என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விபத்தில் பெற்றோர்களை இழந்த 3 பெண் குழந்தைகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கலெக்டர்
    X

    3 பெண் குழந்தைகளையும் கலெக்டர் கார்மேகம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காட்சி.

    சாலை விபத்தில் பெற்றோர்களை இழந்த 3 பெண் குழந்தைகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கலெக்டர்

    • ராஜசேகர், கலைவாணி தம்பதியினர் கடந்த 29-ந்தேதி துக்க நிகழ்விற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது சேலம் தாசநாயக்கன் பட்டி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
    • இந்த தம்பதியினருக்கு தனம் (வயது 12), பூர்ணி ( 10), கவின்அரசி (8) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் செட் டிச்சாவடி ஊராட்சியைச் சார்ந்த ராஜசேகர் - கலை வாணி தம்பதியினர் கடந்த 29-ந்தேதி துக்க நிகழ்விற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது சேலம் தாசநாயக்கன் பட்டி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த னர். இந்த தம்பதியினருக்கு தனம் (வயது 12), பூர்ணி ( 10), கவின்அரசி (8) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இவர்கள் 3 பேரும் விநா யகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் படித்து வருகின்றனர். 3 பேரும் அவரது தந்தை வழி பாட்டி உண்ணாமலை பாதுகாப்பில் உள்ளனர். விபத்தில் பெற்றோரை இழந்ததால் ஆதரவின்றி தவித்த 3 பேரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலரால் கவுன் சிலிங் வழங்கப்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து சேலம் குரும்பப்பட்டி அருகில் உள்ள பாட்டி உண்ணா மலையின் இல்லத்திற்கு நேரில் சென்று உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு கலெக்டர் கார்மேகம் ஆறுதல் கூறினார். மேலும், குழந்தைகள் 3 பேருக்கும் தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.

    அப்போது, சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×