என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரெயில்வே தண்டவாளத்தில் வட மாநில வாலிபர்கள் 2 பேர் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே இன்று காலை 2 வாலிபர்கள் கழுத்தில் ரத்தக் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த பொது மக்கள் உடனடியாக திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 2 வாலிபர்களின் கழுத்து பகுதி பிளேடால் அறுக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது.

    ரத்தம் சொட்ட, சொட்ட மயங்கி நிலையில் கிடந்த அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த வாலிபர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது. அவர்களது பெயர், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

    புதுக்கோட்டை பகுதிக்கு வியாபாரம் செய்ய வந்த அவர்கள், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாமா? அல்லது ஏதாவது பிரச்சினை காரணமாக மர்ம நபர்கள் அவர்களது கழுத்தை அறுத்து தண்டவாளத்தில் போட்டு சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



    கீரனூர் அருகே சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த புலியூர் சவேரியார் புரத்தை சேர்ந்தவர் நாயகம் (வயது64) இவர் தனது சைக்கிளில் புலியூர் பஸ்நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். 

    அப்போது எதிரே சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிகொண்டு வந்த லாரி நேருக்கு நேராக மோதியது. இதில் நாயகம் சம்பவ இடத்தில் இறந்தார். 

    இது குறித்து  தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சென்று  இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுகை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து  வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க கோரி இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    அறந்தாங்கி:

    ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூ.கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன் தலைமை தாங்கினார். அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து அந்த மாவட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் தர்ம ராஜன், விவசாய சங்க மாவ ட்டச்செயலாளர் மாதவன், மாவட்ட பொருளாளர் திருநாவுக் கரசு,மாவட்ட நிர்வா கக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஏ.ஐ.டி.யு.சி  மாவட்ட செயலாளர் சிங்க முத்து, ஜெபமாலை பிச்சை, தண்டபாணி, அறந்தாங்கி நகரச் செயலாளர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டையில் இன்று அதிகாலை ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாப்பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). ஆட்டோ டிரைவரான இவர் புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனை அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் விஜயகுமார் மீது புதுக்கோட்டை போலீஸ் நிலையங்களில் திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது

    இந்நிலையில் இரவு 1 மணிக்கு அவர் சவாரியை முடித்து விட்டு வீட்டிற்கு ஆட்டோவை ஓட்டி சென்றார். வீட்டின் அருகே செல்லும் போது அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென விஜயகுமாரை வழிமறித்து சரமாரி அரிவாளால் வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் எழுந்து வந்து பார்த்தனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    இதனிடையே அரிவாள் வெட்டில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த விஜயகுமார் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் புதுக் கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரை ந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விஜயகுமாரை வெட்டிக்கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை. முன்விரோதத்தில் எதி ராளிகள் யாராவது அவரை கொலை செய்தனரா? அல்லது ஆட்டோ ஸ்டாண்டில் ஏற்பட்ட ஏதாவது பிரச்சினை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    கீரனூர் பஸ் நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
    கீரனூர்:

    கீரனூர் பஸ் நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் குன்றாண்டார் கோவில் வட்டத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் சவுரியம்மாள் தலைமை தாங்கினார். சீதாலட்சுமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட தலைவர் இந்திராணி, செயலாளர் பச்சையம்மாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். 

    ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் ஒன்றிய செயலாளர் சரோஜா நன்றி கூறினார்.
    பணம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்த 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கியை அடுத்த வண்ணியப்பிள்ளைவயல் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக அறந்தாங்கி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

    அப்போது அங்கு வைரி வயலை சேர்ந்த கார்த்தி (வயது37), சங்கர் (33), வடுகாடு பகுதியைச் சேர்ந்த மாறன்(45),  கே.புதுப்பட்டியை சேர்ந்த பெரியசாமி (54), கீழாநிலைக்கோட்டை ராமசாமி (40), மேற்பனைக்காடு பகுதியை சேர்ந்த அப்துல்காதர் (40), முகமது முஸ்தபா (50) ஆகியோர் பணம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்தனர். உடனே அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் சூதாடுவதற்காக வைத்திருந்த ரூ.73 ஆயிரத்து 280 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
    அறந்தாங்கியில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அறந்தாங்கி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மனைவி கலைமதி (வயது30). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு  நீப்பிகஸ்ரீ(வயது2) என்ற மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் சண்முக சுந்தரம் தற்போது தனது மனைவி, குழந்தையுடன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டை 2ம் தெருவில் குடியிருந்து வருகிறார். சம்பவதன்று கலைமதி, தான் குடியிருந்து வரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

    மண்ணச்சநல்லூர் தாலுகா வாழ்மானபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் சகுந்தலா(25).  மாற்றுதிறனாளி. இவருக்கு நீண்ட நாளாக திருமணம் ஆகாமல் இருந்துள்ளது. இந் நிலையில் நேற்று முன்தினம் முசிறி அருகே ஆனைப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சகுந்தலா தனது தாயார் அம்பிகாவுடன் சென்றுள்ளார். அங்கு வீட்டில் யாரும் இல்லாத சமயம் தனக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் இருந்த இளம்பெண் சகுந்தலா அரளி விதையை குடித்து தற்கொலைக்கு முயன்று ள்ளார். 

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  இது பற்றி அம்பிகா முசிறி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
    அறந்தாங்கி அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 15 மாட்டு வண்டிகளை தாசில்தார் பறிமுதல் செய்தார்.

    அறந்தாங்கி:

    தமிழகம் முழுவதும் ஆறுகளில் மணல் அள்ள கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் அனுமதியின்றி ஆற்று மணலை திருடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அழியா நிலை பகுதியில் தாசில்தார் ரவிச்சந்திரன் ரோந்து மற்றும் ஆய்வு பணி மேற்கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியில் உள்ள வெள்ளாற்றில் இருந்து அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டு வரப்பட்டது. அவற்றை மறித்து விசாரணை நடத்திய தாசில்தார் ரவிச்சந்திரன் 15 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தார்.

    பின்னர் அவை அறந்தாங்கி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாகவே அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மணல் திருட்டை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    கந்தர்வக்கோட்டை அருகே மாணவ, மாணவிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிய ஆசிரியரை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கேட்டை அருகே நடுப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 97 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளி ஆசிரியர் விமல் விஸ்வநாதன் (48) மாணவ, மாணவிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து அப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் காவல் ஆய்வாளர் மன்னர்மன்னன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தை கை விட்டனர்.
    அதிகாரிகள் அனுமதி மறுப்பால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

    அறந்தாங்கி:

    கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதியில் ஒக்கி புயல் காரணமாக ஏராளமான மீனவர்கள் பலியாகினர். இன்னும் பல மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் ஒக்கி புயல் காரணமாகவும், வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் கடந்த 28-ந்தேதி முதல் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகினை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி கேட்டு வருகின்றனர். ஆனால் மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் இன்று 12-வது நாளாக அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    ஒக்கி புயலின் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் எந்தவித பாதிப்பும் கிடையாது. மேலும் புயல் சின்னம், காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டால் வழக்கமாக 2 அல்லது 3 நாட்கள் தான் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினரால் அனுமதி மறுக்கப்படும்.

    ஆனால் தற்போது 8 நாட்கள் ஆகியும் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கடன் வாங்கி செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் மீன்பிடி தொழில் நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்களின் விலை பலமடங்காக உயர்ந்துள்ளது.

    இதனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும். மேலும் ஒக்கி புயலால் இறந்த குடும்பத்தினருக்கும், கடலுக்கு செல்லாத மீனவர்களின் குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.



    புதுக்கோட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி அருகே உள்ள ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 19). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அங்குள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குண மாகவில்லை.

    இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    காளியம்மாள் எந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது தெரியவில்லை. இருப்பினும் மர்ம காய்ச்சலுக்கு அவர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×