என் மலர்
நீங்கள் தேடியது "Travel to ISRO Space Center"
- சேலம் அரசு கலைக் கல்லுாரில் அறிவியல் கண்காட்சி மற்றும் புதிய கருவிகள் படைப்புத்திறன் போட்டி நடைபெற்றது.
- இப்போட்டியில், சிறப்பிடம் பெற்ற 100 மாணவர்களை பெங்களூரு அருகிலுள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.
வாழப்பாடி:
மறைந்த ஜனாதிபதி விஞ்ஞானி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 91-–வது பிறந்தநாளையொட்டி, கடந்த 2022–-23 –ஆம் கல்வியாண்டில் சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புத்திறனை வளர்க்கும் நோக்கில், சேலம் அரசு கலைக் கல்லுாரில் அறிவியல் கண்காட்சி மற்றும் புதிய கருவிகள் படைப்புத்திறன் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில், சிறப்பிடம் பெற்ற 100 மாணவர்களை பெங்களூரு அருகிலுள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.
இத்திட்டத்தின் படி, முதற்கட்டமாக அரசு மாணவர்கள் 50 பேர் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வாயிலாக இன்று வெள்ளிக்கிழமை பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த குழுவில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர்கள் ச.சபரி, கோ. தாமரைக் கண்ணன், 10–-ம் வகுப்பு மாணவர் கவுதமணி, 11-ம் வகுப்பு மாணவர் மேகநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
முதன்முறையாக, அரசு செலவில் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட செல்லும் மாணவர்களுக்கு பள்ளித் தலைமையாசிரியர் வெங்கடாஜலம் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டி அனுப்பி வைத்தனர்.






