என் மலர்
சேலம்
- சேலம் மாவட்டத்தில் 810 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகிறது.
- இதன் மூலம் 49 ஆயிரம் உறுப்பினர்களிடம் இருந்து தினசரி 4 லட்சத்து 90 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 810 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகிறது. இதன் மூலம் 49 ஆயிரம் உறுப்பினர்களிடம் இருந்து தினசரி 4 லட்சத்து 90 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
ஆடி திருவிழா
இதில் சேலம் மாவட்டத்தில் உள்ளூர் தேவையான 2 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் தவிர மீதி உள்ள பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனிடையே ஆடித்திரு விழாவையொட்டி சேலம் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை கள் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் பால்குட ஊர்வலம், பாலாபி ஷேகம் பூைஜகள் உள்ளிட்ட வற்றிற்காக பாலை அதிக அளவில் வாங்கி வருகின்றனர்.
20 ஆயிரம் லிட்டர் கூடுதல்
ஆடித்திருவிழா காரண மாக நேற்று 2 லட்சத்து 34 ஆயிரம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது வழக்க மான விற்பனையை விட 20 ஆயிரம் லிட்டர் அதிகமாகும் என ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பெற்றோர் வேலைக்கு சென்று விட்ட நிலையில், சம்பந்தப்பட்ட மாணவி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
- வெள்ளாண்டிவலசு அருகே உள்ள நைனாம்பட்டி ரோடு தெருவை சேர்ந்த சித்த வைத்தியர் சரவணன் மாண வியின் வீட்டிற்கு வந்துள்ளார்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் -1 வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 6-ந் தேதி பெற்றோர் வேலைக்கு சென்று விட்ட நிலையில், சம்பந்தப்பட்ட மாணவி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வெள்ளாண்டிவலசு அருகே உள்ள நைனாம்பட்டி ரோடு தெருவை சேர்ந்த சித்த வைத்தியர் சரவணன் மாண வியின் வீட்டிற்கு வந்துள்ளார்.
தனது தந்தைக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் வைத்தியர் சரவணனை மாணவியும் வீட்டிற்குள் அனுமதித்து உள்ளார்.
அத்துமீறல்
அப்போது சரவணன் மனைவியை பார்த்து ஏன் சோகமாக இருக்கிறாய் என்று கேட்டுள்ளார்.
அதற்கு மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார்.
உடனே சரவணன் உனக்கு முதுகில் உள்ள ஒரு நரம்பில் சுளுக்கு இருக்கிறது. அதை சரி செய்ய தைலம் தடவுவதாக கூறி மாணவி யிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவரை தள்ளிவிட்டு வீட்டிற்கு வெளியே ஓடி வந்து பக்கத்து வீட்டில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
தர்மஅடி
பொதுமக்கள் வருவதை கண்டு வைத்தியர் சரவணன் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கடந்த சில நாட்களாக யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாக இருந்த சரவணன், நேற்று மீண்டும் ஊருக்குள் வந்துள்ளார். அவரை சுற்றி வளைத்த அப்பகுதி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து எடப்பாடி போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.
புகார்
பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சரவணன் வைத்தியர் இல்லை என்பதும், போலி யாக பல்வேறு நோய்களை குணப்படுத்துவதாக கூறி மக்களை ஏமாற்றி வந்ததும் தெரிய வந்தது.
பொதுமக்கள் தாக்கிய தால் காயம் அடைந்த சரவ ணன் தற்போது எடப்பாடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- கர்நாடகாவில் அவ்வப்போது மழை பெய்தால் மட்டுமே அங்குள்ள அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட்டு வருகிறது.
- அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 7500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பாசன தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தும் காணப்படுகிறது.
இதன் காரணமாக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி 103 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேமாக குறைந்து வருகிறது. இதனால் அணைக்குள் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்துவ கோபுரம் ஆகியவை முழுமையாக தெரிய ஆரம்பித்தது.
இந்த நிலையில் கர்நாடகாவில் அவ்வப்போது மழை பெய்தால் மட்டுமே அங்குள்ள அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட்டு வருகிறது.
கடந்த மாதம் 3-வது வாரத்தில் மழை பெய்தபோது தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 நாட்கள் அதிகரித்து காணப்பட்டது.
பின்னர் அங்கு மழை நின்றதும் தண்ணீர் திறப்பையும் நிறுத்தினர். இதையடுத்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்ததால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு நேற்று முன்தினம் முதல் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை வினாடிக்கு 4654 கனஅடி வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 26 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 56.07 அடியாக உள்ளது. மேலும் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 7500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 21.84 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.
- சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆத்தூர் வீரகனூரில் 7 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
- மழையை தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதால் கொசுக்கடியால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. குறிப்பாக வீரகனூர், கெங்கவல்லி, ஏற்காடு, காடையாம்பட்டி உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு 8 மணியளவில் இடி, மின்னலுடன் தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டியது.
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் வயல்வெளிகளிலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று பெய்த மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆத்தூர் வீரகனூரில் 7 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
இதே போல சேலம் மாநகரில் நேற்றிரவு 8.30 மணியளவில் மழை தொடங்கியது. தொடர்ந்து அதிகாலை 1 மணி முதல் 2 மணி வரை அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, ஜங்ஷன் உள்பட பல பகுதிகளில் கனமழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
கிச்சிப்பாளையம், அம்மாப்பேட்டை, தாதாகாப்பட்டி உள்பட பல பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் கடந்த சில நாட்களாக புழுக்கத்தில் தவித்த மக்கள் நிம்மதியாக தூங்கினர். இதற்கிடையே மழையை தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதால் கொசுக்கடியால் பொது மக்கள் அவதி அடைந்தனர். இதேபோல் காடையாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு 8.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை அதிகாலை 2 மணிவரை பெய்தது. குறிப்பாக 12 மணிமுதல் 2 மணிவரை பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள சரபங்கா ஆற்றில் தண்ணீர் வரத் தொடங்கியது.
ஏற்காட்டில் நேற்றிரவு 1 மணிமுதல் 2.30 மணிவரை மழை பெய்தது. ஏற்காடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்ததால் கடும் குளிர் நிலவியது. இதனால் பொதுமக்கள் தவித்தனர். இன்று காலை முதல் மேகமூட்டம் நிலவி வருகிறது.
சேலம் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
வீரகனூர்-70, கெங்கவல்லி-25, ஏற்காடு-48, காடையாம்பட்டி-43, கரியகோவில்-22, தம்மம்பட்டி-20, ஆனை மடுவு-20, தலைவாசல்-18, ஆத்தூர்-16.6, சேலம்-14, ஓமலூர்-8.4, பெத்த நாயக்கன்பாளையம்-6 என மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 351 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தூறியபடியே இருந்தது.
இதேபோல் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளிப்பாளையம் கொக்கராயன்பேட்டை அருகே பாப்பம்பாளையம் என்ற பகுதியில் இருந்த 50 ஆண்டுகால ஆலமரம் சாய்ந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
குமாரபாளையம்-3.20, மங்கலபுரம்-22.20, நாமக்கல் 7.10, பரமத்திவேலூர்-3, புதுசத்திரம்-8, ராசிபுரம்-14.90, சேந்தமங்கலம்-27, திருச்செங்கோடு-11, கலெக்டர் அலுவலகம்-11.90, கொல்லிமலை செம்மேடு-22 என மாவட்டத்தில் 131.30 மீல்லி மீட்டர் மழை பொழிந்தது. சராசரியாக 10.94 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- சேலம் மற்றும் சேலத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினமும் பல நூற்றுக்கணக்கான பயணிகள் தொழில் நகரங்களான ஈரோடு திருப்பூர் தொழில் மற்றும் மருத்துவ நகரமான கோவைக்கு சென்று வந்து கொண்டுள்ளனர்.
- காலை பணிக்குச் செல்லும் நேரத்திலும், மாலை பணி முடிந்து திரும்பும் நேரத்திலும் எந்த ஒரு வண்டியும் இயக்கப்படாததால் மேற்குறிப்பிட்ட அனைத்து பயணிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
சேலம்:
சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி பாராளுமன்றத்தில் பேசியதாவது:-
ரெயில் சேைவ
சேலம் மற்றும் சேலத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினமும் பல நூற்றுக்கணக்கான பயணிகள் தொழில் நகரங்களான ஈரோடு திருப்பூர் தொழில் மற்றும் மருத்துவ நகரமான கோவைக்கு சென்று வந்து கொண்டுள்ளனர்.
இதில் கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், தொழில் முனைவோர், தனியார் துறை பணியாளர்கள், மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு செல்வோர், குறிப்பாக தினக்கூலி பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என அனைவரும் உள்ளனர்
இந்நிலையில், சேலத்திலிருந்துஅதிகாலை 5.22 மணிக்கு வண்டி எண் 13351 ஆலப்புழா எக்ஸ்பிரசிற்கு பிறகு 9.45 மணிக்கு வண்டி எண் 12626 கேரளா எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இடைப்பட்ட சுமார் 4 மணி 30 நிமிடங்களுக்கு எந்த வண்டியும் இயக்கப்படுவதில்லை.கோவையிலிருந்து மாலை 4.25 மணிக்கு 17229 சபரி எக்ஸ்பிரஸ் மற்றும் இரவு 8 மணிக்கு 16382 புனே எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப் படுகிறது. இடைப்பட்ட சுமார் 4 மணி நேரத்திற்கு எந்த வண்டியும் இயக்கப்படுவதில்லை.
பாதிப்பு
இதனால், காலை பணிக்குச் செல்லும் நேரத்திலும், மாலை பணி முடிந்து திரும்பும் நேரத்திலும் எந்த ஒரு வண்டியும் இயக்கப்படாததால் மேற்குறிப்பிட்ட அனைத்து பயணிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிக்குச் செல்லும் பணியாளர்கள் பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலையில் அவர்களின் வருமானத்தில் பெரும் பகுதி பேருந்து பயணச்செலவிற்கே செலவிட வேண்டி இருப்பதால் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ஆகவே, ஈரோட்டில் இருந்து கோவைக்கு காலை 7.50 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06801-யை சேலத்தில் இருந்து காலை சுமார் 7 மணி அளவில் புறப்படுமாறும், மறுமார்கமாக, கோவையி லிருந்து மாலை 6.10 மணிக்கு ஈரோட்டிற்கு புறப்படும் வண்டி எண் 06800-யை சேலம் வரை நீட்டித்து இயக்க பரிந்துரைத்து, அதற்குண்டான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சதீஷ் (23). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று மெய்யனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது இவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.
சேலம்:
சேலம் மெய்யனூர் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சதீஷ் (23). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று மெய்யனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். சதீஷ் பணம் தர மறுக்கவே திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த அந்த வாலிபர் சதீசை கத்தி முனையில் மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அந்த வாலிபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பிடிபட்ட வாலிபர் திருச்சி ஸ்ரீரங்கம் அருகே மலைப்பட்டி ராம்கி நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முரளி(34) என்பது தெரியவந்தது. போலீசார் முரளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- வித்யா (36). இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த 31-ந் தேதி ஆன்லைன் டாஸ்க் செய்யச் சொல்லி குறுந்தகவல் வந்தது.
- வித்யா அந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்த லிங்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பணம் செலுத்தி பதில் அளித்துக் கொண்டு இருந்தார்.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள கணபதிபாளையம் சாமுண்டி நகர் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ். இவரது மனைவி வித்யா (36).
இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த 31-ந் தேதி ஆன்லைன் டாஸ்க் செய்யச் சொல்லி குறுந்தகவல் வந்தது.
ரூ.11 லட்சம்
அதைத்தொடர்ந்து வித்யா அந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்த லிங்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பணம் செலுத்தி பதில் அளித்துக் கொண்டு இருந்தார். இப்படியாக ரூ.11 லட்சத்து 14 ஆயிரத்து 143 கட்டி டாஸ்கை முடித்துள்ளார்.
இந்த நிலையில் அந்த லிங்கில் கூறியபடி வித்யாவின் வங்கி கணக்குக்கு மீண்டும் பணம் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வித்யா இது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் வங்கி
இதேபோல் சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு 6-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(41).
இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த 31-ந் தேதி பேசிய மர்ம நபர் தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் அனுப்பிய செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய சொல்லி இருக்கிறார்.
இதை உண்மை என்று நம்பிய கார்த்திகேயன் மேற்கண்ட செயலியை பதிவிறக்கம் செய்ததும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் 2 தவணைகளாக எடுக்கப்பட்டது.
இதுகுறித்த குறுந்தகவலை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சிகிச்சை பலனின்றி பிராங்கிளின் பரிதாபமாக இறந்தார்.
- ரெயில்வே போலீசார் இன்று காலை ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சேலம்:
சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 25). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள அவரது பெரியம்மா வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பழைய 8-வது பிளாட்பாரம் அருகே கடந்த 7 -ந் தேதி இரவு பிராங்கிளின் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிராங்கிளினை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் ஏற்பட்டதால் பிராங்கிளின் சரிந்து விழுந்தார்.
தகவல் அறிந்த அரக்கோணம் நகர போலீசார் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி பிராங்கிளின் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி, அரக்கோணம் ஏ.எஸ்.பி. அசோக் கிரீஸ் யாதவ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பாரதி, விநாயகமூர்த்தி, பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதி ரெயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்பேரில் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது பிராங்கிளினுக்கும், சென்னையை சேர்ந்த சில பேருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவர் தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்த நிலையில் நோட்டமிட்ட சென்னை கும்பல் திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே சேலம் வழியாக செல்லும் தன்பாத் ரெயில் பொதுப்பெட்டியல் சேலத்திற்கு கொலையாளிகள் 2 பேர் தப்பி செல்வதாக அரக்கோணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அரக்கோணம் போலீசார் சேலம் ஜங்சன் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சேலம் ரெயில்வே போலீசார் இன்று காலை ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே இன்று அதிகாலை 5.30 மணியளவில் தன்பாத் ரெயில் செலம் ஜங்சன் ரெயில் நிலைய பிளாட்பார்ம் 4-க்கு வந்தது. இதையடுத்து அங்கு தயாராக நின்ற ரெயில்வே போலீசார் அந்த ரெயிலில் பொதுப்பெட்டியில் ஏறி அங்கிருந்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர். அப்போது அவர்களிடம் விசாரணை நடத்திய போது சென்னையை ரெட்கில்ஸ் வ.உ.சி. தெருவை சேர்ந்த லோகேஷ்வரன் (28), சென்னை மணலியை சேர்ந்த கார்த்தி (28) என்பது தெரிய வந்தது.
பின்னர் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் 2 பேரையும் அரக்கோணம் டவுன் போலீசாரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.
- ஓமலூரில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 43 வயது நிரம்பிய லாரி டிரைவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
- இந்த நிலையில் மூத்த மகளான 17 வயது சிறுமி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 43 வயது நிரம்பிய லாரி டிரைவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மனைவிக்கு கண் பார்வையில் கோளாறு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மூத்த மகளான 17 வயது சிறுமி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது தந்தை தான் 6-ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்து தனக்கு பாலியல் தொல்லை ெகாடுத்து வருகிறார். இது பற்றி தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தெரிவித்தேன். போலீசார் எனது தந்தையை அழைத்து எச்சரித்து அனுப்பினார்கள். அப்போது எனது தந்தை இனிமேல் இது பற்றி வெளியே சொன்னால் என்னையும் எனது அம்மாவையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். இதனால் நான் பயந்து எனது சித்தி வீட்டுக்கு சென்றேன். அங்கேயும் வந்து எங்களை அடித்து விரட்டினார். எனவே எனது தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- விஷ்வா வயது 24, இவர் கடந்த ஆண்டு ஓசூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார்.
- அப்போது அதே கடையில் வேலை பார்த்த சாமல் பட்டியை சேர்ந்த 21 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
சேலம், ஆக.9-
கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் விஷ்வா (24), இவர் கடந்த ஆண்டு ஓசூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார்.
ஜவுளிக்கடை ஊழியர்
அப்போது அதே கடையில் வேலை பார்த்த சாமல் பட்டியை சேர்ந்த 21 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிய அவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று ஜாலியாக இருந்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதால் 2 பேரும் திருமணமான 7 மாதங்களில் பிரிந்தனர்.
பின்னர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு பழக்கடையில் விஸ்வா வேலை பார்த்தார். அப்போது அதே பகுதியில் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த 25 வயது பெண்ணுடன் விஸ்வாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து விஸ்வா அந்த பெண்ணை தனது வலையில் வீழ்த்தினார். பின்னர் அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தார். தொடர்ந்து அந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்ட விஸ்வா அந்த பெண் மற்றும் குழந்தைகளுடன் அம்மாப்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினார்.
இந்த நிலையில் விஸ்வா வீட்டிற்கு பக்கத்து வீட்டை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் வந்து சென்றார். இந்த பெண்ணும் கணவரை பிரிந்து தனது 16 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே விஷ்வாவின் குடும்பத்தினரும், அந்த பெண்ணின் குடும்பத்தினரும் நெருங்கி பழகினர். மேலும் விஷ்வா அந்த பெண்ணுக்கு பண உதவிகளும் செய்து வந்தார்.
சிறுமியிடம் அத்து மீறல்
இந்த நிலையில் 40 வயது பெண்ணிடம் ஒரே வீட்டில் வசித்தால் வாடகை மிச்சம் ஆகும் என்று கூறினார். இதையடுத்து அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நேரத்தில் விஸ்வாவின் பார்வை 1 6 வயது சிறுமியின் பக்கம் திரும்பியது. இதையடுத்து அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை பேசி தனது வலையில் சிக்க வைத்தார்.
தொடர்ந்து அந்த சிறுமியையும் பலாத்காரம் செய்தார். இதற்கிடையே சிறுமியின் தாய்க்கும், விஸ்வாவுக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டதால் அவர் வேறு வீட்டிற்கு சென்று குடியேறி விட்டார்.
சிறையில் அடைப்பு
இது குறித்து சிறுமியின் உறவினர்கள் அம்மாப்பேட்டை மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விஷ்வாைவ பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர் இது போல வேறு பெண்களை ஏமாற்றி உள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நங்கவள்ளி மற்றும் தும்பல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (10-ந்தேதி) நடைபெற உள்ளது.
- எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
சேலம்:
சேலம் மாவட்டம் நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (10-ந்தேதி) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சூரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி, சீரங்கனூர், மல்லிக்குட்டை, பைப்பூர், பெரிய வனவாசி, சாணாரப்பட்டி, தானாவதியூர், செல்லக்கல் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதேபோல் தும்பல் துணை மின் நிலையத்தில் நாளை (10-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண்டம், தேக்கம்பட்டுபுதூர், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியக்கோவில், மன்னூர், குன்னூர், அடியனூர், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை, பனைமடல், குமாரபாளையம் மற்றும் இந்த துணை மின் நிலையத்தின் கீழ் உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.
- தொட்டில்பட்டி அனல் மின் நிலைய சாலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை களில் உள்ள குப்பைகளை சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.
- மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்ட நிலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மளமளவென குப்பை எறிய தொடங்கியது.
மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டி அனல் மின் நிலைய சாலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை களில் உள்ள குப்பைகளை சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன.
இதில் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்ட நிலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மளமளவென குப்பை எறிய தொடங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மேட்டூர் தீயணைப்பு த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு தீயணைப்பு நிலை அலுவலர் வெங்கடேசன் தலைமையில் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்பகுதியில் புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்பட்டனர்.






