என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழைதலைவாசலில் அதிகபட்சமாக 19 மி.மீ. மழை கொட்டியது
- கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் பலத்த மழைபெய்து வருகிறது.
- குறிப்பாக ஏற்காடு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் பலத்த மழைபெய்து வருகிறது.
குறிப்பாக ஏற்காடு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு கடுங்குளிர் மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. தலைவாசல், கரியகோவில், வீரகனூர், கெங்கவல்லி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக இரவில் கடுங்குளிர் நிலவியது
மழை அளவு
சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக தலைவாசலில் 19 மி.மீ. மழை பெய்தது. இதே போல் வீரகனூர்-5, கெங்கவல்லி-3, எடப்பாடி-1 என மாவட்டம் முழுவதும் 37 மி.மீ. மழை பெய்தது.
Next Story






