத்தும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் உள்ள தி.மு.க. அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறி விட்டது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர். ஆட்சியில் இருப்பவர்கள் ஊழல் செய்வதிலேயே கவனம் செலுத்துவதால், மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்வது இல்லை. அதற்கு உதாரணமாகத்தான், நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ வெளியானது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி, பல்வேறு வகைகளில் அதிகமான தொகையை ஊழல் செய்து முதல்-அமைச்சரின் குடும்பத்திற்கு வழங்கிய காரணத்தினாலேயே அவரை முதல்- அமைச்சரும், மற்ற அமைச்சர்களும் உடன் இருந்து கவனித்து கொள்கிறார்கள். மூத்த அமைச்சரான துரைமுருகன் ஆஸ்பத்திரியில் இருந்த போது கூட போய் பார்க்காத முதல்- அமைச்சர், செந்தில்பாலாஜியை ஆஸ்பத்திரிக்கு சென்று பார்க்க என்னகாரணம்.

    செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் அல்ல, மற்ற அமைச்சர்களின் பதவிக்கும் ஆபத்தாகி விடும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட குடிமராமத்து பணிகள், காவிரி உபரிநீர் பாசன திட்டம், ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம், பெண்களுக்கு மானியத்தில் இருசக்கர வாகனம், மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கிஉள்ளது.

    இதுதான், 2 ஆண்டு கால தி.மு.க. அரசின் சாதனையாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், அவர்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

    தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை சம்பவங்கள், போதை பொருட்கள் நடமாட்டம், போலி மது விற்பனை அதிகரித்து வருகிறது. இதை வைத்து பார்த்தால், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்துவிட்டது.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • ஆதாருடன் பான்கார்டு எண்ணை இணைக்க இன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
    • இதனால் பலர் ஆர்வமுடன் கணினி வாயிலாக இணைத்து வருகின்றனர்.

    சேலம்:

    வருமான வரி ஏய்ப்பை தடுப்பதற்காக ஆதாருடன் பான்கார்டு எனப்படும் நிரந்தர வருமான வரிக்கணக்கு எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

    இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதி வாய்ப்பாக இன்று (30-ந்தேதி) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

    1000 ரூபாய் அபராதமாக செலுத்தி இந்த தேதிக்குள் ஆதார்-பான் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு மேல் கால அவகாசம் அளிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் நாளை முதல் செயலற்றதாகிவிடும். ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு டி.டி.எஸ். பிடித்தம், மற்றும் செலுத்தும் விகிதம் அதிகரிக்கப்படும்.

    வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. வருமான வரித்துறையில் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் வட்டி ரத்து செய்யப்படும்.

    ஆதார்- பான் இணைக்க விரும்புவோர் மற்றும் தங்களின் இணைப்பு நிலவரத்தை தெரிந்து கொள்ள விரும்புவோர் மத்திய அரசின் வருமான வரித்துறை இணைய தளத்தை பயன்படுத்துமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று கடைசி நாள் என்பதால் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பான்கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் ஆர்வமுடன் கணினி வாயிலாக இணைத்து வருகின்றனர்.

    • நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.
    • அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    சங்ககிரி:

    ஆசிய வளர்ச்சி வங்கியின் 50 சதவீத நிதி உதவியுடன், சென்னை கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம், நெடுஞ்சாலைத் துறை மூலம் சேலம் மாவட்டத்தில் ஓமலூர் முதல் சங்ககிரி வரையிலான  சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது.

    இச்சாலைப் பணியின் தரத்தினை சென்னை தலைமைப் பொறியாளர் செல்வன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒப்பந்தாரர்களிடம் சாலைப் பணிகளை விரைவாகவும், தர மாகவும் முடிக்க அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது, கோட்டப் பொறியாளர் சசிகுமார், உதவிக் கோட்டப் பொறியாளர் பொறியாளர் தாரகேஸ்வரன் மற்றும் சாலைப் பணியின் ஒப்பந்ததாரர்கள், மேற்பார்வை ஆலோசகர்க ளும் உடன் இருந்தனர்.

    தொடர்ந்து தலைமை பொறியாளர் செல்வன் பல்வேறு பகுதிகளில் நடை பெறும் சாலைப்பணிகளை ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அவர் உத்தரவிட்டார்.

    7 பேர் ஓய்வு

    சேலம்:

    சேலம் மாநகர காவல் துறையில் இன்று ஒரே நாளில் போலீஸ் துணை கமிஷனர் உட்பட 7 பேர் ஓய்வு பெறுகிறார்கள்.

    அதன்படி, சேலம் மாநகர துணை கமிஷனர் குணசே கரன், மாநகர போலீஸ் கமிஷனரின் நேர்முக உதவி யாளர் மாலதி, நுண்ணறிவு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், அம்மாபேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமி முத்து, கொண்ட லாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேக ரன், நில அபகரிப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அமீர்ஜான், போக்குவரத்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் அழகுவேல் ஆகி யோர் ஓய்வு பெறுகின்றனர். 

    • கடந்த 2022-ம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது
    • நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசருக்கு தகவல்

    சேலம்:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பாப்பிசெட்டி பள்ளி அடுத்த ராசன்ன பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் மகன் இனோ ஆண்ட்ரூஸ் (வயது 41). இவர் மீது கடந்த 2013-ம் ஆண்டு ஈமு கோழி பண்ணை பண மோசடி தொடர்பாக நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    நாமக்கல் கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்து கடந்த 2022-ம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதன்பின்னர் தலைமறை வான இவரை நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் தலைமை யிலான போலீசார் சீலநா யக்கன்பட்டி பகுதியில் உள்ள விடுதிகளில் வழக்க மான சோதனையை மேற்கொண்டனர். அப்போது ஒரு விடுதியில், நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் தேடப்பட்டு வரும் இனோ ஆண்ட்ரோஸ் இருப்பது தெரியவந்தது.

    அதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் இன்று காலை சேலத்திற்கு வந்து இனோ ஆண்ட்ரூசை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    • 2 பேர் போதையில் பஸ் படிக்கட்டில் நின்றிருந்தனர்.
    • உள்ளே வர வில்லை என்றால் வேறு வண்டியில் வரும்படி தெரி வித்ததால் இருவரும் படிக் கட்டில் இருந்து பஸ்சுக்குள் வந்தனர்.

    சேலம்:

    சேலத்தில் இருந்து வலசையூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு 9.20 மணிக்கு அரசு டவுன் பஸ் சென்றது. அப்போது 2 பேர் போதையில் பஸ் படிக்கட்டில் நின்றிருந்தனர். இதனை பார்த்த கண்டக்டர் செல்வராஜ், இருவரையும் மேலே ஏறி வரும்படி கூறியுள்ளார்.

    ஆனால், அவர்கள் அதனை கேட்காமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது உள்ளே வர வில்லை என்றால் வேறு வண்டியில் வரும்படி தெரி வித்ததால் இருவரும் படிக் கட்டில் இருந்து பஸ்சுக்குள் வந்தனர்.

    பஸ் கண்ணாடி உடைப்பு

    இதனிடையே பஸ் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் அருகே நின்றது. அப்போது போதை நபர்கள் இருவரும் கீழே இறங்கிய நிலையில் திடீரென அங்கு வந்த 2 மர்ம நபர்கள் பஸ்சின் கண்ணாடி மீது கற்களை வீசி உடைத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இந்த சம்பவத்தால் பஸ்சில் பயணம் செய்த பய ணிகள் அதிர்ச்சி அடைந்த னர். இந்த சம்பவம் குறித்து டிரைவர் நடராஜ், வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அரசு பஸ்சை சேதப்படுத்திய 4 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    வழக்குகள் பாய்ந்தது

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பஸ்சுக்குள் போதை யில் பயணம் செய்த 2 பேரும், செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, அங்கு தங்களது நண்பர் களை வரவழைத்து பஸ்சின் கண்ணாடியை உடைத்தி ருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேர் மற்றும் தகராறில் ஈடுபட்ட போதை நபர்கள் 2 பேர் ஆகியோர் மீது பொதுச் சொத்தை சேதப்ப டுத்துதல், பயணிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அச்சு றுத்தலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை போலீ சார் வலைவீசி தேடி வரு கின்றனர்.

    ×