என் மலர்
சேலம்
- ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கூடத்திற்கு திரண்டு வந்தனர்.
- தலைமை ஆசிரியர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 144 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மேட்டூர் மாதையன்குட்டை ஜீவா நகரை சேர்ந்த ராஜா (51) என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.
இவர் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கு மாணவி களை தனது அறைக்கு அழைத்து தினமும் கை, கால்களை அமுக்கிவிட்டு தலையை மசாஜ் செய்து விடுமாறு வற்புறுத்தி உள்ளார்.
இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கூடத்திற்கு திரண்டு வந்தனர்.
பின்னர் தலைமை ஆசிரியர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது சிலர் கற்களை வீசி தலைமை ஆசிரியர் ராஜாவை தாக்க முயற்சி செய்தனர். இதையடுத்து போலீசார் ராஜாவை அருகில் உள்ள வகுப்பறைக்குள் பூட்டி பாதுகாத்தனர்.
இதை தொடர்ந்து ராஜாவை கைது செய்யக்கோரி மேட்டூரில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த மேட்டூர் ஆர்.டி.ஓ தணிகாசம், தாசில்தார் முத்துராஜா, டி.எஸ்.பி.மரியமுத்து, கொளத்தூர் வட்டார கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதன்பேரில் சமாதானம் அடைந்த பெற்றோர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புடன் மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு ராஜாவை அழைத்து சென்றனர்.
தொடர்ந்து பாதிப்புக்குள்ளான மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
பின்னர் தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். முன்னதாக கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி ராஜாவை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
- மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 14 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் வருகையும் மிகவும் குறைந்துள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் வெயிலின் உஷ்ணம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக ஏற்காடு, தலைவாசல், எடப்பாடி, ஆனைமடுவு, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது பெய்யும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட அனைத்து பகுதிகளிலும் நேற்றிரவு சாரல் மழை பெய்தது. இந்த மழையால் மாநகரில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை கனமழையாக பெய்தது. தொடர்ந்து 7 மணி முதல் விடிய விடிய சாரல் மழையாக பெய்தது. மேலும் ஏற்காட்டில் அதிக அளவில் பனிமூட்டமும் நிலவி வருவதால் மலை கிராமங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் தவித்து வருகிறார்கள்.
ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் வருகையும் மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஏற்காட்டில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. கடைகளில் வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் ஏற்காடு மலைப்பாதைகளில் 40 அடி பாலம் உள்பட பல்வேறு வளைவுகளில் ஆங்காங்கே புதிது புதிதாக நீர்வீழ்ச்சிகள் தோன்றி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குறிப்பாக 3-வது கொண்டை ஊசி வளைவில் அருவி போல தண்ணீர் கொட்டுகிறது. இதனால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்கிறார்கள்.
மேலும் பல சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள். ஒரு சிலர் அந்த அருவிகளில் ஆனந்தமாக குளியல் போட்டும் மகிழ்கிறார்கள்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 14 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தலைவாசல் 11, எடப்பாடி 10.2, ஆனைமடுவு 10, கரியகோவில் 9, பெத்தநாயக்கன் பாளையம் 4, சங்ககிரி 2.4, காடையாம்பட்டி 2, ஆத்தூர் 1.2, சேலம் 0.4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 64.20 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.
- அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 7ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலம் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து 2 அணைகளில் இருந்தும் உபரி நீர் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 3 நாட்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து காணப்படுகிறது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 4ஆயிரத்து 654 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 26 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 5 ஆயிரத்து 385 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.79 அடியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 7ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 21.65 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அணையில் இருந்து இன்னும் 15.65 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வெளியேற்ற முடியும். மீதி உள்ள 6 டி.எம்.சி. தண்ணீர் குடிநீர் திட்டங்கள் மற்றும் மீன் வளத்திற்கு பயன்படுத்தப்படும். தற்போது திறக்கப்பட்டு வரும் தண்ணீர் அளவே தொடர்ந்து திறந்து விடப்பட்டால் இன்னும் 2 வார காலத்திற்கு மட்டுமே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியும். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- 2024 ஆம் ஆண்டு யார் பிரதமராக வேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது என்பதே நோக்கம் என பிரகடனம்
- நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகு திகளிலும் நாம் வெற்றி பெறுவோம்.
சேலம்: சேலம் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது.
செவ்வாய்ப்பேட்டை பகுதி செயலாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார். மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். நிர்வாகிகள் சுபாஷ், கார்த்திகேயன், மேயர் ராமச்சந்திரன், தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசியதாவது:-
தி.மு.கவையும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பற்றி யும் பிரதமர் மோடி பேசு வதற்கு காரணம் பா.ஜ.க. விற்கு பயம் வந்துவிட்டது.
2024 ஆம் ஆண்டு யார் பிரதமராக வேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது என்பதே நோக்கம் என பிரகடனம் செய்கிறார், அது தான் இந்தியா முழுவ தும் ஒலித்துக் கொண்டி ருக்கிறது. இதனால் வருமான வரித்துறை சி.பி.ஐ, அம லாக்கத்துறை ஆகியவற்றை வைத்து மிரட்டி பார்க்கி றார்கள். தமிழ்நாட்டில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். எல்லா பலனையும் பெற்று மகிழ்ச்சியாக இருக்கி றார்கள். செப்டம்பரில் ஒரு கோடி பேருக்கு உதவி தொகை கிடைக்கும். இவர்களே நமக்கு துணை நிற்பார்கள்.வரும் நாடாளு மன்ற தேர்தலில் 40 தொகு திகளிலும் நாம் வெற்றி பெறுவோம். நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும், நாடு நலம்பெறும். முதல்-அமைச்சர் ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் அடுத்த பிரதமர் ஆவார். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரை கண்ணன், கே.டி மணி, பொதுக்குழு உறுப்பி னர் நாசர் கான், அண்ணா மலை , மாவட்ட துணை செயலாளர் குமாரவேல் மாநகர செயலாளர் ரகுபதி, அவைத் தலைவர் முருகன், துணை செயலாளர்கள் கணேசன், தினகரன், மண்டல தலைவர்கள் அசோகன், தனசேகர், பகுதி செயலா ளர்கள் சரவணன்,சாந்த மூர்த்தி, தமிழரசன், முருகன், ஜெகதீஷ், ஜெயக்குமார், இளைஞர் அணி அமைப்பா ளர்கள் அருண் பிரசன்னா, கேபிள் சரவணன், பிரசன்னா ரமணன், மாணவரணி அமைப்பாளர் கோகுல் காளிதாஸ், கவுன்சிலர்கள் கோபால், ராஜ்குமார், சீனிவா சன், மூர்த்தி, மோகனப்பிரியா, சங்கீதா, தனலட்சுமி சதீஷ்கு மார், ஒன்றிய செயலாளர்கள் ரெயின்போ நடராஜன், ரமேஷ், செல்வகுமார், அறிவழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
- சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
- இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி, வேலு நகர் டாஸ்மாக் கடை அருகே நேற்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். அவரது அருகே மதுபாட்டில் ஒன்றும் இருந்தது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஹரி பிரசாத் (22). இவர் இன்று காலை 9 மணி அளவில் செவ்வாய்பேட்டை பஜார் வீதி தேர்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- ஹரிபிரசாத் பிரேக் போட்டபோது, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சேலம்:
சேலம் செவ்வாய்பேட்டை மாதேஸ்வரன் தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை.இவரது மகன் ஹரி பிரசாத் (22). இவர் இன்று காலை 9 மணி அளவில் செவ்வாய்பேட்டை பஜார் வீதி தேர்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
டிராக்டர் மோதியது
எதிர் திசையில் ஒரு டிராக்டர் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு நபர் சாலையின் குறுக்கே வந்துள்ளார்.
அவர் மீது மோதாமல் இருக்க ஹரிபிரசாத் பிரேக் போட்டபோது, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தடுமாறி விழுந்த ஹரிபிரசாத் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதைக் கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக ஹரி பிரசாத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே ஹரி பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கணேசன் வயது 38, தொழிலாளியான இவர் நேற்று இரவு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
சேலம்:
சேலம் கந்தம்பட்டி அருகே உள்ள நரசிம்மசெட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் வயது 38, தொழிலாளியான இவர் நேற்று இரவு அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரைண நடத்தி அவர் மீது மோதி வி ட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும் தேடி வருகிறார்கள்.
- ரெயில்களில் டிக்கெட் இன்றியும் முறைகேடாகவும் பயணம் செய்யும் நபர்களை டிக்கெட் பரிசோதகர்கள் பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.
- சேலம் கோட்டத்தில் கோட்ட மேலாளர் பங்கஜ்கு மார் சின்கா உத்தரவின் பேரில் முதுநிலை வணிக மேலாளர் பூபதிராஜா தலைமையிலான குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சேலம்:
நாடு முழுவதும் ரெயில்களில் டிக்கெட் இன்றியும் முறைகேடாகவும் பயணம் செய்யும் நபர்களை டிக்கெட் பரிசோதகர்கள் பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள். அந்த வகையில் சேலம் கோட்டத்தில் கோட்ட மேலாளர் பங்கஜ்கு மார் சின்கா உத்தரவின் பேரில் முதுநிலை வணிக மேலாளர் பூபதிராஜா தலைமையிலான குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3 ஆயிரம் சோதனை
அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் சேலம் கோட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட சோத னைகள் நடத்தப்பட்டன. இதில் டிக்கெட் இன்றி பயணித்த 10 ஆயிரத்து 415 பேருக்கு ரூ. 78.90 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
அதே போல முன்பதி வில்லா டிக்கெட் எடுத்து கொண்டு முன் பதிவு பெட்டியிலும், 2-ம் வகுப்பு முன் பதிவு டிக்கெட் எடுத்து கொண்டு ஏ.சி. பெட்டி களிலும் முறைகேடாக பயணித்த 5 ஆயிரத்து 890 பேரிடம் இருந்து ரூ.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ரெயில்களில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக லக்கேஜ் எடுத்து சென்றதாக 41 பயணிகளுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ரூ.1 கோடியே 9 லட்சம்
அதன்படி கடந்த மாதம் மட்டும் மொத்தம் 16 ஆயி ரத்து 346 பேரிடம் இருந்து ரூ. 1 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 877 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சோதனை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சங்ககிரி ஐவேலி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை 11-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
சங்ககிரி:
சங்ககிரி ஐவேலி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை 11-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சங்ககிரி நகர், சங்ககிரி ரெயில் நிலையம், தேவண்ணக் கவுண்டனுார், சுண்ணாம்புக்குட்டை , ஐவேலி ,ஒலக்கச்சின்னானூர், தங்காயூர், அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளைய செட்டிபாளையம், ஆவரங்கம் பாளையம், வைகுந்தம், இருகாலூர், வெள்ளையம் பாளையம், காளிகவுண்டம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
- அசோகன் (45), தறி தொழிலாளி. இவர் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றார்.
- ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் குட்டைக்கு சென்று தேடினர்.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டியை அடுத்த டி.அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (45), தறி தொழிலாளி. இவர் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றார். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் குட்டைக்கு சென்று தேடினர். அப்போது அவர் குட்டையில் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். பின்னர் சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் உறவினர்களுடன் இணைந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் மாவட்டம் சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- 11-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
சேலம்:
சேலம் மாவட்டம் சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (11-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புதுப்பாளையம், மண்நாயக்கன்பட்டி, முத்தம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இதேபோல் தம்மம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, தம்மம்பட்டி நகரம், ஜங்க மசமுத்திரம், கொண்ட யம்பள்ளி, மூலப்புதூர், கோனேரிப்பட்டி, செந்தாரப்பட்டி, நாகி யம்பட்டி, உலிபுரம், நாளை (11-ந் தேதி) கிணறு, கீரிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.
- சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சேலம் கோட்டத்தில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- அரசு விரைவு போக்கு வரத்து முன்பதிவு மையங்க ளிலும் இணையதளம் வழியா கவும் முன்பதிவு நடக்கிறது.
சேலம்:
சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
வார இறுதி நாள் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சேலம் கோட்டத்தில் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சேலம் புறநகர், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
16-ந் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு சேலம், தர்மபுரியில் இருந்து மேட்டூர் மாதேஸ்வரன் மலை, சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை, சித்தர் கோவில் ஆகிய ஊர்களுக்கு பயணியர் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அரசு விரைவு போக்கு வரத்து முன்பதிவு மையங்க ளிலும் இணையதளம் வழியா கவும் முன்பதிவு நடக்கிறது.
இந்த சேவையை பயன்ப டுத்தி சென்னையிலிருந்து சேலம், நாமக்கல், ஓசூரில் இருந்து தர்மபுரி, மேட்டூர், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூர், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, நாமக்கல்லில் இருந்து சென்னை, திருச்சியில் இருந்து ஓசூருக்கும் பயணிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.






