search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cell phone confiscated"

    • சேலம் லயன்மேடு வேலுப்பிள்ளை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் குமரே சன் இவர் நேற்று இரவு 11.30 மணி அளவில் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
    • 2 வாலிபர்கள் திடீரென குமரேசன் கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    சேலம்:

    சேலம் லயன்மேடு வேலுப்பிள்ளை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் குமரே சன் (வயது 41). இவர் நேற்று இரவு 11.30 மணி அளவில் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் திடீரென குமரேசன் கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில், குமரேசனிடம் செல்போனை பறித்த மணியனூர் நேதாஜி தெரு காந்தி நகர் பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் மணிகண்டன் (25), தாதகாப்பட்டி பெருமாள் கோயில் மேடு பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் என்கிற மணி (38) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தூத்துக்குடி கே.வி.கே.நகரை சேர்ந்தவர் ஏகாம்பரநாதன் . இவர் ரெயில்வேயில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • சின்னகண்ணுபுரம் மீளவிட்டான் சாலையில் சென்ற போது 3 வாலிபர்கள் அவரை மறித்து மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கே.வி.கே.நகரை சேர்ந்தவர் ஏகாம்பரநாதன் (வயது22). இவர் ரெயில்வேயில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று வழக்கம் போல பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் சின்னகண்ணுபுரம் மீளவிட்டான் சாலையில் சென்ற போது 3 வாலிபர்கள் அவரை மறித்து மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக அவர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்ேபரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தி தூத்துக்குடியை சேர்ந்த மாதவன் (21), இன்பராஜ் (20) உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். 

    • உமா சங்கர் பிளம்பர் தொழில் செய்து வருகிறார்.
    • 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரிடம் இருந்து செல்போனை பறித்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை பொள்ளாச்சி ரோடு மலுமிச்சம்பட்டி அன்பு நகரை சேர்ந்தவர் உமா சங்கர் (வயது51) பிளம்பர் தொழில் செய்து வருகிறார். தனது சொந்த வேலை காரணமாக சுந்தராபுரம் வந்துவிட்டு திரும்பி மலுச்சம்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எல்.ஐ.சி காலனி அருகே வந்தபோது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது சட்டை பையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றர். இதுகுறித்து போத்தனூர் போலீஸ் நிலையத்தில் உமா சங்கர் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போத்தனூர் போலீசார் செல்போன் பறித்துக் கொண்டு ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×