சேலத்தில் குளியலறையில் தவறி விழுந்த வாலிபர் பரிதாப சாவு

வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தவறி விழுந்தார். இந்த சத்தத்தை கேட்ட குடும்பத்தினர் உடனடியாக தினகர்பாபுவை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர்.
சேலத்தில் குளியலறையில் தவறி விழுந்த வாலிபர் பரிதாப சாவு
Published on

சேலம்:

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள காசக்காரனூர் கென்னடி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் தினகர்பாபு (வயது 26).

இவர் நேற்று மதியம் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தவறி விழுந்தார். இந்த சத்தத்தை கேட்ட குடும்பத்தினர் உடனடியாக தினகர்பாபுவை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தினகர்பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com