search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி மாவட்டம்"

    • 30-ந் தேதி தொழுநோய் ஒழிப்புதினம் கடைபிடிக்கப்படுகிறது.
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழுநோய் ஒழிப்புதினமான 30-ந் தேதி அன்று பகல் 11 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

    எனவே, பொதுமக்கள் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி களில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரும்பாலான பொதுமக்கள் தற்போது தரமற்ற அரிசி விநியோகம் செய்வதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டார் ஆகிய 6 தாலுகாக்களில் 764 ரேஷன் கடைகள் உள்ளன.

    இக்கடைகள் மூலம் சுமார் 5 லட்சத்து 68 ஆயிரத்து 830 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இது தவிர அந்தியோதையா அன்ன யோஜனா குடும்ப அட்டை தாரர்கள் (ஏஏஒய்) 14 சதவீதமும், முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் (பிஹெச்ஹெச்) 42 சதவீதமும், முன்னுரிமையற்ற குடும்ப அட்டை தாரர்கள் (என்பிஹெச்ஹெச்) 42 சதவீதமும், முன்னுரிமையற்ற சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் (என்பிஹெச்ஹெச்-எஸ்) 2 சதவீதமும் பயனடைந்து வருகின்றனர்.

    தற்போது குமரி மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வழங்கப்பட்டு வரும் அரிசியானது சமையலுக்கு உகந்த அரிசியாக இல்லாமல் உருட்டு அரிசியாகவும், அரிசியுடன் கருப்பு அரிசி கலந்தும் தரமற்ற முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    ரேஷன் கடையில் விநியோகிக்கப்படுகின்ற அரிசியின் மூலம் தங்களது வறுமையை போக்கி வந்த பெரும்பாலான பொதுமக்கள் தற்போது தரமற்ற அரிசி விநியோகம் செய்வதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் ரேஷன் கடைகள் முன்பு போராட்டம் செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக செண்பகராமன்புதூர் ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதுடன் தரமற்ற அரிசி விநியோகிப்பதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட அரிசியினை இறக்க விடாமல் லாரியை முற்றுகையிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இதுபோன்று கடுக்கரை, சாமிதோப்பு, கொட்டாரம், தர்மபுரம், மேலகிருஷ்ணன்புதூர், மணக்குடி போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அந்தந்த ரேஷன் கடைகள் முன்பு தரமான அரிசி வழங்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியினை பொதுமக்கள் பயன்பெறும் விதத்தில் தரமானதாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேர்முகத் தேர்வில் 52 பேர் பங்கேற்பு
    • பணி வேண்டாம் என பட்டதாரி பெண் கூறியதால் பரபரப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் காலி யாக உள்ள 10 தொகுப்பூதிய தூய்மை பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    இந்தப் பணிக்கு 40 பெண்கள் உட்பட 52 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு ஆணை அனுப்பப்பட்டு இருந்தது.

    இதற்கான நேர்முகத் தேர்வு இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தேர்வில் கலந்து கொள்வதற்காக பெண்கள் உள்பட பலரும் வந்திருந்தனர். நேர்முக தேர்வில் கலந்து கொண்டவர்களின் சான்றி தழ்கள் சரிபார்க்கப்பட்டது.

    தூய்மை பணியாள ருக்கான கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி என்றாலும், பட்டதாரிகளும் இந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களிடம் தூய்மை பணியாளர்களு க்கான பணி விவரங்களை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட பட்டதாரி பெண் ஒருவர் தனக்கு இந்த பணி வேண்டாம் என்று கூறி வெளியேறினார். பின்னர் அவர் வெளியே வந்து கண் கலங்கியபடி சென்றார்.

    • போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்
    • கலெக்டர் அரவிந்த் பேச்சு

    நாகர்கோவில்:

    சர்வதேச போதை பொருள் தடுப்பு தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தை நடத்தின.

    களியக்காவிளை பேருந்து நிலையம், மேல்பாலை சந்திப்பு, மார்த்தாண்டம் காவல் நிலையம், குலசேகரம் பேருந்து நிலையம், இணையம் பேருந்து நிலையம், கருங்கல் பேருந்து நிலையம், ஆலஞ்சி பேருந்து நிலையம், அருமனை சந்திப்பு, குளச்சல் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தக்கலை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், முட்டம் கலங்கரை விளக்கம்,

    வில்லுக்குறி சந்திப்பு, இராஜாக்கமங்கலம் காவல் நிலையம், சுங்கான்கடை சந்திப்பு, பள்ளம், எட்டாமடை பேருந்து நிலையம், அஞ்சுகிராமம் பேருந்து நிலையம், தென்தாமரைகுளம் பேருந்து நிலையம், ஆரல்வாய்மொழி பேருந்து நிலையம், கன்னியாகுமரி காந்தி மண்டபம், கார்மல் போதை நோய் நலப்பணி மையம், இராமன்புதூர் ஆகிய 21 பகுதிகளிலிருந்து தொடங்கிய ஜோதி ஓட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தது.

    இதைத்தொடர்ந்து அங்கு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் பேசியதாவது:-

    உலகபோதை தடுப்பு விழிப்புணர்வு தினமான இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.குமரி மாவட்டத்தில் போதைபொருள் உட்கொள்வதை தடுப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தனியார் தொண்டு நிறுவனங்களின் முழு ஒத்துழைப்புடன் நடை பெற்று வருகிறது.

    இன்றைய சூழலில் 16 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள். இது மிகவும் வேதனை அளிக்ககூடியதாக உள்ளது. இப்பழக்கத்தினை மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். போதைப்பொருள் இல்லா குமரி மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் ஜோதி ஓட்டத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை பாராட்டி கலெக்டர் அரவிந்த் கேடயங்களை வழங்கினார். மேலும் போதை புழக்கத்தில் இருந்து மீண்ட நபர்களை கவுரவப்படுத்தினார்.

    நிகழ்சியில் போதை ப்பொருளுக்கு எதிரான கண்கவர் கலை நிகழ்ச்சியும் நடந்தது. போதை பொரு ட்களுக்கு எதிராக உறுதி மொழியையும் கலெ க்டர் அரவிந்த் தலைமை யில் நிகழ்ச்சியில் ப ங்கேற்றவர்கள் எடுத்து க்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராம லிங்கம், மாவட்ட சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அலுவலர் சரோஜினி, திருப்புமுனை போதை மறுவாழ்வு மைய இயக்குநர் நெல்சன், அதங்கோட்டாசான் முத்தமிழ் கழக மறுவாழ்வு மைய இயக்குநர் அருள்ஜோதி, நியூ பாரத் டிரஸ்ட் இயக்கு நர் அருண்குமார், அக ஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    ×