என் மலர்
நீங்கள் தேடியது "Seduction of a woman"
- ரங்கநாயகி (50). சம்பவத்தன்று ரங்கநாயகி செவ்வாய்பேட்டை கார்கானா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
- அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் ரங்கநாயகியை வழிமறித்தனர். பின்னர் அவரிடம் இருந்த கைப்பை மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
சேலம்:
சேலம குகை கருங்கல்பட்டி ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவரது மனைவி ரங்கநாயகி (50). சம்பவத்தன்று ரங்கநாயகி செவ்வாய்பேட்டை கார்கானா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
வழிப்பறி
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் ரங்கநாயகியை வழிமறித்தனர். பின்னர் அவரிடம் இருந்த கைப்பை மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
ரங்கநாயகி வைத்திருந்த கைப்பையில் ரூ.85 ஆயிரம் ரொக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கநாயகி இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






