சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

சேலம் லயன்மேடு வேலுப்பிள்ளை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் குமரே சன் இவர் நேற்று இரவு 11.30 மணி அளவில் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். 2 வாலிபர்கள் திடீரென குமரேசன் கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது
Published on

சேலம்:

சேலம் லயன்மேடு வேலுப்பிள்ளை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் குமரே சன் (வயது 41). இவர் நேற்று இரவு 11.30 மணி அளவில் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் திடீரென குமரேசன் கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், குமரேசனிடம் செல்போனை பறித்த மணியனூர் நேதாஜி தெரு காந்தி நகர் பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் மணிகண்டன் (25), தாதகாப்பட்டி பெருமாள் கோயில் மேடு பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் என்கிற மணி (38) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com