search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில வாலிபர்கள்"

    • பீகார் வாலிபர்கள் ஏட்டு ரகுபதியை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர்.
    • அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அம்பத்தூர்:

    சென்னை அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் கடந்த 23-ந் தேதி ஆயுதபூஜை அன்று தனியார் நிறுவனம் ஒன்றில் பீகாரை சேர்ந்த வாலிபர்கள் 2 கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். அவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் நிலையத்தில் இருந்து ஏட்டு ரகுபதி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பீகார் வாலிபர்கள் ஏட்டு ரகுபதியை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர். மோட்டார் சைக்கிளில் சென்ற அவரை 30-க்கும் மேற்பட்ட பீகார் வாலிபர்கள் சூழ்ந்து கொண்டு தடியால் தாக்கினர். இதனால் ஏட்டு ரகுபதி அங்கிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அப்போதும் பீகார் வாலிபர்கள் விரட்டி விரட்டி தாக்கினார்கள்.

    இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ஏட்டு ரகுபதி வடமாநில தொழிலாளர்களின் பிடியில் இருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து ரோந்து வாகனத்தில் அங்கு சென்ற காவலர்களையும் பீகார் வாலிபர்கள் விரட்டி அடித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் கும்பலாக கூடி தாக்குதல் நடத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கில் பீகாரை சேர்ந்த 5 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பலரை போலீசார் தேடி வந்தனர். இது தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற் கொண்டு வந்தனர். இதில் போலீசாரை தாக்கிய மேலும் 28 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

    அவர்களை பிடிக்க நேற்று இரவு அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான போட்டோக்களை வைத்து அறை எடுத்து தங்கியிருந்த பீகாரை சேர்ந்த 28 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த ராக்கி ராஜ், மனோஜ், கணேஷ், மதன் குமார், முகேஷ், சஞ்சய் குமார், சூரஜ்குமார், ராஜேஷ் பண்டித், ரஜ்வந்த், பிரேம் குமார், விகாஷ் குமார், ரவிக்குமார், கரன்ஜித் குமார், சங்கர் கேபட், சந்தன், உபேந்திரா, ஆஷிஸ், லட்சுமண் குமார், சகலதீப், குல்சன் குமார், அன்புராஜ், ராஜ்பிளம் குமார், கரு ரவிதாஸ், அனுஷ் சர்மா, அர்பிந்த் குமார், கவிதர், குட்டு பண்டிட், நந்தன் குமார், தனராஜ் குமார் ஆகிய 28 பேர் பிடிபட்டனர்.

    விடிய விடிய சோதனை நடத்தி இவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார் அம்பத்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து எச்சரித்து விசாரணை நடத்தினர். 28 பேரையும் இன்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

    இவர்கள் மீது பீகாரில் குற்ற வழக்குகள் ஏதும் உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு அம்பத்தூர் பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தவர் பற்றிய தகவல்களை திரட்டி வரும் போலீசார் அவர்களின் பின்னணி குறித்த விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த ஆயதபூஜை விழாவில் தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
    • தொழிலாளர்களையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் சாலையில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். தொழிற்சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த ஆயதபூஜை விழாவில் தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து இதுபற்றி விசாரிக்க அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ்காரர்கள் ரகுபதி, ராஜ்குமார் ஆகியோர் நேரில் சென்றனர். அப்போது போலீசாரிடம் கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டு சுற்றி வளைத்து தாக்கினர். இதனால் போலீசார் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த தாக்குதல்தொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் ரோஷன்குமார், பிளாக் தாஸ், பிண்டு, ராம்ஜித், சுராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதற்கிடையே போலீஸ்காரர் ஒருவரை வடமாநில வாலிபர்கள் சுற்றி வளைத்து தாக்கும் வீடியோ தற்போது சமூகவலை தளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் விசாரணை நடத்த வந்த போலீஸ்காரரை ஏராளமான வடமாநில வாலிபர்கள் கையில் கம்பு, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி நிற்கின்றனர். அப்போது சிலர் போலீஸ்காரரை தாக்கி விரட்டி அடிப்பதும் பின்னர் வடமாநில தொழிலாளர்கள் கும்பலாக விரட்டி செல்வதும் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சியை அங்குள்ள தொழிலாளி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்.

    இந்த வீடியோ காட்சியை வைத்து தாக்குதலில் ஈடுபட்ட மற்ற தொழிலாளர்களையும் கைது செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    • தொழிற்சாலைகளிலும் தமிழக இளைஞர்கள் வேலை பார்த்து வந்தனர்.
    • ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கடலூர் மாவட்டத் துக்கு வந்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் இயற்கை வளம் மிகுந்த பகுதியாகும். இங்கு ஆண்டு தோறும் பருவகாலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. எனவேதான் இங்கு ஏராளமான விளை நிலங்கள் உள்ளது. இது தவிர பண்ருட்டி நகரம் பலாப்பழம், முந்திரிக்கு புகழ்பெற்றது. எனவே தான் ஏராளமான பலாப்பழ மண்டிகள், முந்திரி தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு தமிழகத்தை சேர்ந்த ஏராளமான தொழி லாளர்கள் வேலைபார்த்து வந்தனர். இதுபோக கடலூர் நகரின் தெற்கு பகுதியில் குடிகாடு, காரைக்காடு பகுதியில் சிப்காட் தொழிற் சாலை உள்ளது. இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உற்பத்தியாகி வெளி மாநி லங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

    எனவே இந்த தொழிற் சாலைகளிலும் தமிழக இளைஞர்கள் வேலை பார்த்து வந்தனர். ஆனால் நாளடைவில் முந்திரி, பலாப்பழ மண்டி, சிப்காட் தொழிற்சாலைகளை வடமாநில வாலிபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இங்கு உள்ள அனைத்து கம்பெனிகளும் வடமாநில இளைஞர்களே வேலை பார்த்து வருகிறா ர்கள். இவர்கள் குறைந்த சம்ப ளத்தில் அதிகநேரம் வேலை பார்ப்பதால் கம்பெனி உரி மையாளர்களும் வடமாநில தொழிலாளர்களை வரவேற்கின்றனர். 

    இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். உதாரண மாக தமிழக வாலிபர்கள் கூடுதல் சம்பளம், குறைந்த நேரத்தில் பணி செய்வதற்கு கறார் செய்வ தால் இதுபோன்ற நிலை உருவாகி உள்ளதாக தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க மாவட்டத்தில் உள்ள மளிகைகடை, ஜவுளிக்கடை, கட்டிட வேலை உள்ளிட்ட நிறுவனங்களையும் வட மாநில தொழிலாளர்கள் புகுந்து வேலைபார்த்து வருகிறார்கள். மேலும் நகர் பகுதிகளில் உள்ள வீதிகளில் பானிபூரி, பஞ்சுமிட்டாய், போர்வைகள், தலையணை கள், படுக்கை விரிப்புகள், வீட்டுக்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் சாலை ஓரத்தில் அமர்ந்து விற்பனை செய்து வருகிறார்கள். 

    இந்த தொழில்களை பார்ப்பதற்காக மேலும் ஆயிரக் கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கடலூர் மாவட்டத் துக்கு வந்துள்ளனர். இவர்களால் கடலூர் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதியில் வீட்டு வாடகை 2 மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக முன்பு ஒரு வீட்டுக்கு ரூ.3 ஆயிரம் வாடகை என்றி ருந்தால். வடமாநில தொழிலாளர்கள் வந்த உடன் அந்த வாடகை ரூ.6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரே வீட்டில் 8 பேருக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். இதுபோன்ற நிலை உள்ளதால் கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் தமிழக நடுத்தர குடும்பத்தி னர் வாடகை வீடு கிடைக்காமல் திணறிவருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் சுமார் 1.50 கோடி வடமாநில தொழிலாளர்கள் வந்துள்ள தாக தெரியவந்துள்ளது. இவர்கள் தமிழகம் முழு வதும் பரந்து விரிந்து வேலை பார்த்து வருகிறார்கள். 

    இதுபோன்ற நிலை நீடித்தால் கடலூர் மாவட் டத்தையே வடமாநில தொழி லாளர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தனிகவனம் செலுத்தி வட மாநில தொழி லாளர்கள் எந்த பகுதியில் வசித்து வருகிறார்கள். அவர்கள் அடையாள அட்டை வைத்துள்ளார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற வடமாநில தொழிலாளர்களால் பல்வேறு குற்ற செயல்களும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் சிப்காட் வேலை தொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் கொலையில் முடிந்துள்ளது. மேலும் பல்வேறு வீடுகளிலும் வியாபாரம் செய்வதுபோல் நடித்து கைவரிசை காட்டி வருகிறார்கள். எனவே போலீசாரும் இந்த விச யத்தில் தனிகவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    • காலை நேரத்தில் ஆங்காங்கே கூட்டமாக நின்று கொண்டு தனது வேலையை தேர்ந்தெடுப்பார்கள்.
    • கரும்புக்கடை பகுதியானது ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பகுதியாகும்.

    குனியமுத்தூர்

    கோவை மாநகரில் அன்றாடம் தினக்கூலி வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.

    கோவையின் பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் ஆங்காங்கே கூட்டமாக நின்று கொண்டு தனது வேலையை தேர்ந்தெடுப்பார்கள்.

    குறிப்பாக கோவையில் சுந்தராபுரம், கரும்புக்கடை, துடியலூர், கணபதி மோர் மார்க்கெட் பகுதிகளில் கூட்டமாக நின்று கொண்டிருப்பார்கள்.

    கோவை கரும்பு கடை ஜங்ஷனில் தினமும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர். காலை 6 மணி முதல் 9.30 மணி வரை காத்திருப்பார்கள்.

    கரும்புக்கடை பகுதியானது ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பகுதியாகும். அப்படிப்பட்ட இடத்தில் 300-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் காலை நேரத்தில் நிற்கும்போது மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    காலை 8 மணி முதல் 9 மணி வரையில் கல்லூரி வாகனம் மற்றும் பள்ளி வாகனம் அதிகமாக இங்கு இயங்கி கொண்டிருக்கும். இதனால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அப்போது இவர்கள் குறுக்கும் நெடுக்குமாக சுற்றித் திரியும் போது வாகன நெரிசல் மேலும் கூடுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியிருப்பதாவது:-

    சாதாரணமாக எப்போதுமே இப்பகுதி மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் உள்ளது. இந்நிலையில் இந்த வாலிபர்கள் கூடி இருப்பது போக்குவரத்துக்கு மிகவும் தடையாக உள்ளது.

    குறிப்பாக இப்பகுதியில் நின்று கொண்டிருக்கும் தொழிலாளர்களில், 90 சதவீதம் வடமாநில வாலிபர்கள் நிற்கிறார்கள். வேலைக்கு அழைத்து ெசல்பவர்கள் அந்த இடத்தை மாற்றினால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

    உக்கடம் மேம்பால பணி நடைபெற்று வருவதால் மேம்பாலத்துக்கு அடியில் இடம் நிறைய உள்ளது. அப்பகுதியில் இந்த தொழிலாளர்களை நிறுத்தி னால், கொத்தனார்கள் மற்றும் வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்படும் பட்சத்தில், தேவைப்படுவோர் தினக்கூலி வேலை யாட்களை அழைத்துக் கொண்டு செல்லும் போது, போக்குவரத்துக்கு தடை இருக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து அந்த வார்டு கவுன்சிலர் கபீர் இடம் கேட்ட போது, கண்டிப்பாக இதற்கு முடிவு செய்வோம். அவர்களை வேறு இடத்துக்கு மாற்றி போக்குவரத்துக்கு இடையூறு நேராதவாறு ஏற்படுத்துவோம் என்றார்.

    • நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக மாடி ஏறி குதித்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் முதல் தளத்தில் இயங்கி வரும் அஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
    • இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை ஈங்கூர் ரோட்டில் இண்டேன் கேஸ் ஏஜென்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இரவு வேலை நேரம் முடிந்ததும் ஊழியர்கள் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர். நள்ளிரவில் நிறுவனத்தின் பின்பக்கம் வழியாக மாடி ஏறி குதித்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் முதல் தளத்தில் இயங்கி வரும் அஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    பின் தரைத்தளத்தில் உள்ள கேஸ் ஏஜென்சியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனையடுத்து மறுநாள் காலை பணிக்கு வந்த ஊழியர்கள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சி.சி.டி.வி. பதிவுகளை ஆராய்ந்து விசாரணை நடத்தியதில் இச்சம்பவத்தில் 3 வாலிபர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    மேலும் அஸ்சூரன்ஸ் அலுவலகத்தில் பல ஆயிரமும், கேஸ் ஏஜென்சியில் பல ஆயிரமும் கொள்ளை அடிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    இந்நிலையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விட்டனர். சி.சி.டி.வி. கேமராவில் பதிவான உருவங்களை வைத்து வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த சென்னி மலை வட்டாரத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதன் அடிப்படையில் சென்னிமலை அருகில் உள்ள எம்.பி.என். நகரில் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் இந்த திருட்டில் ஈடுபட்டது உறுதியானது.

    விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த அனோவார்ஹுசைன் (21), சைக்குள் இஸ்லாம் (29), மன்சூர் அலி (23) ஆகிய 3 வாலிபர்கள் கியாஸ் ஏஜென்சி மற்றும் அஸ்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றில் இருந்து மொத்தம் ரூ.45 ஆயிரம் கொள்ளையடித்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பெருந்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

    • வாலிபர் ஒருவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர்.
    • போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்த 4 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அதில் 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    கோவை:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு அந்தப் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாசம் மற்றும் போலீசார் காபி கடை பஸ் நிறுத்தம் அருகே சென்று சோதனை செய்தனர்.

    அப்போது வாலிபர் ஒருவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். உடனே போலீசார் குட்கா விற்பனை செய்து கொண்டு இருந்த வாலிபரை கண்காணித்தனர்.

    பின்னர் அந்த வாலிபரை அவருக்கு தெரியாமல் பின்தொடர்ந்தனர். அப்போது அந்த வாலிபர் அத்திப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு சென்றார். இதனை கண்ட போலீசார் அதிரடியாக குடோனுக்குள் புகுந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்த 4 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அதில் 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    பின்னர் குடோனை சோதனை செய்தபோது ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 750 கிலோ 75 கிராம் குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த குட்கா மற்றும் பணம் ரூ. 39 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மடக்கிப் பிடித்த 2 வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த ராம் (வயது 24) மற்றும் கோபால் குமார் (24) என்பது தெரியவந்தது. தப்பி ஓடியது ஜெகதீஷ் பட்டேல் மற்றும் பரத் பட்டேல் என்பதும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராம் மற்றும் கோபால்குமாரை கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய ஜெகதீஸ் பட்டேல், பரத் பட்டேல் ஆகியோரை தேடி வருகின்றனர். இதேபோன்று சூலூரில் 50 கிலோ குட்கா பதுக்கி வைத்து விற்ற சூலூரை சேர்ந்த முத்துபாண்டி (41), ஷியாம் சுந்தர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×