என் மலர்
சேலம்
- ஆடுகளுக்கு கொடுப்பதற்காக வீட்டின் பின்புறம் வனபகுதியை ஒட்டியுள்ள மரத்தில் கிளைகளை தனபாக்கியம் ஒடித்துக் கொண்டிருந்தார்.
- தனபாக்கியத்தை காட்டெருமை தாக்குவதை கண்ட அவரது வளர்ப்பு நாய் குறைத்ததால் காட்டெருமை அங்கிருந்து ஓடி விட்டது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொலகூர் கிராமம். இங்கு ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பெரும்பாலான வீடுகள் வனப்பகுதியை ஒட்டியே உள்ளன. இதனால் அவ்வப்போது காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் கிராம பகுதிக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலை கொலகூர் மிதுவகாடு பகுதியில் வசிக்கும் ஜெயமணி என்பவரது மனைவி தனபாக்கியம் (48) வீட்டிற்கு அருகில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது ஆடுகளுக்கு கொடுப்பதற்காக வீட்டின் பின்புறம் வனபகுதியை ஒட்டியுள்ள மரத்தில் கிளைகளை ஒடித்துக் கொண்டிருந்தார்.
அந்த மரத்திற்கு அருகே காட்டெருமை படுத்திருந்தது. இதை கவனிக்காமல் தனபாக்கியம் தொடர்ந்து மரக்கிளைகளை ஒடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென காட்டெருமை அவரை முட்டி தாக்கியது.
இந்த நிலையில் தனபாக்கியத்தை காட்டெருமை தாக்குவதை கண்ட அவரது வளர்ப்பு நாய் குறைத்ததால் காட்டெருமை அங்கிருந்து ஓடி விட்டது. இதனிடையே தனபாக்கியத்தின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர்.
பலத்த காயமடைந்து இருந்த அவரை மீட்டு ஏற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்றிரவு முதல் விடிய விடிய ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டு வருகிறார்கள்
- கோவில் வளாகத்தை சுற்றி சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஆடித்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
அதன்படி நடப்பாண்டு திருவிழா கடந்த மாதம்25-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள் தோறும் இரவு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் வைபவம் நேற்று தொடங்கியது. இதயைடுத்து நேற்று காலை முதலே கோவிலுக்கு வந்த பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து நேற்றிரவு முதல் விடிய விடிய ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டு வருகிறார்கள். இன்று காலையும் கோவிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்து வருகிறார்கள். இதையொட்டி கோவில் அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அதன் வழியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் குடும்பத்துடன் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்ததால் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் பக்தர்கள் நீண்ட தூரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் கூழ் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் டவுன் போலீஸ் கமிஷனர் வெங்கடேஷ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகி றார்கள். மேலும் கோவில் வளாகத்தை சுற்றி சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாநகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடந்து வருகிறது. அதன்படி சேலம் குகை மாரியம்மன், காளியம்மன், சேலம் சின்ன மாரியம்மன், தாதாகப்பட்டி மாரியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலபட்டரை மாரியம்மன், நஞ்சம்பட்டி மாரியம்மன், தாதம்பட்டி மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், காமராஜர் காலனி மாரியம்மன் உள்பட பல்வேறு மாரியம்மன் கோவில்களிலும் நேற்று முதல் பக்தர்கள் திரண்டு பொங்கல் வைத்து வழிபட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம், அலகு குத்துதல், அக்னி மற்றும் பூக்கரகம் எடுத்தல், போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் முதுகில் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். சிலர் விமான அலகு குத்தி கோவிலுக்கு வந்தனர். இதனை பார்த்தபக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
ஆடிப்பண்டி கையையொட்டி சேலம் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆடிப்பண்டிகையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்களில் அதிக அளவில் கூட்டம் அலை மோதியது. இதை யொட்டி கோவில்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- காவிரி டெல்டா பாசனத்திற்கு தேவையான தண்ணீர் முழுமையாக வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது.
- அணைக்கு வரும் நீரின் அளவை விட நீர்திறப்பு அதிகமாக உள்ளது.
மேட்டூர்:
கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.
நேற்று வினாடிக்கு 5,065 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4,654 கனஅடியாக குறைந்தது.
மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி முதல் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் குறித்த காலத்தில் தென்மேற்கு பருவமழை இல்லாததால் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை முறையாக வழங்காததாலும் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்கு தேவையான தண்ணீர் முழுமையாக வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது. தற்போது அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட நீர்திறப்பு அதிகமாக உள்ளது. இதனால் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 56.39 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 22.07 டி.எம்.சி.யாக உள்ளது.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தற்கொலைக்கான முழு காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 46). கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (36) கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு ரஞ்சித் (22) என்ற மகனும், நந்தினி (20), அஞ்சலி (17) என மகள்களும் உள்ளனர்.
நேற்று காலை வழக்கம் போல் அஞ்சலியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர் விட்டில் இருந்தனர்.
மாலையில் அஞ்சலி வீட்டிற்கு திரும்பியபோது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சந்தேக மடைந்த அஞ்சலி வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது பெற்றோர் ராஜா-சரஸ்வதி ஆகியோர் இறந்த நிலையில் கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்து கதறினார். அக்கம் பக்கத்தினர் அஞ்சலியின் சத்தத்தை கேட்டு அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்த மேட்டூர் டி.எஸ்.பி மரியமுத்து, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கதவை உடைத்து பிணமாக கிடந்த ராஜா, அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது-
ராஜாவுக்கும் அவரது மனைவி சரஸ்வதிக்கும் கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் ஒரே வீட்டில் இருந்தாலும் அவர்கள் இருவரும் சரியாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜா, சரஸ்வதிக்கு சாணி பவுடர் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் கேபிள் வயரால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது எடை தாங்காமல் கேபிள் வயர் அறுந்து விழுந்துள்ளது. இதையடுத்து ராஜா விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
மேலும் தற்கொலைக்கான முழு காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் அவர்களது தற்கொலைக் கான முழு காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
- விஷ்வா (25). இவர் கிருஷ்ணகிரியில் வேலை பார்க்கும் போது அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.
- இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
சேலம்:
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் விஷ்வா (25). இவர் கிருஷ்ணகிரியில் வேலை பார்க்கும் போது அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை குழந்தையுடன் அழைத்து வந்து அம்மாபேட்டை ஜோதி தியேட்டர் அருகே வீடு பார்த்து குடியேறி வசித்து வருகிறார். இந்த நிலையில் அதே தெருவில் வசிக்கும் 40 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பெண்ணின் 16 வயது மகளுடன் பழகி வந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விஷ்வாவை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் இரும்பாலையில் கொரோனா சிகிச்சை மையம் உள்ளது.
- இதில் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த சரவணன் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
சேலம்:
சேலம் இரும்பாலையில் கொரோனா சிகிச்சை மையம் உள்ளது. இதில் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த சரவணன் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்போது அங்கு இருந்த 6 கிலோ காப்பர் பைப்பை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து சரவணன் இரும்பாலை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த முகமது அசின் ஷெரீப், விஸ்வநாதன் 2 பேரும் காப்பர் பைப் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
- மூர்த்தி (21). இவர் சேலம் இரும்பாலை அருகே உள்ள அட்டை கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார்.
- இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வரச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (21). இவர் சேலம் இரும்பாலை அருகே உள்ள அட்டை கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நேற்று நள்ளிரவில் மாணவி வீட்டின் அருகே இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். இதை அந்த வழியாக வந்த மாணவியின் உறவினர்கள் பார்த்து விட்டனர். இதையடுத்து வாலிபரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்து இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவி உறவினர்களிடம் பேசி வாலிபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 26-வது கோட்டம் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள வி.எம்.ஆர். நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
- இந்த பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக கடந்த 8 மாதத்திற்கு முன்பு வெட்டப்பட்ட குழியை சரிப்படுத்தாத நிலையில் புதிய சாலை அமைத்து தருவதாக கூறி ஏற்கனவே இருந்த சாலையில் 2 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது.
சேலம்:
சேலம் மாநகராட்சி 26-வது கோட்டம் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள வி.எம்.ஆர். நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
மாநகரின் மையப்பகுதி மட்டுமல்லாமல் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இந்த பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக கடந்த 8 மாதத்திற்கு முன்பு வெட்டப்பட்ட குழியை சரிப்படுத்தாத நிலையில் புதிய சாலை அமைத்து தருவதாக கூறி ஏற்கனவே இருந்த சாலையில் 2 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படாத தால் குழி பறிக்கப்பட்ட நிலையிலேயே இன்று வரை உள்ளது. இதன் காரணமாக இப்பகுதி குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதற்கும், வெளியில் இருந்து வீட்டிற்குள் செல்வதற்கும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளில் சாலையின் அவலத்தை குறிப்பிடும் விதமாக நோட்டீஸ் ஒட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
- சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் தலைமையில் உணவு தயாரிக்கப்பட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
- 10 ஆண்டுகளுக்கு மேல் அமைப்பாளர்களாக பணிபுரிந்து வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு புதிய பணி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
சேலம்:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் தலைமையில் உணவு தயாரிக்கப்பட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் சமூக நலத்துறை ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு மேல் அமைப்பாளர்களாக பணிபுரிந்து வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு புதிய பணி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, சமூக நலத்துறையின் கீழ், பதிவுறு எழுத்தர் பதவியில் அவர்கள் நியமனம் செய்யப்படுவர். இதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விருப்ப கடிதம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. விருப்பக் கடிதத்துடன் உரிய படிவத்தையும் பூர்த்தி செய்து சமூக நலத்துறை ஆணையரகத்துக்கு வருகிற 10-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களும், 10-ம் வகுப்பு, பிளஸ்- மாணவர்களுக்கும் மாற்று சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
- லேமினேஷன் செய்யாமல் இருந்தால் மட்டுமே உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பணிகளில் எதிர்காலத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கும், சான்றிதழ்களின் பின்புறம் அரசு முத்திைர வைக்கவும் முடியும்.
சேலம்:
தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் மாறும்போது மாற்று சான்றிதழ் வழங்கப்படும். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களும், 10-ம் வகுப்பு, பிளஸ்- மாணவர்களுக்கும் மாற்று சான்றிதழும் வழங்கப்படுகின்றன. இந்த சான்றிதழ்களை மாணவர்கள் பலர் லேமினேஷன் செய்வதாக தெரிகிறது. இது தொடர்பாக ஆசிரியர்கள் வழியாக கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர்.
அரசு தேர்வு துறையால் வழங்கப்படும் சான்றிதழ்களை சிலர் லேமினேஷன் செய்வதாக தெரிகிறது. சான்றிதழ்களில் தண்ணீர் அல்லது வேறு தூசிகளால் கிழிந்து விடாமல் இருக்க இவ்வாறு செய்கின்றனர்.
ஆனால், சான்றிதழ்களை லேமினேஷன் செய்யாமல் இருந்தால் மட்டுமே உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பணிகளில் எதிர்காலத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கும், சான்றிதழ்களின் பின்புறம் அரசு முத்திைர வைக்கவும் முடியும். அந்த நேரத்தில் லேமினேஷனை பிரிக்க நேர்ந்தால் சான்றிதழ் சிதைந்து விடும். எனவே, சான்றிதழ்களை லேமினேஷன் செய்யாமல், அதன் அசல் தன்மையுடன் பாதுகாப்பது சிறந்தது.
இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
- இளநிலை படிப்புகளில் சேருவதற்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு (என்சிஇடி) நடத்தப்படுகிறது.
- இந்த தேர்வு எழுத கல்வி தகுதி பிளஸ்- 2 ேதர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேலம்:
4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், ஐ.ஐ.டி.கள், என்.ஐ.டி.கள் மற்றும் அரசு கல்லூரிகளில் மாணவ- மாணவிகள் பி.ஏ. பி.எட், பி.காம். பி.எட், பி.எஸ்.சி. பி.எட். உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் சேருவதற்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு (என்சிஇடி) நடத்தப்படுகிறது. இந்த தேர்வு எழுத கல்வி தகுதி பிளஸ்- 2 ேதர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த தேர்வை இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.அதன்படி நடப்பாண்டுக்கான தேசிய பொது நுழைவுத் தேர்வு - 2023 அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த தேர்வுக்கு 16 ஆயிரம் மாணவ- மாணவிகள் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் எழுத்து தேர்வு நாளை (9-ந்தேதி) 3 மணி நேரம் நாடு முழுவதும் 127 நகரங்களில் கனிணி வழியாக நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. இதில் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் மாணவ - மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுத உள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட் எனப்படும் அட்மிட் கார்டை https://ncet.samarth.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யுமாறும், அதில் தேர்வு தேதி மற்றும் தேர்வு நகரம் போன்றவைகளை சரிபார்த்து கொள்ளுமாறும் ேதர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
- 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் ஏராளமான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
- நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை முதல் இடைத்தேர்வு மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 2 ஆயிரத்து 397 பள்ளிகள் உள்ளன. இதில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் ஏராளமான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
வருகிற 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை முதல் இடைத்தேர்வு நடைபெற உள்ளது. நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை முதல் இடைத்தேர்வு மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 14, 15, 16 -ந்தேதிகளில் காலை, மாலையில் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை இடைத்தேர்வை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார். தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தேர்வுகள் துறை செய்து வருகிறது.






