search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்சமரச தீர்வு மையம் மூலம் ரூ. 1 கோடியே 13 லட்சம் இழப்பீடு
    X

    மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி இழப்பீடு தொகை வழங்கிய காட்சி.

    சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்சமரச தீர்வு மையம் மூலம் ரூ. 1 கோடியே 13 லட்சம் இழப்பீடு

    • இன்று அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரசத்திர்வு மையம் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது.
    • ஒரே நாளில் ரூ.1 கோடியே 13 லட்சம் இழப்பீடு தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் சமரச தீர்வு மையம் எனும் மக்கள் நீதிமன்றம் மாதம் தோறும் முதல் வாரத்தில் நடைபெறும் அதன் அடிப்படையில் இன்று அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரசத்திர்வு மையம் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது.

    நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக மக்கள் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் முறையில் தீர்வு காணப்பட்டது.

    அதன் அடிப்படையில் விபத்து வழக்கு குடும்ப நல வழக்கு, மின்சார வாரிய வழக்கு, காசோலை வழக்கு, உரிமையியல் மற்றும் இதர வழக்கு, சொத்துப் பிரச்சனை, உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.அதன் அடிப்படையில் கடந்த 2022 -ம்ஆண்டு மணிராஜன் என்பவர் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கு ம்போது 2 சக்கர வாகனம் மோதிய விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு கை கால்கள் செயல் இழந்தன இந்த விபத்து குறித்த வழக்கு சமரசத் தேர்வு முறையில் தீர்வு காணப்பட்டு பாதிக்கபட்ட நபருக்கு 8 லட்சம் இழப்பீடு காசோலை யை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.

    இதேபோல கடந்த 2021 குரு என்பவர் இரண்டு சக்கர வாகனத்தில் சேலம் - ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வந்த ஆட்டோ மோதிய விபத்தில் கால் முறிவு ஏற்பட்டது இந்த வழக்கில் சமரச தீர்வு காணப்பட்டு குருவுக்கு ரூ.23 லட்சகான காசோலை வழங்கினார்.இதேபோல் செல்வம் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு லாரியை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்குச் சென்றபோது பாம்பு கடித்தது. இந்த வழக்கில் சமரசத் தீர்வு காணப்பட்டு ரூ.10 லட்சம் காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினார்.

    மொத்தம் இன்று ஒரே நாளில் ரூ.1 கோடியே 13 லட்சம் இழப்பீடு தொகையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.

    அப்போது நீதிபதி சரண்யா மற்றும் மாவட்ட சட்டப் பணி ஆணை குழு செயலாளர் தங்கராஜ் வழக்கறிஞர்கள் ரகுபதி மற்றும் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×