என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி வெளியே சாலை ஓரத்தில் மாணவிகள் சைக்கிள்களை நிறுத்தி உள்ள காட்சி.
அம்மாப்பேட்டை பள்ளியில் நிழற்கூடம் இல்லாததால் மாணவிகளின் சைக்கிள்கள் வீணாகும் அவலம்
- அம்மாப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதி களைச் சேர்ந்த மாணவிகள் பலர் படிக்கின்றனர்.
- மாணவி கள் பள்ளிக்கு வந்து செல்வதற்கு பயன்படுத்தும் சைக்கிள்களை நிறுத்து வதற்கு, பள்ளி வளாகத்தில் இடம் இல்லாததால், பள்ளிக்கு வெளியே சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் அம்மாப் பேட்டையில், சேலம்-ஆத்தூர் நெடுஞ்சாலையை ஒட்டி நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அம்மாப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதி களைச் சேர்ந்த மாணவிகள் பலர் படிக்கின்றனர். மாண விகள் பள்ளிக்கு வந்து செல்வதற்கு வசதியாக, தமிழக அரசு சார்பில் விலையில்லா சைக்கிள்கள் மாணவிகளுக்கு வழங்கப் பட்டுள்ளன.
இதனைப் பயன்படுத்தி அம்மாப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்து மாணவிகள், தினமும் பள்ளிக்கு வந்த செல்கின்றனர்.
இந்நிலையில், மாணவி கள் பள்ளிக்கு வந்து செல்வதற்கு பயன்படுத்தும் சைக்கிள்களை நிறுத்து வதற்கு, பள்ளி வளாகத்தில் இடம் இல்லாததால், பள்ளிக்கு வெளியே சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான் மாணவிகள் தங்களது சைக்கிள்களை நிறுத்திவிட்டு தினமும் பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால், திறந்தவெளியில் நிறுத்தப்படுவதால், சைக்கிள்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. எனவே, சைக்கிள் நிறுத்துமிடம் அமைப்பதற்கு, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
மாணவிகள் சிரமமின்றி பள்ளிக்கு வந்து செல்ல வேண்டும் என்பதற்காக, அரசு சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப் பட்டுள்ளன.
ஆனால், அவற்றை நிறுத்தி வைக்க பள்ளியில பாதுகாப்பான இடம் இல்லாமல் பள்ளிக்கு வெளியே திறந்தவெளியில் நிறுத்த வேண்டிய அவலம் நீடிக்கிறது. இதானல், நாள் முழுவதும் வெயிலிலேயே சைக்கிள்கள் நிற்க வேண்டி யதாகிறது. இதேபோல், மழைக்காலத்தில் சைக்கிள்கள் மழையில் நனைவதும் தொடர்கிறது.
இதனால், சைக்கிள்கள் துருப்பிடித்தல், சக்கரத்தில் உள்ள டயர், டியூப் ஆகி யவை சேதமடைவது, அடிக்கடி பழுதடைவது ஆகியவை நிகழ்கின்றன.
அடிக்கடி செலவு செய்து, சைக்கிளை சீரமைக்க வேண்டியுள்ளது. ஏழை மாணவிகளால், சைக்கிளுக்கு அடிக்கடி செலவு செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், ஓராண்டுக்குள்ளாகவே சைக்கிள்களை பயன்படுத் முடியாத நிலை ஏற்பட்டு, மாணவிகள் அவதியடை கின்றனர். எனவே, மாணவி களின் சைக்கிள்களை பள்ளியில் பாதுகாப்பாக நிறுத்த நிழற்கூடம் அமைக்க பள்ளி நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






