என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்ககிரி அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்துகர்ப்பிணியாக்கிய வாலிபர்
    X

    சங்ககிரி அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்துகர்ப்பிணியாக்கிய வாலிபர்

    • மூர்த்தி (22), கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பேசி பழகி வந்துள்ளனர்.
    • இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி பின்னர் திருமணம் செய்ய கொள்ள முடிவு செய்தனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம் கச்சுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (22), கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பேசி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி பின்னர் திருமணம் செய்ய கொள்ள முடிவு செய்தனர்.

    இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி அங்குள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் வீட்டிற்கும், பெற்றோர்களுக்கும் தெரியவந்து அவர்கள் 2 பேரையும் அனுப்பி விட்டதால் மூர்த்தி சிறுமியை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

    சிறுமி கர்ப்பம்

    இதனால் தற்போது சிறுமி 9 மாத கர்ப்பிணியாக இருப்பதால் கடந்த 10-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சிறுமியை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்து கொண்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து அரசு மருத்துவமனை அதிகாரிகள் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

    அதன்படி இன்ஸ்பெக்டர் வளர்மதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி ஆகியோர் சிறுமியிடம் புகார் பெற்று குழந்தை திருமணம் செய்த குற்றத்திற்காக மூர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×