என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கு ரிசர்வ் வங்கி நடத்தும் விநாடி-வினா
    X

    பள்ளி மாணவர்களுக்கு ரிசர்வ் வங்கி நடத்தும் விநாடி-வினா

    • ரிசர்வ் வங்கியால் அனைத்திந்திய அளவில் விநாடி-வினா போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
    • இந்தப் போட்டிகளில் 8 முதல் 10 வரையிலான வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ரிசர்வ் வங்கியால் அனைத்திந்திய அளவில் விநாடி-வினா போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள் ளன. இந்தப் போட்டிகளில் 8 முதல் 10 வரையிலான வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

    மேலும் இப்போட்டிகள் வட்டார மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படவுள்ளன. இந்த விநாடி-வினா போட்டி களில் ஆர்பிஐ., என்சிஎப்இ இணையதளத்தில் இடம் பெற்றுள்ள நிதிசார் கல்வி தொடர்பான விவரங்கள், வங்கிகள், பொருளாதாரம் தொடர்பான தற்போதைய நிகழ்வுகள், ஜி20 அமைப்பு உள்ளிட்டவற்றின் அடிப் படையில் போட்டிக்கான வினாக்கள் இடம்பெறும்.

    போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள பள்ளி அளவி லான விநாடி-வினா மற்றும் செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு மாணவர், ஒரு மாணவி அடங்கிய இரு நபர் குழுவை பள்ளியில் தேர்வு செய்து வட்டார அளவிலான போட்டிக ளுக்கு தலைமை ஆசிரி யர்கள் பரிந்துரைக்க வேண்டும்.

    நாளை தொடக்கம்

    மாவட்டக் கல்வி அலுவலர் (இடை நிலை), மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் இந்திய ரிசர்வ் வங்கி அலுவலர்க ளுடன் இணைந்து வட்டார அளவிலான போட்டிகளை நாளை முதல் 5-ந் தேதி வரை நடத்த திட்டமிட வேண்டும்.

    மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகள் நடத்துதல் சார்ந்து மாவட்ட முன்னோடி வங்கி மேலா ளர் உடன் இணைந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×