தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு

உமா சங்கர் பிளம்பர் தொழில் செய்து வருகிறார். 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரிடம் இருந்து செல்போனை பறித்தனர்.
தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு
Published on

குனியமுத்தூர்,

கோவை பொள்ளாச்சி ரோடு மலுமிச்சம்பட்டி அன்பு நகரை சேர்ந்தவர் உமா சங்கர் (வயது51) பிளம்பர் தொழில் செய்து வருகிறார். தனது சொந்த வேலை காரணமாக சுந்தராபுரம் வந்துவிட்டு திரும்பி மலுச்சம்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எல்.ஐ.சி காலனி அருகே வந்தபோது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது சட்டை பையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றர். இதுகுறித்து போத்தனூர் போலீஸ் நிலையத்தில் உமா சங்கர் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போத்தனூர் போலீசார் செல்போன் பறித்துக் கொண்டு ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com